வெள்ளி, 2 ஜூலை, 2010

புதுகவிதை

நான் செத்து போனேனடி பெண்ணே

கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உண் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!

எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!

நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????

மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!

புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!

என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????

கடைசிவரை உண்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????

செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே

***************************************************************



விண்ணுக்குள் மண்ணுக்குள்

உன் -புன்னகையில்
முத்து பல் வரிசை கண்டு
நட்சத்திரங்களும் வெட்கத்தால்
ஒளிந்து கொண்டனவோ விண்ணுக்குள் !!!!!!!!!!!

ஜொலிகின்ற உன் முகம் கண்டு
இன்னொரு நிலவு எப்படி வந்ததென்று
நிலவும் ஒளிந்து கொண்டதோ விண்ணுக்குள் !!!!!!!!!!!!

மண்ணுக்குள்
உன் -உருவம் பூமியில் இருக்க
என் -நினைவை தாங்கிய
உன் -நிழலோ மண்ணுக்குள்ளோ ???????????????

உன் -நித்திரையின் போதோ
என் -நினைவே உன் நெஞ்சுக்குள்
அலைபாயும் உன் நினைவோ
கண்ணீராய் மண்ணுக்குள்ளோ ????????????????

காதலிக்கும் இந்த நிமிடம் வரை
நம்- காதல் உண்மை என்பது சத்தியவாக்கு
நாம் -ஒன்றாக சேர்கிறோமோ -இல்லை
பிரிகிரோமோ யாருக்கு தெரியும் ????????
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம் -இது

கவலைபடாதே நாம் பிரிந்தாலும்
பாதகம் இல்லை இருவருக்கும்
ஏன் என்றால் இது
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே தெரியும் என்பதால்
டேக் இட் ஈசி பெண்னே

**********************************************


காந்தி (அடி)கள்


காந்திக்கு அடிகள் பல
சுதந்திரம் பெற்றுதந்தவர்களிடம்
அவருக்கு மரியாதையை என்று
பல முறைகளில்

பணத்தில் அச்சிட்டு
எசில் தொட்டு எண்ணுவதால்
தபால் தலையாக போட்டு
முத்திரை என்று (அடி)

சிலை வைக்கிறோம் என்று
பறவைகளுக்கு எச்சமிடும்
கழிப்பிடம் ஆகுவதால் -அடி

சுததிரம்பெற்று தந்தவரை
வழிதோன்றல்கள் அறிய
புத்தகத்தில் போடுதலென்று
அச்சு (அடி)தல் என்று

**********************************************


முத்தம்

உன் தோள் பற்றி -நான்
உன் -நெற்றியில் பதித்த முத்தமோ
என் -அன்பின் மழையடா கண்னே

நீ-என் கழுத்தில் உன்
கைகளை மாலையாக்கி
என் -கன்னத்தில் பதித்த முத்தமோ
ஆழிப் பேர்அலையட -என்
செல்ல பேறான்டியே
உன் முத்தம் எனக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!
******************************************************

ஜில்லென்ற மனதிலே

ஜில்லென்ற மனதிலே
கொல்லென்ற சிரிப்புடன்
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியினால்
என் -மனதை சல்லடையாய் சிதைத்து
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

அன்பென்ற பாச மழையிலே
அலைகடலாய் என் உயிரை
நீ-அடித்து - மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

உன் -பார்வை பேசும் மொழியினால்
என் -உணர்வுகளை கொன்று
நீ -உன்னுடன் எடுத்தது மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

கனவென்ற நிழலில் இப்படி
உணர்விழந்து ஜடமாய்
உன் -நிணைவாய் இருக்கா நானும்
நீ - எனை மறந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

விழிப்பு என்று வந்தால்
பார்க்கும் பொருளில் எல்லாம்
நீ -வந்து மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

எதை பார்த்து நின்றாலும்
உன் முகம் என சிரிப்பதாலே
எனை பித்தன் என சொல்கின்றனர்

பலர் எனை பார்த்து கொல்என சிரித்தாலும்
அப்படி -சிரிக்கின்ற பிம்பம்மெலாம்
என் -மனதில் ஜில்லென்று தோன்றி
நீ -என மாறி மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

( இதை பாட்டாகவும் படிக்கலாம் )
********************************************************

கொக்கர கொக்கரக்கோ சேவலே

வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே

பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்

என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்

அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்

எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம

பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க

எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே

வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே

பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்

என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்

அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்

எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம

பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க

எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே !!!!!!!!!!!!!!!!!!!!
****************************************************

காத்திருப்பேன் உம் அழைபேசி அழைபிர்காக

அயல்நாட்டில் அயர்ந்து உறங்கும் -அன்பரே
இங்கு -பொழுது புலர்ந்து
விடிவெள்ளியும் முளைத்துவிட்டது
முகம் பார்க்க முடியாத பிரிவோ -நமக்கு
என்று -பிறக்குமோ நம் வாழ்வில் விடிவெள்ளி

நீர் -ஓரு நாட்டிலும்
நான் இங்கும் அல்லல்படும்
அவலமும் என்று தீருமோ ?
உறக்கம் என்பது நம்மை -மீறி
நம்மை தீண்டும் போது
நீர் என்னுடன் கனவிலும்
நான் உம்முடன் கனவிலும்
குடும்பம் நடத்தும் குறைதீரும்
நாள் என்று வருமோ ?

குடும்பத்திற்காக பொருள் தேட -நீர்
அயல்நாடு சென்றாலும்
குடும்பமாக இல்லாது -இங்கு
நான் தவிக்கும் தவிப்பை அறிவீரோ ?

இந்த ஓரு நல்ல நாளும் -நீர்
இன்றி எனக்கு சிறப்பில்லை
எபோது இங்கு வருவீரோ
என்னுடன் சேர்ந்து இல்லறம் நடதுவீரோ /?

மனம் முடிந்த ஆறு மாதத்தில்
ஓரு வருடத்தில் வருகிறேன் -என்று
என்னை பிரிந்து சென்ட்ரீறே
வருடம் இரண்டு ஓடிவிட்டதே
என் -முகம் உம் மனதில்
நிழலாக மாறும் முன்
இங்கு வந்து விடுங்கள் அன்பரே

அந்த ஆறு மாதத்தில் -நான்
உம்முடன் பகிர்ந்து கொண்ட
சந்தோசங்களையும் இன்பங்களையுமே
இப்போதும் வாழ்க்கையாக எண்ணி
வாழ்ந்து வருகிறேன் கணவுகளுடன்

போதுமென்ற மனமே பொன் செய்யும்
பொருத்தது போதுமென்று
என் -மனம் இடித்துறைகிறது
உடனே வந்து விடுங்கள் அன்பரே
பொருள் தேடும் நோக்கை
நம் -நாட்டிலே செய்து கொள்வீராம்

இன்று நம் திருமண நாள்
இனிதே கொண்டாட வேண்டிய நாள்
நலம் விசாரிக்க முடியாது
நீர் உறங்கும் நேரமிது
நீர் விழித்ததும் என் போல்
இன் நாளை உணர்வீரோ தாமாக ?
என்னுடன் அலைபேசியில்
பேசி பேசி மகிழ்வீரோ ?
தெரியவில்லை எனக்கு

எனை மறந்து நான் உறங்கும்வரை
காத்திருப்பேன் கண்ணயராமல்
உம் அலைபேசியின் அழைபிர்க்காக
**************************************
யாரை நானும் குற்றம் சொல்ல ?

என் -மனதை நீ ....
அறிந்து கொள்ள -நான் ..
புத்தகமும் அல்ல ..

என் *-நினைவுகளை நீ ..
தெரிந்து கொள்ள -நான் ..
நாவலும் அல்ல ..

என் -குணங்களை நீ ..
புரிந்து கொள்ள -நான் ..
புதுமை பெண்ணும் அல்ல ....

என் -புண்ணகையின் அர்த்தத்தை நீ ...
புரிந்து கொள்ள நான் ..
புதுமை பூவும் இல்லை .....

என் -உருவத்தை நீ ..
உற்று நோக்க நான் ...
உயிரும் அல்ல ...

எனை கட்டி தழுவ நீ ...
நான் உடலும் அல்ல ..

பின் -ஏனோ இப்படி நீ ...
என்னை உறுத்து பார்க்கிறாயோ ...

உண் -பார்வையில் என் -ஓவியமும் ..
குன்றுகிறதே வெட்கத்தால் ...

சீ -உண்னை சொல்லி குற்றமில்லை ....
என்னை வரைந்த ஓவியனை சொல்லணும் ...

எனை வரைந்த ஓவியனே -நீ ....
காலை ரசனை என்ற பெயரில் ...
அலங்கோலமாய் என்னை -நீ ...
கல்லில் வரைந்து இருந்தாலும் ....

துஷ்ட பார்வைகளிலே -நான் ...
கற்பிழந்து போவானோ ?
என -அட்சம் வருகிறது எனக்கு..


ஓவியம் என்றாலும் ..
நானும் பெண்தானே...
எனக்கு முழு ஆடை போட்டு ...
என் -உடலை மறைத்து விடு ஓவியனே...
இல்லாவிட்டால் உண் ஓவியம் செத்துவிடும் ...
நான் விடும் கண்ணீரால்

*****************************************************
மரணம்
எளிதில் மரணிக்க வேண்டு மென்றால் ......
ஓரு துளி விசமும் ...
ஓரு முழம் கயிறும் இருந்தால் போதும் ...
உடனே நிமதியான மரணம் கிடைக்கும் ....

அதே ஒரு முழம் மஞ்சள் கயிற்றை...
பெண்ணின் கழுத்தில் தாலியாக கட்டினால் ....
துளி துளியாய் விச வார்த்தைகளை .....
தினம் தினம் அனுபவித்து .....
நீண்ட இடைவெளிக்கு பின் மரணிக்கலாம்

**********************************************
ஆதி

ஈரைந்து மாதம்
தன் கருவறையில்
தன் உயிரினில் - ஓர்
உயிராய் சுமந்த தாய்
ஓரு நாளும் உன்னை
மனதார எப்போதும் .
வெருதிட மாட்டாள்

சீராட்டி பாராட்டி பார்த்து
பார்த்து வளர்த்த- நீ
கட்டிளம் காளை வயதில்
விபத்தால் கால் முறிந்து
நடக்க முடியாது போனாலும்

உண்னை -தன் விழியில் வைத்து
இமையாய் காக்கின்றாளே
சிறு குழந்தை போல் இப்போதும்

ஊராரும் குடும்பத்தாரும்
சண்டையிட்டு கேலி செய்தாலும்
உனக்காகவே வாதாடுகிரளே

உண் - தந்தையும் இன்றி
தனி ஓரு பெண்ணாய்
உண்னை போற்றி காகின்ராளே
அவளுக்காக நீ பொருத்து கொள்

தன்னால் சண்டை என்று
சாக நீயும் துணிவது
கோழையின் செயலப்பா

நாமும் வாழ முடியும் என்று
தாய்க்கு இருக்கும் நம்பிக்கையை
நீ - கெடுத்து விடாதாதே

நீயின்றி வாழ -உலகில் அவளுக்கு
இனி -வேறு என்ன இருக்கிறது ?

மரணம்தான் நிம்மதி என்றால்
தவிக்க விடாது -அவளையும்
உன்னுடன் அழைத்து செல் -நீயே

உற்றாரும் உறவினரும்
ஊராரும் ஒரே அடியாக
பேசி தீர்த்திடுவார்கள்
ஆதியின் குடும்பம் முடிந்த தென்று

*******************************************************
ஆசை ஆசை

காக்கை குருவியாக பிறந்திடனும் .....
அடிமையில்லா வாழ்வு வாழ்ந்திடனும் .....
சுதந்திரமாய் சுற்றி பறந்திடணும் ......

போட்டியில்ல வாழ்வு வேண்டும் ....
பொறாமையில்ல அந்நிலைமை வேண்டும் ....
கூடி வாழும் கூடு வேண்டும் .....

பிற பறவையின் குஞ்சுகளையும் ....
தன்குட்டியாய் நினைத்து ....
உணவு கொடுக்கும் அன்பு வேண்டும் ....
விரைவில் சாகும் அப் பறவைகள்.....
போல் - பிறப்பு வேண்டும் என்ற ....
ஆசை ஆசை எனக்கு எபோதும் ஆசை ...
கொஞ்சும் மொழி பேசும் .....
பட்சை கிளியாய் பிறந்து .....
பாடி திரிய ஆசை ..ஆசை ....

இசைகென்று ஓரு பறவை .....
கருங்குயிலாய் பிறந்து ....
இசைத்திட ஆசை ஆசை ....

தத்தி தத்தி செல்லும் .....
அன்னநடை வாத்தாய் பிறந்து ....
அசைந்து அசைந்து செல்ல ஆசை ஆசை ....

கொக்காய் பிறந்து ...
ஒற்றை காலில் நின்று ....
தவம் புரிந்திடவும் ஆசை ஆசை ....

பட்டு தோகை எனும் ....
வண்ண இறகுகளை விறித்து .....
வானம் பார்த்து நடனமாடும் .......
மயிலாய் பிறந்து மகிழ்ந்திடவும் ஆசை ஆசை



*********************************************

கருத்துகள் இல்லை: