திங்கள், 5 ஜூலை, 2010

puthukavithai

கிராமம்
காலைக் கருக்களும் . ...
விடிவெள்ளி தோன்றலும் ....

காகங்களின் கரைசலும் ....
பறவைகளின் கூ கூ சத்தமும் .....

நாய்களின் குரைப்பும்......
கோழிகளின் கூவலும் ....

மேய்ச்சளுக்கு செல்லும் ...
ஆடு மாடுகளின் இரைச்சளும் ..
அழகுதான் அழகுதான் ....

சலசலக்கும் நீரோடையும் ...
பரிசல்பாயும் ஆற்றங்கரையும் ....

அங்கு கேலிபேசி குளிக்கும் .....
ஆண்களும் பெண்களும் ....
காளையரும் கன்னியரும் ...
மாடுகளையும் எஅருமைகளையும் ..
தேய்த்து குளிப்பாட்டுவதும் .....
அழகுதான் அழகுதான் ......

தென்னந்தோப்பின் சலசலப்பும் ........
கதைபேஅசும் மொட்டைபனைமரங்களும் ........
..கதிர் முற்றிய ....வயல்க்காடும் ......
கரிசல்மன்னின் வாசனையும் .....
கட்டுதரிகளின் ஓசையும் ......
ஆழகுதான் அழகுதான் ......

இரைச்சல் இல்லா மண்பாதையில் ....
எப்போதோ -ஜல் ஜல் என-ஓடும் ....
மாட்டுவண்டி ச்சத்தமும் ......
சைகிளின் ரிங் ரிங் சத்தமும் ...
அழகுதான் அழகுதான் ........

யாழோய் ...வாலோய் .....
மாமோய் ... மட்ச்சான் -என
உரிமை பேசி .அழைக்கும் -உறவுகளும்

ஒருவீட்டில் நல்லது நடந்தால் ......
எல்லோரும் கலந்து சந்தோசிப்பதும் ....
துக்கமென்றால் எல்லோரும் ....
துக்கம் அனுச்டிப்பதும் ....
அழகுதான் அழகுதான்.......

முகம் பார்த்த முன்பின் -அறியாத ....
நபர்களிடம் நலம் விசாரிப்பதும் ....
முகவரி தேடு பவர்க்கு ......
வடக்காலே தெக்காலே -என்று ...
சுத்தி சுத்தி பக்கத்து தெருவிற்கு ...
நீளமமாய் வழிகாட்டுதலும் ......
அழகுதான் அழகுதான் ......

பட்சை பசேல் வயல்காட்டில் ...
ஏரோட்டும்.. உழவனும் ....
வயலுக்கு ஏற்றம் இறைத்து
நீர் பாய்ச்சும் உழவனும் ...
களையடுக்கும் பெண்களும் .....
கதிர் அறுக்கும் பெண்களும் ....
ஒரு பாட்டம் வேளைமுடித்து .....
கூழோ கஞ்சியோ ..
கம்மங்களியோ ராகிக்களியோ ...
கருவாடோ ஊருகாயோ .....
தொட்டுக்கொண்டு ஊர்கதைச்பேசி ....
உணவு உண்பதும் .....
அழகுதான் அழகுதான் ...

அறுவடையின் போது -திருவிழா....
கோலத்தில் காட்சி அழிப்பதும் ....
விவசாயிகளின் முகத்திலும் ....
கூலிகளின் முகத்திலும் ...
நல்ல போகம் விளைந்ததுவே....
சிலநாட்கள் பட்டினியை

தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....

வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான்

*****************************

கன நேரம்
கன நேரக்காதலும்.....
கன நேரநட்பும்
காவியத்தையும் காலத்தையும் ...
உருவாக்கும் -இது
இருதியில் நம் -மனதில்
கனமான பாத்திரமாக
மாறிவிடும் உயிர்-நம்
உடலில் இருக்கும்வரை
*********************************
ரோஜா
ஒற்றை ரோஜா அன்பைக் காட்டும் ......
இரட்டை ரோஜா இரு மனதை காட்டும் .....
மூன்று ரோஜா வாழ்க்கையிகாட்டும் ........
நான்கு ரோஜா நாம் இருவர் ...
நமக்கு இருவர் என காட்டும் ......
ஆனால் -ஒரு கொத்து ரோஜாவோ......
உறவுகளை காட்டும் ........
இந்த கொத்திலிருந்து .....
வரும் மணமோ -நம்
உறவின் சந்தோசத்தை காட்டும் .....
லதா சந்திரன்
******************************
நீ

நீ வருந்தும் போதெல்லாம் ....
நான் நினைகிறேன் .....
நான் ஒரு கவியாக ....
பிறக்கவில்லை என்று......
உன்னை சந்தோசப்படுத்தும் .....
வரிகளை எழுத முடியவில்லை -என்று
உன் கனிவு பார்வை ...
என்னை எழுத வைகிரதே ..... ...
மகிழ்ச்சியே வாழ்கை .....
******************************************

பெண்ணிணம் மாறுதல்
பெண் பிறந்தால் -போதும் ....
மூதவி என்றழைத்த -காலம் ....
பெண் குழந்தைக்கு கல்வி -கிடையாது ...
பள்ளிக்கு அனுப்புவதோ அரிதானது ....
அதுவும் பத்துவயதிலே திருமணம் .....
அவள் வளர்ந்து பருவம் ...
எய்தும் முன் கட்டிய கணவன்
இறந்துவிட்டால் -அவளும் ....
அவனுடன் உடன்கட்டை ...
ஏரிடல் வேண்டும் அப்போதே ..
இது நடந்தது நூறு எரநூறு
ஆண்டுகளுக்கு முன்பு .......
ஐம்பது எழுபதுவருடங்களுக்கு ...
முன்போ பெண்கள் பள்ளி
செல்ல அனுமதிக்கப்பட்டனர்
...பருவம் எய்தியதும் ....
பள்ளி வாழ்கை முடிக்கப்படும் ...
பதினாறு வயதிற்குள் ....
திருமணம் முடிக்கப்படும்.....
கணவர் இறந்தால்..-உடன்கட்டை
ஏறும் பழக்கம் மருவி .....
வெள்ளாடை உடுக்கும் ...
முறையாக மாறியது ...
முப்பது வருடங்களுக்கு .....
முன்போ பெண்கள் -பள்ளி
மட்டுமின்றி சில இடங்களில் ....
கல்லூரி செல்லவும்
அனிமதிக்க பட்டனர் .....
அட்லீஸ் பிளஸ் டூ
முடிக்க முடிந்தது .....
அதன்பின் திருமணம் நடந்து

த்ர்ப்போதோ நிலைமை மாறேவிட்டது...
பெண்களே நினைத்து வியக்கும் அளவிற்கு ...
கல்லூரி மூன்றாண்டு அதற்கு மேல் .....
.மூன்றாண்டு என படிப்பை ....
தொடர்ந்து முடித்து -தம்மைவிட ...
அதிகம் படித்த மாப்பிளை ...
வேண்டுமென் நினைத்து ....
இருபத்தி ஐந்தில் திருமாணம் ....
அதன் பின்னும் எத்தனை மாற்றம் ...
பெண்கள் வாழ்வில் தப்போது ...
முன்பு மணைவி இறந்தால் ...
கணவனுக்கு மறுமணம் ..
இப்போது கணவன் இறந்தால்
மனைவிக்கும் மறுமணம் ...
அவர்கள் எதிர்கள் நலன் கருதியாம் ...
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ...
காந்தி கண்ட கணவாகவும் ....
தற்ப்போது பெண்ணின் நிலை ..
மாறி இருந்தாலும் .தற்ப்போது .... .....
நாகரீகத்தின் உச்சியில் பெண்களின் ..
மாற்றம் பெண்களுக்கோ பிடிக்கவில்லை ...
என்பது நிச்சயம் நிச்சயம் .....
பெண்கள் முன்னேறமும்
நாகரிகமும் தேவைதான் -நிச்சயம் ..
அவை எல்லோரும் மரியாதை ..
தரும் வகையில் எப்போதும் .... .
....

*********************
மரணமே முடிவு ....
இருக்கும் வரை -நன்றாக
வாழவும்... முடிந்தால் ..
மற்றவர்களையும் வாழவிக்கவும்

************************************

சித்தாள்
சித்தாள் தினம் தினம், ......
சிகரத்தை எட்டுகிறாள் -தன்
சுமை தூக்கும் பணியால்-எப்படி ?
விண்தொடும் கட்டங்களில் ........
வேலை செய்யும் போது ......



தன் வாழ்க்கையிலோ - அவள் .....
ஒவ்வொறு நாளும் ......
சுமை தூக்கும் பணி.....
செய்தால்தான் எப்போதும் ....
ஒரு சிங்கில் டீ எனும் ...
சிகரத்தை தொடுகிறாள் .......
எப்போதும் இப்போதும்
***********************

நாகரீகம்
பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும்

************************************

பெயர் மாற்றம்
முன்பு உம் பெயர் -கருப்பு ...
அமங்கலம் என்றேன் -நான் ...
இப்போது ப்ளூ தமிழன் .....
இது -நீலம் என்ற
வண்ணத்தையும் குறிக்கும் ...
நீல வண்ணம் கண்ணுக்கு .....
குளிர்ச்சி தாரும் .......
புத்தி உள்ளவர்கள் -உம் .....
பெயரை சரியாக ....
புரிந்து கொள்வார்கள் .....
இல்லாதவரோ தவறாக ...
நினைக்க கூடும்-புரியவில்லையா ......
புளூ என்பதற்கு .....
சினிமாவின் மறுப்பக்கம் -உண்டு ..
உம் பெயரை நீறே-மற்றலாம்மா
வேறு பெயர் மாற்றினால் -எப்படி ?
பச்சை என்றால் பசுமையை குறிக்கும் ...
புரியாதவர்க்கு பச்சையானவன் ....
ஆரஞ்சு என்றால் பழத்தையும்...
மாற்றி காவி என்றால் ........
சாமியார்களை நினைவு படுத்தும் ...
சிவப்பு என்றால் அபாயம் ......
ஆபத்தானவன் என தோன்றும் ....
மஞ்சள் என்றால் காமலையையும் ....
மஞ்சல் பத்திரிகையை குறிக்கும் ..
.பாக்கி இருப்பது வெள்ளை மட்டும் ..
வெள்ளை தூய்மையை குறிக்கும் ...
வெள்ளை மனது என்றும் சொல்லலாம் ....
புரியாதவர்க்கு .ஒன்றும் இல்லாதவன் .
என்றும் நினைக்க தோன்றும்
************************************
வீரன்
சொந்த பந்தங்களை -பிரிந்து ....
சொந்த மண்ணை -பிரிந்து .....
உறவுகளை பிரிந்து -நாட்டின் ..
எல்லையிலே-நீ ....
என்றாவது மீண்டும் ..
ஊர் திரும்புவோமா .....
குடும்பத்தை பார்ப்போமா ....
உறவுகளுடன் கூடி.....
மீண்டும் சந்தோசிப்போமா ....
என்ற - நினைவுகளும் ....
கணவுகளும் நிறைந்த -மனதுடன் ...
நாட்டின் எல்லையில்லே-நீ ....

எதிரிகளுடன் போரிட்டு ....
நாட்டிற்காக சேவைசெய்து
நீ -உயிருடன் மீண்டு வந்தால் ....
உனக்கு -கிடைப்பதோ-தாயகத்தின் ...
அத்தனை உயிர்களின் பாராட்டும் ...

ஆனால் -உன்னை பெற்றவர்க்கும் ....
கட்டிய மணைவிக்கும்........
உன் - குழந்தைகளுக்கும் -கிடைப்பதோ ....
மனதில் உயிரின் நிம்மதி தாலாட்டு
*********************************
உலகம்
மாய உலகம்தான் -இது ....
உண்மைகளும் சில உண்டு .....
நம்பு நீ -எப்போதும் .........
சிலவற்றை நம்பலாம்......
சிலரையும் நம்பலாம் ........

உண்மையும் உண்டு -இங்கு ....
யாரையும் எதையும் ....
மாற்றமுடியும் என்னால் ....
மாற்றவும் வேண்டும் ......
-பொதுநலத்தோடு -எப்போதும் .
சிலருக்காக மாறலாம் -நான் ....

நான் -நானாகவே....
வாழ்கிறேன் -முழுமையாக ....
உண்மையாக உறுதியாக ...
எப்போதும் மாறாமல்.....

கண்டுகொள்ள தேவை இல்லை ....
நான்-என்னைப்பற்றி அறிந்துகொள்ள ....
என்னை எப்போதும்
அறிந்துகொள்ளும் நேசிக்கும் ..
அன்பு உள்ளங்கள் என்றும் ........


*************************************************

படைபாளியும் பாட்டாளியும்

பணம் படைத்தவன் -படைப்பாளி ......
அவன் படைப்புகளை .....
படைபவனோ - பாட்டாளி ....
பாராட்டு கிடைபதுவோ ....
பணம் படைத்தவனுக்கு -மட்டுமே ...
பத்திரிக்கையின் முன்பகுதியில் ....
பத்தி பத்தியாய் -பாராட்டுக்கள் ....
பாட்டாளிக்கு கிடைததுவோ ....
படைப்பாளியிடமிருந்து -சொற்ப ...
பணம் மட்டும் கூலியாக ......
எப்போதும் உண்மை - மறைந்து ..
நிற்பதுபோல் நிலைமை -பாட்டாளிக்கு ...
பொய்மை முன்னின்று ஜெயிப்பது -போல் ..
படைப்பாளியின் பணத்தின் உயர்வு
***************************************

நட்பு
சிநேகிதநே சிநேகிதநே......
நீண்டநாள் கழித்து -மீண்டும் .....
நீண்டநாள் கழித்து .....

இரவின் ஒளியிலோ -நிலாப்பெண் ...
உன்னை தொட்டு எழுப்பினாலோ ...
முளித்துகொள் இப்போதாவது -நீ ....
உன் நலன் நினைக்கும் .....
நட்ப்புகளின் முகம்நோக்க -நீ .....
தென்றலின் தளுமையோ.........
பினோக்கி அழைகிறதோ -உன்னை .... -
நண்பர்களின் உண்மை ......
பாசங்களை நோக்கியோ
**************************

கருத்துகள் இல்லை: