வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

ஆடம்பரம்

எட்டி நடை போட்டு நடந்த காலம்
மலைஏறி போயாச்சி
காசிருந்தும் பணமிருந்தும்
கால்நடை பயணத்தால்
காசு மிட்சம் எணும் காலம் போச்சி
இதனாலோ மனிதர்களுக்கு
உடல் ஆரோக்கியம் போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

இப்போதோ எட்டிலே ஏறி பறக்க
இருசக்கர வாகனம் என்று மாறி போச்சி
மாடு பூட்டிய வில் வண்டியும்
குதிரை வண்டியும் மறந்து போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

மாலையும் தாலியும் மேளமும்
அட்சகரும் உறவுகளும் கோவிலும் -இருந்தால்
திருமணம் எனும் நிலை மாறி போச்சி
கப்பலிலும் வீமானதிலும் புகைவண்டியிலும்
திருமணங்கள் என மாறி போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

********************************************************************************

கல்வியா செல்வமா வீரமா

கல்வி இருந்திட்டால்
செல்வமும் வீரமும்
கிடைத்திடும் என்பது பழங்கதை

இன்றோ -செல்வம் இருந்தால்தான்
கல்வி கிடைக்கும் நிலை
அக்கல்வியினாலே செல்வம்
கிடைத்திடும் நிலை இன்று
இங்கு வீரத்திற்கு என்ன வேலையோ ?

ஓரு வேளை விரும்பிட்ட இடங்களில்
கல்விக்கு காசு குடுத்து
இடம் வாங்குவது வீரமோ !
ஓஒ செல்வம் இருந்தால்
கல்வியும் வீரமும் கிடைக்குமோ



****************************************************************
நெட் பிறந்தநாள் கொண்டாட்டம்

மனமில்லா மனிதர்களும் சரி
பணமில்ல மனிதர்களும் சரி
மனதார வாரி வழங்குகின்றனர்
தம -பிறந்தநாள் கேக்கையும்
மிட்டாய்களையும் ஆர்குட்டில் நண்பர்களுக்கு

பொம்மையாக வெரும்தாளில்
வாய்க்கும்எட்டாது கைக்கும் எட்டாது
கண்ணாலே சாபிடனுமோ
இதுதான் நெட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம

*****************************************************************
இதழே


ஆசையுடன் உன்னை கடிதத்தாலே
உண் -பட்டு இதழ் கிழிந்ததோ
சாரி என் செல்லமே

உன்னை முகர்ந்ததாலே
வாசம் என்னை மயக்குகிறதே
அதனால் -நீ கலைந்து விட்டாயோ
சாரி என் செல்லமே

நான் கடித்தால் கொஞ்சம்
கசகிறதே உண் இதழும்
பார்க்கத்தான் நீ அழகு
சுவையோ குறைவுதான்
கோபிககாதே நீயும் என்னை
இதழே என் ரோஜா இதழே
சாரி என் செல்லமே


( இது ரோஜா இதழை பற்றி ஓரு சிறுமி சொல்லுவது )
வீட்டுக்கு பொண்ண தலையில் குட்டு விழும் ஓரு பூவை ஒழுங்கா


***********************************************************************************
குண்டு மல்லி

கெத்தாக இருக்கின்றாய்
கொத்தாக பூகின்றாய்
உண் -வாசனையோ ஊர் தூக்கும்
வாடிவிட்டால் நாரிடுவாய்
குப்பையிலே நீ விழுவாய்
பூவே குண்டுமல்லி பூவே

*************************************************************************

சாமந்தி

சாமிக்கும் மாலை ஆவாய்
சம்பந்திக்கும் மாலை ஆவாய்
சவதிற்கும் மாலை ஆவாய்
வாசனையோ உனக்கு கம்மிதான்
சாமந்தி பூவே நீ சராசரி பூதான்
**********************************************************

ஜாதி மல்லி

குட்சி குட்சியாய் நீண்டிருபாய் -நீயோ
குசியுடனே வைப்பார் உண்னை
ஆசையுடன் உண் வாசனையில் மயங்கி
ஆனால் உனக்கு ஆயுளோ அரை நாள்தான்
ஜாதி மல்லி என்று எதற்கு
உண் பெயரோ புரியலையே

**********************************************************

ராம பானம்

ராமனோ காட்டில்
பானமோ போரில்
நீயோ கொடியில்

எட்டூருக்கு மனம் பரப்பி
எங்கிருந்தோ தேட செய்வாய்
அருகில் எட்டி பார்கையிலே
பறந்து செல்லும் மனம் தருவாய்

ராம பாண பூஎன்றால்
குறிவைத்து மனம் கொட்டினால்
ellorum மயங்குவர் என்றோ
ராம பாண பூ என்று உண் பெயரோ

************************************************************************
அவன் உண்னை மூணு பொருள் நண்பர்கள் நீ
அவன்

பகலெல்லாம் காட்டமாய்
ஏமாளி மக்களை
சுட்டெரிகதான் தெரியும்
அந்த சூரியனுக்கு ?

இரவில் முக்காடிட்டு -பலர்
செய்யும் ஈழிநிலை செயல்களுக்கு
துணை போகத்தான் -இரவில்
வருவதிலையோ அந்த சூரியன்
துஷ்டன் துஷ்டன் -அவன்
*******************************
உண்னை

உண்னை நிணைத்து -நான்
எழுதிய அன்பு வரிகளோ
பக்கம் பக்கமாய் போகிறதே
என் -வீட்டு குப்பை தொட்டிக்கு
உன்னை -காணும் ஓவ்வொரு முறையும்


அதை - உன்னிடம் தரும் தைரியம்
என்னிடம் இல்லை என்பதால்
காரணம் கத்தியுடன் -எப்போதும்
திரியும் உண் ரௌடி உடன பிறப்புகள்
என்னசெய்ய ? ?என்ன செய்ய ?
***********************************************

மூணு பொருள்
மூனுபொருள் பத்து ரூபாய்
எது எடுத்தாலும் -என்று
மூலைக்கு மூலை கூவியவர்களோ
வண்டியை பார்த்ததும் அலறினார்கள்

எங்க போனாலும் விடமாடான்களோ
மாமூல் கிறாகி மாமன்கள்
இந்த போலீச்கார களவாணிகள் என்று

*********************************************************

நீ
தன் -அன்பில் மூழ்கடித்து
உண்னை தம் வசமாகி
உருபடியாகி மனிதனாக்க
முயல்கிறது நண்பர்கள்
வட்டம் ஒன்று ஆனால்

நீயோ -நல்லவனாக நடித்து
உண் -பணத்தை வீசி
எத்தனையோ (மான் குட்டிகளை ) பெண்களை
மடக்க முயல்கிறாய்



ஆனால் ஒருத்தி மட்டும் -உண்னை
விதி விலக்காய் ஏற்று கொண்டாள்;
தன் அண்ணனாக -உண்னை
உண் -நண்பனின் காதலி என்றும்
நீ அண்ணனாக இருந்து
திருமணம் செய்துவை என்று

என்ன செய்ய என்னசெயா ?

(நண்பர்கள் கோவை சதீஸின் கவிதைக்கு எதிராக எழுதியது

*****************************************************************
பேனா
உன்னை இரு விரலில் அடக்கி
தன்வசம் ஆக்கலாம் எழுதவோ

நீயோ உண்னுள் இருக்கும்
ஓரு துளி மையால்
எழுதப்படும் எழுதுக்களால்
உலகத்தையே உன் வசமாகுகிறாயே
***************************************************


விளம்பரம்

விற்காதப் பொருள்களும்
விலைப்போக உதவுகின்றாய்
கவர்ச்சி என்னும் போர்வை போர்த்தி
*******************************************************************
33% மசோதா சட்டம் எதுக்கோ?

வழிமேல் விழிவைத்து
கவவனுகாக காத்திருப்பது
பண்டை தொட்டு
பழகமாகி வந்ததுவே

தாமதித்து வரும்
சோத கணவர்கள்
திருந்தி விடுவார்களோ ?

காத்திருக்க வேண்டிய
காலம்தான் மாறிவிடுமோ ?
33% சதம் மசோதாவால்

முதல் வேண்டுகோளாக
காக வைக்கும் கணவர்களுக்கு
தண்டனை கொடுக்கும்
சட்டம் வரட்டும்
இதை பற்றி சந்தோசிகலாம்


தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இது


*****************************************************************

பயம் (பயமாய் )

பயமாய் காவலருக்கு பயந்து
மாதா கோவிலின் இருட்டில்
ஒளிந்திருக்கும் திருடர்களின்

கண்களில் பட்ட வாசகம்
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்ற வாசகம் இது எப்படி இருக்கு ?

******************************************************


/ மழை /ஆனந்த தாண்டவம் /நந்தவனம்/பக்தி
தீ

நெருப்பு புட்டியில் உரசியதும்
பற்றுவது குட்சியில் -தீ

உண் -பார்வை உரசியதும்
பற்றுவது என் நெஞ்சில் -தீ


மழை

மழைத்துளி பட்டதும்
சில்லிடுகிறது பூமி

உன் -இதழோரத்தில் புன்னகையை
கண்டதும் சில்லிடுகிறது
என் -மனமோ எப்போதும்


ஆனந்த தாண்டவம்

மேடையில் ஆடுவதோ
ஆனந்த தாண்டவம்

நீ -அசைந்து செல்கையிலே
ஆடுகிறதே என் -இதயம்
ஆனந்த தாண்டவத்தால்



நந்தவனம்

நந்தவனத்தில் வீசுவதோ
பூக்களின் மணம்

என் -மனதில் வீசுவதோ
உன் அன்பின் மனம்



பக்தி

ஆலயத்தில் மணியோசை கேட்டதுமே
பக்தியுடன் புறபட்டேன்
மீனாட்சி உண்னை தரிசிக்க

நிட்சயம் நீ தினம்வருவாய்
அம்மன் மீனாட்சியை தரிசிக்க -என்று

**************************************************************
மகளிர் தினம்


மகளாய் பிறந்து
மணைவியாய் வாழ்ந்து
மகளை ஈன்றாலோ
பெட்டையைதான் பெற்றாயோ
என -ஏசும் நிலை மாறிவிட்டதோ ?

நிறமில்லை பணமில்லை
நல்ல குணமிருந்தால் -போதும்
இல்வாழ்க்கையை நிறைவு செய்ய
நாங்கள் வாழ்வு தருகிறோம் -என
மாபிளைகளும் வீட்டாரும்
மனமார ஏற்று கொள்ளும்
நிலையான நிலை வந்து விட்டதோ ?

வறுமைகாகவும் வயிற்றுபசிக்காகவும்
உடல் வருத்தி செய்ய -எத்தனையோ
வேலைகள் இருந்தும்
உடலை விற்று சோறு தின்னும்
நிலை மாறிவிட்டதோ ?


விபச்சாரிகளும் விபச்சாரங்களும்
இலாத நாடு எதுவோ? -உலகத்தில்
விபச்சாரம் இல்லாத உலகமாக
மாறும் போது கொண்டாடலாமே
என் நிலையிலும் பெண்கள்
உயர்ந்தவர்கள் எனும் நிலையில்


பெண்களுக்கு இளைகபடும்
சாதாரண அநீதிகளுக்கு கூட
இன்னும் -சரியான ஒத்துழைப்பு
கிடைக்காத போது நீங்காதபோது

எந்த எல்லைகளை தொட்டு
வெற்றி கொடியை நாட்டிவிட்டதர்காக
இந்த தினம் கொண்டாட படுகிறது?

இப்படி ஓரு நாள் கொண்டாட படுவது -கூட
தெரியாது செக்கு மாடாய் உழைகும்
பெண்கள் எதனை ஆயிரங்களோ ?

வாழ்க மகளிர்தினம்

***************************************************************

சூரியனே

ஓ ஓ ஓ இயற்கையின் அழகிய
அந்தி சாயும் நேர்ரத்தில்
மின்னி மறையும் சூரியனே
இருண்ட மேகங்களுக்கு -இடையில்
தங்க தட்டாய் ஜொலிக்கிறாயே
உண் -அழகை என்னவென்று சொல்லுவதோ


*************************************************************
நீ ,நான் . அவன்

நிலவு நீ என்றால்
மேகம் நான் அல்லவோ '
உனக்கென்ன வெட்கம்
எப்போதும் என்னுள்
ஒளிந்து ஒளிந்து
விளையாடுகிறாய் நீயோ ?

பார்ப்போர் எல்லாம் -நான்
உண்னை மறைத்து விளையாடுவதாக
எண்ணி ஏசுகின்றனர் -எப்போதும்

எல்லோருக்கும் தெரிவதில்லை
என்னுள் தோன்றுவதாலே -நீ
அழகாய் தெரிகிறாய் என்று

நீ என்னுள் தோன்றும்போது
எதனை ஆனந்தம் எனக்கு
உண் -குளிர்ந்த வட்டம்
என் -வாட்டத்தை போக்கிவிடும் என்பதால்

அதே சூரியன் என்னுள்
தோன்றும்போது எனக்கு
எதனை வேதனை தெரியுமா /?

எல்லோரும் தன்னாலே
ஒளியாய் பிரகாசிகின்றனர்
என்ற கர்வத்தால் எனக்கு
சூடு வைப்பானே மாலை
தான் மறையும் வரை

அவனது சூடை தங்காது
மழையாய் கண்ணீரை
கொட்டுகிறேன் நானும்
அதற்கும் சந்தோசிகின்றன
எல்லா ஜீவராசிகளும்

நீ வராத அந்த
அமாவாசை மட்டும் எனக்கு
ஓரு யுகமாய் கழிகிறது
விடியும் வரை
நீ தோன்றிய பின்தான் -நான் -
நானாகி சிரிக்கிறேன் தோழியே


*****************************************************************
செல்வி என்கின்ற ஷீலாவிர்ற்கு (கண்ணீர் அஞ்சலி )

எங்கோ பிறந்தோம் .
எப்படியோ வளர்ந்தோம்
இங்கு ஆர்குட்டில் நட்பும் ஆனோம்

நல்ல தோழியாக இருந்தாய்
என் -நிலை குறித்து
அன்பாய் ஆறுதல் சொல்லுவாய்
ஓர் உயிராய் பிறந்து விட்டால்
வாழ்ந்துதான் ஆகாவேண்டும் என்று
எப்போதும் நம்பிக்கை கொடுத்திடுவாய்

உனக்கும் ஓரு சோதனை வந்தது
ஆம் -காதல் என்ற மாயையில்
மனதை ஒருவனிடம் பறிகொடுதாய்

அவன் உண்னை ஏற்க மறுத்ததும்
மனம் உடைந்து போனாயே
அப்போது உனக்கு நான் ஆறுதல்
சொல்லி உன்னை தேற்றினேன்

மனம் தெளிந்து நீயும்
வாழ்ந்த போது இன் நிலை
உனக்கு ஏன் வந்ததோ

இருசக்கர வாகனத்தில்
சென்றபோது விபத்து ஏற்பட்டு
அங்கேயே நீ இறந்து விட்டாய்
என அறிந்ததும் மனம் நொந்து போனேனே

என்மீது எனகே வெறுப்பும் வந்ததே
உண்னை ஓடி வந்து பார்த்திடலாம் என்றாலோ
இறைவன்தான் என் காலை
நடக்க முடியாது செய்து விட்டானே

நீ இறந்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆனாலும்
உன்னுடன் இங்கு ஆர்குட்டில்
இப்போதும் பேசுகிறேன் தணியா

அடுத்த ஜென்மம் என்று
நம் இருவருக்கும் இருந்தால்
நீ என்னக்கு தாங்கியாக
பிறக்க வேண்டும் தோழியே

இனி தினமும் நான்
இறைவனிடம் வேண்டும்
வரமும் இதுதான் தோழியே இதுதான்
********************************************************

கருத்துகள் இல்லை: