சனி, 3 ஜூலை, 2010

puthukavithai

பிரியாத நட்பு ..

ஆர்குட் நண்பனாய் வந்தாய் .-எங்கிருந்தோ .....
கவிதைகள் பல சொன்னாய் -நீயும் ,,,,,,,
நானும் -அதற்க்கு எதிர் கவிதைகள் ....
பல சொன்னேன் உனக்காக .......

ஒருநாள் ஆரம்பம் எது .......
முடிவு எது என்று -ஓரு .......
கவிதையை அனுப்பிநாய் -நீ .....
முடிவின் எல்லை ஆரம்பம் ......
ஆரம்பத்தின் இறுதி முடிவு ........
இப்போது உன் நட்பை விடுவதே.....
நல்ல -முடிவு என்றேன் நான் .......
தமாசாக அதை உண்மையென் எண்ணி ....
என் -நட்பை விட்டு விட்டாய் நீயும் ....

என்கேயோ மற்ற நண்பர்களின் .....
ஆர்குட்டில் என்னை கண்காணித்த -நீயோ ....
மீண்டும் நண்பனாய் வந்தாய் ......
ஏன் -என்று கேட்டதற்கு ......
நல்லது -எதுவாக இருந்தாலும் ......
ஏற்று கொள்வது என் -பண்பு .....
என்றாய் நீயோ ......

பிரிந்த நட்பு இணைந்ததும் .....
வலுவானது புரிதலான அன்புடன் .........
உன் -தீர்வுகளுக்கு நான் சொன்ன .......
பதில்கள் உனக்கு பிடித்ததால் - .......
நீ -அம்மாவாக ஏற்று கொண்டாய் என்னை .....

அன்று முதல் தினமும் தவறாது ......
காலை வணக்கம் சொல்லும் .....
முதல் நபராகினாய் -நீயோ

இடையில் -உனக்கு ஏற்ப்பட்ட ......
மன குழப்பத்தால் மீண்டும் -என்னை .....
விட்டு பிரிந்து போனாய் -நீயோ .....

காரணம் ஏதுமின்றி -பரவாயில்லை ....
காத்திருகிறேன் மீண்டும் -நீயோ .....
இந்த அம்மாவிற்கு என்றாவது .....
கட்டாயம் காலை வணக்கம் .....
சொல்லுவாய் என்று .....

ஆர்குட்டில் என் பகுதிக்கு ......
உன் வரவை i மனபாரத்துடன் .......
எதிர் பார்த்து கொண்டிருக்கும் ......
உன் -மற்றொரு அன்பு அம்மா ......
என் -வாழ்கையில் இடையில் வந்தாய்......
நீ -இடையிலே போனதும் நீயே .....

உண்மையாகவே உண்னை -என் .....
குழந்தைகளில் ஒருத்தனாக நினைத்ததால் .....
உண் -பிரிவை நிணைத்து .....
மனம் வருந்தும் அம்மா ........
*********************************
விவசாயி
நண்பனாக வந்தாய் .......
உண்னை பற்றி சொல்லவும் -என்றேன் ......

நான் ஏழை என்றாய் -நீ .....
யாரையும் யாமாற்றாமல்.......
உழைத்து சம்பாதித்தால் ; -போதும் .....
கவலையை விட்டு விடு என்றேன் .....

பத்தாம் வகுப்பு தான்டவில்லை.....
-என்றாய் வருத்தத்துடன் -நீ ......
கணினியில் மற்றவர்களுடன் ....
பேசும் வரை உலக அனுபவம் .....
இருகிறது -உனக்கு -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......

கிராமத்து காரன் என்றாய் ......
காடு கரை உள்ளது என்றாய் .....
செல் செண்டர் சொந்தமாக .......
வைதிரிகிறேன் நான் என்றாய் -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......

அப்பா -என்ன செய்கிறார் என்றேன் ......
அப்பாவும் அம்மாவும் பார்மர்ஸ் ........
என்றாய் ஆங்கிலத்தில் ......
இப்போது -நான் மிகவும் ...
வருத்தம் கொண்டேதான் தம்பி ......
உண்னை நிணைத்து .....

விவசாயிகள் என அழகாக ......
தமிழிலே சொல்லி இருக்கலாம்-நீ ....
நான் -ரொம்ப ரொம்ப .....
சந்தோஷ பட்டு இருப்பேன் .....
உண்னை நிணைத்து ....

விவசாயம்தாநே -நம் ......
தமிழகத்தின் மூலதனம்


ணம் -இந்திய தாய்நாட்டின் .......
முதுகெலும்பு பெருமையாய் -நீ ....
விவசாயிகள் என தலை நிமிர்ந்து ....
மார்தட்டி உரக்க சொல்லிடலாம் -நீ .....

நீங்கள் இல்லையென்றால் .......
யாருக்கும் சோறு கிடையாது -உலகத்தில் ....
ரொட்டியும் சப்பாத்தியும் கூட .....
விவசாயம் செய்தால்தான் .......
எல்லோருக்கும் கிடைத்திடும் .....
புரிந்து கொள் உங்கள் ....
விவசாயிகளின் உயர்வை நீ
*******************************************
எனக்கே எனக்காகவே

எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......


என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........

காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........

எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......

உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு .....



எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
- ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே
*****************************************
இருப்பது இல்லாதது
தினம் தேடி சோறு ........
தின்னும் பிட்சைக்காரன் ......
நோயின்றி வாழ்கிறான் - எப்போதும் .......

தினம் உழைத்து ...பணமிருப்போனோ ....
நோயால் வாடுகிறான் -எப்போதும் .....

பூ விற்கும் பூக்காரி .....
தலை நிறைய பூ வைக்கிறாள் ....
மனதார செலவு செய்து .-.எப்போதும் ....

பூந்தோட்டது சொந்தக்காரியோ .........
ஓரு -பூவும் வைப்பதில்லை .......
பாப் தலை என்பதாலே ...-..எப்போதும் ....

ட்ராவல்ஸ் வண்டிக்கு முதலாளி ........
வண்டியில் பயணிப்பதில்லை -எப்போதும் .....

பணி -செய்யும் வேலையாளோ ......
தினம் தினம் பயணிக்கிறான் .......
வண்டியில் -எப்போதும் ......

இருப்பவன் அதை அனுபவிப்பதில்லை .........
முழுமையாக - எப்போதும் ........

இல்லாதவன் அனுபவிக்கிறான் .......
தேவை ஏற்ப்படும் போது -.அதை .......
முழுமையாக -எப்போதும்
********************************************


பிரதிபலிப்பு
உருவங்களின் பிம்பங்கள் ......
கண்ணாடியின் பிரதிபலிப்பு............

உள்ளங்களின் பிம்பங்கள் ........
முகத்தின் பிரதிபலிப்பு.........

நினைவுகளின் பிம்பங்கள் .....
செய்யல்களின் பிரதிபலிப்பு ........
..
.ஏழ்மையின் பிம்பங்கள் ......
வறுமையின் பிரதிபலிப்பு...........

வெறுப்பின் பிம்பங்கள் .....
கோபத்தின் பிரதிபலிப்பு ...........

இழப்பின் பிம்பங்கள் ......
சோகத்தின் பிரதிபலிப்பு........

மகிழ்சியின் பிம்பங்கள் .....
சந்தோசத்தின் பிரதிபலிப்பு.......

கொந்தளிக்கும் பிம்பங்கள் ......
கொடுமையின் பிரதிபலிப்பு...........

இறப்பின் பிம்பங்கள் .....
பிறப்பின் முடிவின் பிரதிபலிப்பு

*****************************************
செருப்பு
நமக்கு உண்மையாய் .......
ஊழியம் செய்வது செருப்பு ....

ஏன் -என்று கேட்காமல் .....
எஅதற்கு -என யோசிக்காமல் .....
நம்முடன் வருவது செருப்பு .....

தான் -படும் மிதிகளையும் ....
குத்துபடும் வலிகளையும் ......
தான் -மீது படும் அசிங்கங்களையும் .....
முகம் சுழிக்காது.......
ஏற்றுக்கொள்வது செருப்பு .....

நம் -உடல்போல் அதன் ......
உடல் தேய்ந்தாலும் ........
முகம் சுழிக்காது .....
ஏற்றுக்கொள்வது செருப்பு ....

சில -நேரங்களில் நம் வீரத்தை ......
காட்ட அதை தூக்கி வீசினாலும் ....
இலக்கு தவறாது .....
குறிப்பார்த்து பறந்து சென்று .....
நம் -இலக்கை சரியாக ......
தாக்குவதும் செருப்பு ......


தன் தேவை என்று எதுவும் .......
கேட்காத அதற்க்கு .....
நாம் செய்யும் உபகாரம் ......
நமக்கு -அதன் தேவை முடிந்ததும் ......
நாம் செய்யும் முதல் வேலையோ ....
அதற்க்கு ஓய்வு கொடுக்க ....
குப்பை தொட்டியில் வீசுவதே
*******************************************

விட்டில் பூச்சி
வீட்டில் முடங்கி கிடக்கும் ......
விட்டில் பூச்சியாய் வாழும் .....
பெண் -சிட்டுக்கு இன்டர்நெட்டில் ......
நட்பு வட்டம் அமைத்து பேச ....
அனுமதி கிடைததுமே ......

விண்ணை முட்டும் ........
மலை மீது அமர்ந்து -இவ .....
உலகினை ரசிக்கும் .....
சந்தோசம் கிட்டியதாய்......
சிட்டின் மனம் ......
சிறகடித்து பறந்தது........

ஆனாள் -இங்கு வந்த பின்போ .....
நான் -வாழ்க்கையில பார்த்து .....
அறியும் நட்பும் -இங்கு .....
அமையும் நட்புக்கும் .....
வேறுபாடு உளதென அறிந்ததே.....

அன்பாய் பண்பாய் ....
பாசமாய் நேசமாய் .....
மதிப்பும் மரியாதையுமாய் ....
பேசும் நட்புக்கள் இருந்தாலும் ....

நண்பராய் வந்து .......
நாகரீகமற்ற ....முறையில் ....
எல்லை மீறி பேசும் ....
படித்த பண்பற்ற நட்பும் ......
உண்டென அறிந்ததும் ....
சிட்டு சிறகொடிந்து அழுதது .....

பண்பும் பாசமும் .......
உண்மையாய் காணுருதல் .....
படிபரிவில்லா ஜீவிகளிடமும் .....
கிராமங்களிளியும் குடும்பங்களிலும் ......
நாம் அறித்த கண்ணால் .....
கண்ணுறும் நட்புகளிலே ... ..
உண்னை இருக்கும் என் ..
..அறிந்தா சிட்டோ இனி
விட்டில் பூச்சியாய் ....
வீட்டில் வாழ்வதே ....
தனக்கு நலமென அறிந்தது ...


*****************************************
மழை
தொடர்சியாக விழும் .......
மழைத்துளிகள் பாறைகளை .....
.தொடத்தான் முடியும் ....
ஊடுருவுதல் முடியாதே .....

ஆனால் -சில்லிடும் .....
மழைத்துளிகள் மனித மனங்களில் ......
இனம் புரியாத ஊடுருவலை ....
உணர்விக்கும் சில -நேரங்களில் ........
குழந்தைகளுக்கு உற்சாகமும் ......
பெரியோர்களுக்கு சந்தோஷமும் ...
காதலர்களுக்கு உல்லாசமும் ......
வேதனை கொண்ட உள்ளங்களுக்கு ......
ஆறுதலாகவும் அமைதியையும் .....
சில -நேரங்களில் பாறைமனம் ......
படைத்தோரின் இதயங்களிலும் .....
இனிமையை கூட்டுமே

*********************************************
சிக்ஸ் பேக்ஸ்
கொளுத்த உடல்களை ........
பணம் தந்து ஜிம்மிற்கு ......
திங்கள், 13 ஜூலை, 2009
சிக்ஸ் பேக்ஸ்
கொளுத்த உடல்களை ........
பணம் தந்து ஜிம்மிற்கு ......
தத்து கொடுத்து ......
ஊளை சதையினை -குறைத்து .....
ஆறு மாதம் கஷ்ட்ட பட்டு ......
ஆறு மடிப்பு விழும் ........
சிக்ஸ் பேச்சை -தண் ....
வயிற்றில் வரிவரியாய் .....
காட்டுகிறான் பணம் -இருப்பவன் .......

ஆனால் -வறுமையில் வாடுவோரின் ......
உடல்களில் பசியால் .........
வாடி வாடி வரிசையாக .....
வயிற்றில் விழும் .....
வரிகளின் எண்ணிக்கையோ .......
சிக்ஸ் பேக்சையும் ........
மிஞ்சிவிடுகிறது செலவில்லாமலே .....

பணம் கொடுத்து வரும் ......
சிக்ஸ் பேகஸ் ரசிக்கப்படுகிறது ......
வறுமையில் விழும் ......
பல பேகஸ்களும் ஏழ்மை -என .....
எள்ளி நகைக்க படுகின்றன
*****************************************

செலீனாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இருமனம் கலந்து .......
திருமணம் முடிந்து .......
இல்லறம் எனும் .....
நல்லறத்தை காண .......
அடிஅடுத்து வைக்கபோகும் .......
ஈழ குல விளக்கே-நீ .........
இனி -புது மனங்கள் பலவற்றில் ........
இடம் பிடித்து -சில ......
இலக்கியங்களை (குழந்தைகளை )
இவுலகிர்க்கு ஈழபோகும் ........
ஈழப் பெண்மனியே.........
சிறு கவிதைக் குயிலே ......
இந்த பிறந்த நாளிலும் ....
இனி வரும் பிறந்த நாட்களிலும் ....
உன் -குட்டிகுயில்களுடன் .....
கலந்து சந்தோசிக்கவும் ....
எல்லா இறைகளின் ஆசியும் .....
உனக்கு கிட்டிட -என் .........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
**********************************************************

கருத்துகள் இல்லை: