வெள்ளி, 2 ஜூலை, 2010

புதுகவிதை

தாய்மை

என் -கருவறையில் உதித்த ......
பொன்முத்து மகளே -நீ ....
பச்சிளம் குழந்தையில் ......
பாலுண்டு உறங்கும் அழகில் ....
பூரித்தது -என் தாய்மை உள்ளம் ......

மூன்று மாதத்தில் -நீ ....
முகம் பார்த்து -சிரித்ததும் .....
உட்சிமுதல் பதம்வரை ......
உள்ளம் குளிர்ந்து .....
சந்தோஷத்தில் மயங்கியது -.....
என் -தாய்மை உள்ளம் .....

நீ-குப்புற கவிழ்ந்து அழுததும் .....
என் -நெஞ்சம் துடித்தது -இருந்தாலும் ...
நீ -தவழ்ந்து என்னை எட்டி பிடிக்கும் ...
அழகில் மயங்கியது -என் ......
தாய்மை உள்ளம் ......

நீ -எழுந்து நின்று ... .....
எட்டு வைத்து நடக்க முயன்றதும் ......
தடுமாறி விழுந்ததும் -என் ....
உள்ளம் துடித்தாலும் .....
நடை வண்டியில் நடை பழகி -நீ .....
ஓடிவந்து காலை பிடிக்கும் ....
அழகில் மயங்கியது -என் .....
தாய்மை உள்ளம் ......

ம் , மா .இப் , ப , த் ,தை ,தா ,தா ....
என -எழுத்தை உட்சரித்து பழகி .....
முதன் முதலில் அம்மா என்று .....
நீ -சொன்ன வாக்கியம் இன்றும் ....
நீங்கா -நிணைவாய் என் நிணைவில் ....
அப்போது சந்தோசித்தது -என் .....
தாய்மை உள்ளம் ....


நீ -திருமணம் செய்து போனபோது ......
என் -உயிராய் இருந்த -நீ .......
இனி இன்னொரு வீட்டில் வசிக்க போகிறாய் ....
என்று வேதனை இருந்தாலும் .....
என் கண்களில் வழிந்த ,,.....
ஆனந்த கண்ணீரில் பூரித்தது ....
என் -தாய்மை உள்ளம் ....

நீயும் -தாய் ஆகினாய் என்றறிந்ததும் ....
புல்லரித்து பூரித்தது என் -உள்ளம் ....
என் -பொன்முத்துவிற்கும் ஒரு ....
குட்டி முத்து பிறக்க போகிரதெண்று .......
நீ -உன் குழந்தையை பிரசவித்து .........
என் -கையில் கொடுத்த போது .......
அப்போது வந்த கண்ணீருக்கு ......
எல்லை என்பது ஏது ?
உண்மையில் சந்தோஷத்தில் .....
திளைத்த என் மனம் ......
முழுமை அடைந்தது .....
என் -தாய்மை இன்றுதான் என்று ....
என் -செல்ல பொன்முத்து பெண்னே ....

**************************************************************
யாதெனில்


அன்பென்பது யாதெனில் .....
அறிந்தோர் அறியாதோர் ......
உள்ளத்தில் இடம் பெறுவது .......

பன்பென்பது யாதெனில் .....
பட்டினி கிடந்தாலும் .-மற்றவர் ....
பாராட்டில் தவறாது ....
பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிப்பது .....

பாசம்மென்பது யாதெனில் ...............
உற்றவர்களுக்காக உயிரையும் தருவது .....

நேசம்மென்பது யாதெனில் ........
நம்மை பிடிகாதவரையும் ...
நமக்கு பிடித்தால் நேசிப்பது

கடல்
கடலோடு கவிபாடி .....
காற்றோடு நீ குளித்து .....
கண்டதையும் பார்த்ததாலோ ....
கண் வீங்கி படுத்தாயோ ....
எளுந்திறிக்க முடியலையோ ...

கட்டினவள் கண்டுகலையோ .....
நண்பனே போதுமென்று .....
நடுவீட்டில் அவளை -நீ ...
விட்டு விட்டு போனதாலே ......
கழுதை நீ எப்படியோ கிட என்று ......

மகனே என் மனம் ஆரலையே .....
பட்டினியாய் நீ கிடபதால் .....
பாவி அவள் போகட்டும் ....
நான் தருகிறேன் சாப்பாடு .......
தட்டு நிறைய நீ சாப்பிட்டு ......
அசராம படுத்து கிட .....
பாசகார பவியவ .....
பட்டினியா கிடக்கட்டும் ....

கோபமது போனதுவும் ....
சாப்பிடதான் கூபிடுவா ....
சாதுவாகா நீ சென்று .....
சாப்பிட்டு சமாதனம் படுத்திவிடு
***************************************************
கடல்

கடலோடு கவிபாடி .....
காற்றோடு நீ குளித்து .....
கண்டதையும் பார்த்ததாலோ ....
கண் வீங்கி படுத்தாயோ ....
எளுந்திறிக்க முடியலையோ ...

கட்டினவள் கண்டுகலையோ .....
நண்பனே போதுமென்று .....
நடுவீட்டில் அவளை -நீ ...
விட்டு விட்டு போனதாலே ......
கழுதை நீ எப்படியோ கிட என்று ......

மகனே என் மனம் ஆரலையே .....
பட்டினியாய் நீ கிடபதால் .....
பாவி அவள் போகட்டும் ....
நான் தருகிறேன் சாப்பாடு .......
தட்டு நிறைய நீ சாப்பிட்டு ......
அசராம படுத்து கிட .....
பாசகார பவியவ .....
பட்டினியா கிடக்கட்டும் ....

கோபமது போனதுவும் ....
சாப்பிடதான் கூபிடுவா ....
சாதுவாகா நீ சென்று .....
சாப்பிட்டு சமாதனம் படுத்திவிடு ....

மழைக்கு தெரியுமா ?
குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......

ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......

நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....

எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....

அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......

எத்தனையோபேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......
*********************************************************
பிட்சைகாரியா நீங்கள் ?

உட்சி வெயிலில் தலையில் ...
முக்காடு அணிந்து நீங்கள் .....
கையேந்தி நீங்கள் பிட்சை கேட்பதை .....
பார்த்ததும் இதயத்தில் லேசாக ஒரு -வலி .....
என் -கண்களில் உருண்டோடும் கண்ணீர் துளிகள் .....

பின்னோக்கிய நினைவுகளில் -நீங்கள் ......
கவர்மென்ட் மாப்பிளையை மணந்து .....
கைநிறைய காசுடன் காரில் .....
வலம் வந்த நீங்கள் .....
பெரியயானை நடுயானை சின்னயானை .......
அவர்களுக்கு செல்லமாய் ஒரு தங்கை -என ....
நான்கு குழந்தைகளுக்கு தாய் -நீங்கள் ....

ஆசையாய் மனம் முடித்த -அன்பு ....
மகளோ ஆறே மாதத்தில் புக்காத்து ......
கொடுமை தாங்காது தீகிரையானாள் ....

மனம் உடைந்தது உம் குடும்பம் .....
பணியில் இருந்து ரிட்டைடர் ஆனா உம் ...
கணவறோமகளின் இறப்பால் -மனம் -......
நொந்து நோய்க்கு ஆளாநாரே......

பின் -மூன்று மகன்களுக்கும் ......
மணம் முடித்து வைத்ததும் ....
கடமை முடிந்தது என.......
அவர் காலனை அடைந்தாரே .......

மீண்டும் கொடுமை வறுமையில் ....
வாடும் நிலை குடும்பத்திற்கு ....
மகன்கள் தனி தனியாக பிரிந்துவிட ......
யாருடனும் இருக்க உங்களுக்கு மனம் வரவில்லை ...
மறுமகள்களை அனுசரிக்கும் ...
மனமும் உங்களுக்கு இல்லை ....
பெண்ககள் காப்பகத்தில் சேர்தாலோ ...
யாருக்கும் சேவை செய்யும் ....
அன்பு மனமோ உங்களுக்கு இல்லை

கஷ்டபடாமல் இஷ்டம்போல் -இருக்க ...
பிட்சை எடுக்க முடிவு செய்து .....
சொல்லாமல் போய்விட்டீர்கள் நீங்கள் ......

பெரிய குடும்பத்தில் பிறந்த ......
பதினெட்டு பெண்களில் நீங்கள் மட்டும் ...
பிட்சை எடுபது தவறு என்று .....
கண்டுபிடித்து திட்டினால் உங்களை .....
ஆதரிக்க தயாராக இருந்தும் .....
உறவுகளை தூக்கி எறிந்து விட்டு .....


அம்மன் கோவிலில் பிட்சை எடுத்தால் ....
தினமும் கறி சாதம் ....
கை நிறைய காசு என்கிறீர்கள் ....

உங்கள் பிறந்தகத்திற்கும் புகுந்தகத்திற்கும் ....
ஏற்பட்ட அவமானம் புரியவில்லையா ....

பிட்சை எடுப்பது யாராக இருக்கணும் .....
ஆதரவு இல்லாது உழைக்க .....
கை கால் கண் உதவாதவர்கள்.. ஈடுக்கலாம் ...
உங்களுக்கு என்ன குறை ,,,,,,

நன்றாகதானே இருகிறீர்கள் .......
கோவிலின் எதிரில் அறுபதை தாண்டிய .....
மூன்று பாட்டிகள் இட்லி வியாபாரம் செய்து .....
உழைத்து வாழ்வது -உங்கள் ......
புத்திக்கு உரைகலையோ ......

ஊரிலோ மூன்று மகன்கள் .....
உறவுகள் இருந்தும் உங்களை ....
பிட்சை எடுக்க விட்டதாக .....
எல்லோருக்கும் கெட்ட பெயர் .....

உழைக்க கஷ்டப்பட்டு கையேன்தும் -நீங்கள் ......
வாழ்வதை விட சாவதே மேல் ......
என்றோ யாருக்கும் தெரியாமல் ....
எங்கோ அனாதையாக நீங்கள் ....
இறந்து கிடந்ததாக கேள்வி படகூடாது ...
.....
ஆனாதையாய் கிடந்தீர்கள் என அறிந்தால் ......
என் மனம் தாங்காது ...
நம் போல் பிறந்த ரத்த துளிக்கு ....
இதனை கேவலமான் மரணமா என்று
************************************************************

நட்பு

உண்மை நட்பென்பது ......
கோபம் மறந்து வந்தாலும் ....
கோபத்துடன் பிரிந்தாலும் ....
தானாக சென்று சேர்வது ....

இல்லையோ கோபம் மறந்து வந்த நட்பை ...
உதாசீன படுத்துவதும் ....
வேதனையான நட்பு தான் .......

உனக்கு இருக்கும் ரோசம் ....
எனகும் உண்டு எப்போதும் ....
உண்மை நட்பானவன் எப்போதும் ....
என்றுரைத்த வார்த்தை ....
இன்று காற்றோடு கரைந்ததோ ....
இனி -எப்போதும் நீயாக வராது ....
உனக்கு தொல்லை தராது ....
இந்த உண்மை நட்பு தோழமையே**********
**************************************************
வணக்கம்

தினமும் நீ உரைப்பாய் ....
இரவு வணக்கத்தை ....
சந்தோசமாக நான் இருந்தாலும் .....
இல்லாது போனாலும் ....
இன்று காத்திருந்தும் சொல்லவில்லை .....
இரவு வணக்கத்தை ....
மனம் வருந்தி சொல்லுகிறேன் ....
இந்த இரவு நல்ல இரவாக ....
சந்தோசமாக அமையட்டும் ....
இரவு வணக்கங்கள் பல பல -என்று
*****************************************************
கோலம்

அவள் போட்ட .....
வளைவுநெளிவு கோலங்களை -விட .....
அவள் -வளைந்து நெளிந்து .....
போட்ட விதம் உன் -மனத்தில் ......
ஆறா வடுவாய் படிந்து விட்டதோ ?

பால் பாக்கெட் கலக்ட் செய்யும் ......
சாக்கில் நீ தினமும் -அவளுக்கு .....
காவல் காத்தது அவள் மனதில் ....
அழியாத கோலமாய் பதிந்து விட்டதோ ?.....

உம் -இருவரின் போக்கையும் கண்கானித்தால் .....
இரு வீட்டு சம்மதத்தால் ......
உங்கள் கைகளும் இணைக்க பட்டதோ ?

நீர -இருவரும் இணைந்து போடும் ....
பாம்பு கோலத்தால் -இனி ....
குட்டி கோலங்களும் உதயமாகுமோ
****************************************
நட்பை தேடும் நண்பரின் குரல்

குழந்தை பருவத்தில் .....
சிரித்து விளையாட -கிடைத்தது .....
தெருவிலும் உறவிலும் பல நட்புகள் .......

பள்ளியில் பேசி பகிரவும் .......
விளையாட போட்டிபோட -என ......
கிடைத்தது பல நட்புகள் .....

எதிர் காலதிட்டங்களை ......
பகிர்ந்து கொள்ளவும் .....
பருவத்தையும் உணர்சிகளையும் ....
கொட்டி தீர்க்கவும் -கிடைத்தது ....
பல நட்புகள் கல்லூரியில் ......

ஆர்குட்டில் வரும் நட்புகளோ ......
தினமும் வணக்கம் நலமா ?
என்ற விசாரிப்புகளோடு சரி .....
மீறி எண்ணங்களை பகிரலாம் என்றால் .....
மனம் வரவில்லை எனக்கோ ......
ஏன் என்றாலோ ஊர் வேறு ....
பேர் வேறக் ஆள்வேறக் -மாற்றி ......
மாற்றி இரண்டு மூன்று பெயரில் ......
ஒருவரே நண்பராக உலா வருவதாலும் ...
புது புது நண்பர்களை மாற்றுவதாலும் .....
இது ஒரு மாயை என தோன்றுகிறது - எனக்கு ....

நட்பு என்பது தானாக வருவது .....
தானாக கேட்பது .....
தானாக உதவுவது .....
தானாக அறிவுறுத்தி திருத்துவது .....

பெற்றோர்களிடமும் உடன் பிறந்தவர்களிடமும் ....
பகிர முடியாத விசயங்களை ......
சொல்ல முடியாத இன்ப துன்பங்களை ....
மனம் விட்டு பகிர .....
உண்மையான நட்பு வேண்டும் எனக்கு ......
அந்தந்த பருவத்தில் வந்த நட்புக்கள் ....
அப்போதப்போதா மறைந்து விட்டது .....
இறைவா என் இடுகாடு பயணம் ....
தொடரும் முன்பாவது எனக்கொரு .....
உண்மை நட்பை தரவேண்டும் எனக்கு -நீ ...
****************************************************
மனதில் உறுதி வேண்டும்

மனதிலுறுதி வேண்டும் ......
அன்பில் நிலைமை வேண்டும் .............
நிணைவினில் இனிமை வேண்டும் ......
நெருங்கிய நிணைவுகள் நிலைத்திட வேண்டும் .......

கணவுகள் நடந்திடல் வேண்டும் ......
அதை -விரைவினில் முடித்திடும் திறம் வேண்டும் ....
நிலையான -பொருளும் சந்தோசமும் வேண்டும் ....

பெருமை நிலைத்திட வாழ்ந்திடல் வேண்டும் .....
அன்பினில் மடமையின்மை வேண்டும் .....
அதை காட்டுவதில் உறுதி வேண்டும் ......

ஆண் பெண் இருபாலருக்கும்
வாழ்கையில் விடுதலை வேண்டும் .....
வாழ்நிலையில் சந்தோசம் வேண்டும் .......

மண்ணின் பெருமை மறந்திடா மனம் வேண்டும் .....
வானம் தொடும் பெரும் புகழை அடைத்திட வேண்டும் ........
உண்மை எனும் பெருநிலை காத்து உயர்ந்திடல் வேண்டும்
**********************************************
தென்றலே

நீ -லேசாக அறைந்தாலும் .....
நீ -செல்லமாக அறைந்தாலும் ...........
நீ -கோபமாக முகத்தில் அறைந்தாலும் .
நீ -ஆவேசமாக தள்ளினாலும் ...........
எப்போதும் உன்மீது மட்டும் ...............
எனக்கு கோபமே வராது தென்றலே
****************************************
மழைக்கு தெரியுமா ?

குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......

ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......

நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....

எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....

அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......

எத்தனையோபேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......
******************************************

மருந்து

காயம் பட்ட உன் -இதயத்திற்கு ...
கண்ணீர் மட்டும் மருந்து -இல்லை .....

அன்பை பொழியும் உறவுகளும் ....
உன் -நலனை விரும்பும் .....
நட்புகளின் உதவும் அன்பும் .....
உன் கண்ணீருக்கு மருந்துதான் ......

பெண்ணை படைத்தவன் இவ்வுலகில் .....
உன்னை படைத்தது உன் நன்மைகே ......

அன்பு எனும் தெய்வநிலை -உணற்வும் .....
பாசம் நேசம் எனும் ......
கட்டுக்குள் எதையும் கட்டுவிக்கும் ....
உன்னத நிலையை -நீ ....

அம்மா மணைவி சகோதரி குழந்தைகள் .....
ஈன -உணரவே இறைவன் ......
கண்களோடு உன்னை படைதான் ......

கண்ணனுக்கு தெரிந்தால் ....
இறைவனுக்கு மதிப்பு இல்லை ....
பக்தி எனும் தெய்வ நிலையில் ......
மனதிலே நீ இறைவனை அறியலாம் ....

இறைவனை சேற நிணைத்தால் ........
உன் - மனதிலே அவனை தேடு தோழா .....

***************************************************************************
அச்சமில்லை அச்சமில்லை

துன்பமெனும் உச்சியில் இருந்து ..........
வீழும் நிலை வந்திடின் .......
குடும்பமெனும் உறவு வந்து .......
காத்து அரவணைதிடின்.......
அச்சமில்லை அச்சமில்லை .......
அச்சமென்ப தில்லையே.......

இல்ல மெணும் .கோவிலினில் ......
வறுமை எனும் பேய்புகின் .......
உயிரின்பாதி வாழ்வின்பாதி ......
துணை கொடுக்கும் தைரியத்தில் ....
வாழ்க்கை எனும் கடலில் நீந்திட ......
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.......


இன்பம் துன்பம் எது வந்தாலும் .....
பங்கெடுத்து பகிர்ந்திடும் ........
நட்பு எனும் நல்லிதயங்கள் .........
நமக்கு வாய்த்த போதிலும் ........
.அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.....
...
வாழ்நிலையில் கடைநிலை என .....
அறிந்து நின்ற போதிலும் .....
கண் இமைபோல் காத்திடும் ......
கண்மணிகளை ஈன்றிருதால் ........
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே........

பெண்மகவோ ஆண்மகவோ ...
பெற்றது எதுவாகின் ....
உழைப்பு படிப்பு எனும் .....
பெருநிலையை தந்து விட்டால் .....
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே....
*************************************************

வாழ்க்கை தத்துவம்


கர்ப்ப கிரகமெனும்கருவறையில் -உதித்து ...
பிரசவமென்று பூ உலகை தொட்டு .............
வாழ்க்கை எனும் சுழற்சியில் சுழன்று ............
இறபெனும் கடைநிலை எய்தி ..........
கல்லறையில் தூங்கி .........
பூமிதாயுடன் சங்கமிபதே.............
மனித வாழ்கையின் தத்துவம் .........

கல்லறையில் உறங்கும் கருமாக்கள் .......
நல்லவையோ தீயவையோ .......
இறபெனும் நிலைக்கு பின் ....
யாவும் இறைவனாக நிணைய்து .....
தொழபடுவதே வாழ்கையின் தத்துவமோ .......

இருபவனோ இல்லாதவனோ .........
வாழும் நிலையில் உயர்வு தாழ்வு -இருந்தாலும் .......
அறிந்தவனோ அறியாதவனோ ........
மரணத்திற்கு பின் செல்லுவதோ ......
இடுகாடு எனும் பொது -இடம் ......
பேதாங்கள் பந்ததாகள் இன்றி .......
இருக்கும் கிடைக்கும் இடங்களில் .....
வித்தியாசமின்றி அடக்கமாவதும் எறிக்படுவதும் .....
மனித வாழ்கையின் தத்துவமோ ......




எரிபதிலும் புதைபதிலும் .....
உயர்வு தாழ்வு பேதம் இருந்தாலும் .......
புதைபதற்கோ எல்லோருக்கும் .........
இரண்ட்டிக்கு ஆறடி நிலம்தான் ...
எரிபதற்கோ ஒரு தீ குச்சிதான் ........
இதுவும் மனித வாழ்க்கை தத்துவமே
************************************************
அழகு ஏது ?

பிரகாசிக்கும் சூரியன் -இல்லாது ..............
பகலுக்கு ஏது அழகு ?............

ஜொலிக்கும் நிலவு -இல்லாது ...............
இரவுக்கு ஏது அழகு ?.........

கொஞ்சும் மழலை -இல்லாது .............
வீட்டுக்கு ஏது அழகு .?......

அன்பு என்பது -இல்லாது ............
உயிர்களுக்கு ஏது அழகு .?.......

உயிரில்பதி. உணர்வில்பாதி -இல்லாது ..........
இல்லறத்திற்கு ஏது அழகு ?...........

நீயே என் சுவாசமாய் -இல்லாது ........
என் உயிருக்கு ஏது அழகு? ........
************************************************
தீ

பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............

பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........

கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............

வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........

பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........

அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........

காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............

நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............

இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........

சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........

மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........

அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது
******************************************
ருசிக்க

வெற்றி எனும் இனிப்பை -ருசிக்க ..............
வேதனை எனும் கசப்பின் ........................
எல்லை தொட்டு வரவீண்டும் ............

அன்பு எனும் இனிப்பை -ருசிக்க ..............
நேசம் எனும் நெகிழ்வின் ..............
எல்லை தொட்டு வர வேண்டும் ..........

காதல் எனும் இனிப்பை -ருசிக்க ...........
வேதனை வெற்றி அன்பு நேசம் எனும் .......
எல்லை தொட்டு வரவேண்டும் .
***********************************************
நட்பு (பூ )

ஆயிரம் பூக்கள் .......
விடியலில் மலர்ந்தாலும் ...................
அந்தியில் உதிர்ந்து விடும் .......
வாடி மீண்டும் செழிக்காத வகையில் ..............
ஆனால் -உதிராத பிரியாத வாடினாலும் ......
மீண்டும் உயிர் தெழும்......
ஒரே பூ ."நட்பு ".........

முகத்தை நோக்கி ............
புனகையில் தொடங்கி .....
அகத்தில் ஆராய்ந்து .............
கண்ணீரில் கலந்து ......
சந்தோஷத்தில் குதுகலித்து .....
துக்கத்தை பங்கிட்டு .......
சுமையை தாங்கி ........
தோல் கொடுக்கும் .......
தோழமையே "நட்பு "எனும் (பூ )
*****************************************


Sent at 8:25 AM on Saturday

கருத்துகள் இல்லை: