ஞாயிறு, 4 ஜூலை, 2010

புதுகவிதை

தகுதி

களைபரிப்பவன் கல்விக்கு .......
ஆசை படுகிறான் -ஆனால் ......
கறப்பதற்கு அவனிடம் ..........
காசு இல்லையே ....
காசு இருப்பவன் -கற்க ...
மறுக்கிறான் அவனுக்கு ......
கல்வி கிடைத்தும் .....
படிப்பு மண்டையில் ஏறாததால் ......


சேறு மிதிப்பவனுக்கு ....
சோறு திங்க ஆசை .......
சோறு தின்பவணுக்கோ ......
சேற்றை கண்டால் அலர்ஜி ......

மாடு மேய்பவனும் டிகிரி படிக்கிறான் ....
டிகிரி படித்தவனும் மாடு மேய்கிறான் ......
உளைபவன் ஊரார் ஆகிறான் .......
ஊரானோ அவன் உழைப்பை -சுரண்டி ....
ஊருக்கே தலைவனாகிறான் ......

படிக்காதவனோ பாராளுமன்ற தலைவனாகிறான் ......
படித்தவனோ அவனுக்கு ......
உதவியாளராய் பணி புரிகிறான் .....

மருத்துவத்திற்கு மதிப்பு அதிகம்தான் ....
ஆனால் -அதை விட பெருகும் .....
வியாதிகள் அதிகமோ அதிகம் ...

டாக்டருக்கும் இன்ஜீனியர்களுக்கும் .....
போட்டிகள் ஏராளம் பெண் -கொடுப்பதற்கு ...
நான் நீ என்று வரிசையில் .......
ஆனால் -அந்த பெண் அங்கு .....
பொருத்து வாழும் நிலை உளதா ....
என -அறியாத் பெற்றோர்கள் எத்தனையோ

*****************************************************************
விவசாயி

நெல் விதைத்தவன் கதிரறுக்க ....
மழைக்காக காத்திருப்பதும் ....
ஆறு மாதத்திற்கு ஓரு முறை ...
நெல் விதைத்து மழைகாக ஏங்கி தவிப்பதும் ....
அதிக மழை வந்தால் .......
வயர்காடே மூழ்கி விட்டால் ....
என்ன ஆகுமோ பயிர்களின் ..
கதி என கலங்கி தவிப்பதும்

கதிர் முற்றிய வயற்காட்டில் ......
பூச்சிகளும் பறவைகளும் ....
பன்றிகளும் யானைகளும் .....
சேதமாக்காமல் காத்து ..-காவலிருந்து ....
அறுத்த கதிர்களை போரடித்து .....
நெல் மணிகளை மூட்டை கட்டி .....
வேகவைத்து ஆலைகளில் கொடுத்து .....
அரிசியாக மாற்றி அவற்றை -விற்று ....
பணம் பார்த்து வீடுவந்து .....
ஒருவேளை சோறு உண்பதற்குள் .....
அப்பப்ப விவசாயி படும் .....
பாடு போதுமடா சாமி
****************************

கருத்துகள் இல்லை: