சனி, 3 ஜூலை, 2010

puthukavithai

நாகரீகம்

பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும் ..
***********************************************
தாஜ் மஹால்


பணம் இருந்ததால் கட்டினான் -ஷாஜகான் ......
தன் - காதலிக்காக -தாஜ் மஹாலை .... ......
அதில் -என்ன பயனோ .....
அந்த - காதலியுடன் அவன் ....
வாழவில்லையே கடைசிவரை ....

அவளுடனே சாகவில்லை ....
அவனும், அப்போதே .....
இறந்துபோன காதலியின்
.நினைவுகளை ...எப்போதும்
சுமந்தாநே தன் நெஞ்சில் ...

அவன் கட்டிய -தாஜ் மஹால் ..
இன்று -காதல் கண்டவர்க்கும் ....
இன்று -தோல்வி கண்டுகொண்டு ....
இருப்பவர்க்கும் நினைவு சின்னமாக ....
நிலைதிருப்பதே என்றும் -மிச்சமாகும் ...
...
அவன் பெய்ர்சொல்ல -அவன் ...
வழிமுறையாக சந்ததிகள் -இல்லையே ....
ஆனால் -அதை கட்டிய கொத்தனார்களின் ....
வழித்தோன்றல்கள் இன்றும் ,,,,
பெருமை படுகின்றனர் -தம் ...
தாத்தன் முப்பாட்டனது உழைப்பு ...
தாஜ் மஹாலின் அழகை -இன்றும் ..
புது பொலிவுடன் காட்டுகிறது -என்று ..

பையில் பணம் இருந்தால்தான் ....
காதலியின் கழுத்தில் -தாலி ...
கட்டமுடியும் என்பதில்லை -நண்பா ....
நல்ல மனம் இருந்தால் -போதும் ...
எந்த செயலும் நன்றாகவே-நடக்கும் ...
நன்மையில் தான் முடியும் .....
*********************************************
மாறுதல் ( மருவல்

மாறுதல் ( மருவல் ) பெண்களைப் பற்றி இது
நீள்முடி சடையும் நீண்ட கூந்தலும் ....
மருவி -பாப்பும் ,,, ஹிப்பியாகவும் மாறியது ஏன் ?

பட்டு பாவடையும் எட்டுமுழப் புடவையும் .... ......
மருவி -ஜீன்ஸ் ,,,ஸகர்ட் ,,,, சுடிதாராக மாறியது ஏன் ? ,

விடியலில் எழுந்து இல்வேலை தொடக்கம் ........
மருவி -ஜிம்மும் '.,யோகாவும் வாக்கிங்கும் -
என மாறியது ஏன் ?

மஞ்சள் முகமும் குங்குமம பொட்டும்....
மருவி -மேக்கப் ,லிப்ச்டிக் ,,ஐலயினர் ,
,என மாறியது ஏன் ?

கைநிறைய கண்ணாடி வளையலும் ...
அதன் கல கல சத்தமும் -மருவி......

, பிறேச்லெட் ,,வாட்ச் ,,ரப்பர் பாண்ட.......
என மாறியது ஏன் ?

ஜல் ஜல் கால்கொலுசு சத்தம் ....
மருவி -நெயபாலீஸ் ஐஈல்ல்ஸ் செஅருப்புமாக ......
மாறியது ஏன் ?

எத்தனை ,,எத்தனை மாற்றம்
பெண்களிடையே அப்பப்பா ........

சில மட்டும் eeaattrru கொள்ள முடியும்
சில கண்கொண்டு பார்க்க முடியவில்லை
சில காது கொடுத்துகேட்க்க முடியவில்லை
********************************************************************

கட்சி
மாமியார் ஆளும் கட்சியானால் .......
மருமகளோ எதிர் கட்சியாம் ....
மாமனாரும் மகனும் ..........
மத்தளத்திற்கு இரு பக்கமும் .....
இடியெனும் இடை கட்சியாம் ......
உர்ரவுகளுக்குள்ளே இருக்கும் ....
சகுனி கூட்டங்கள் பிரித்தாலும் கட்சியாம் ......
உள்குத்து வெளிகுத்து எடுத்து ........
போட்டு கொடுக்கும் கட்சி -நாத்தநார்களாம் ........
தேடி வந்து உதவும் உறவுகளோ .........
அன்பு கட்சியாம் .......
என் நிலையிலும் மாறாமல் -இருப்பது ....
நட்பு கட்சியாம்
***************************************************
கனவு

கணவே பொய்தானோ
நீள்நெடு வகிடெடுத்து .............
சுருண்டு அடர்ந்த கூன்தலிலே ........
கருநாக சாட்டையாய் நீண்ட ......
ஜடை அசைந்து ஆட ........
வட்ட முகத்தினிலே.........
பிறைநிலா நெற்றியில்லே .....
நட்சத்திர பொட்டணிந்து ........
வில் வளைத்த புருவமும் .......
கிழே -துள்ளி விளையாடும் .......
கயல் விழி பார்வையும் ......
கூர் நாசியும் -அதில் ......
மின்னும் ஒற்றைகல் -மூக்குத்தியும் .......
கோவை பழமாய் சிவந்த -வாய்தனிலே ......
மாதுளை முத்து பற்கள் -மின்ன .....
சிருங்கார காததனில் ............
கல் ஜிமிக்கி அசைந்தாட .......
வெண்சங்கு கழுத்ததனில் ......
சிவப்புக்கல் அட்டிகை ஜொலித்திட .....
மார்புபகுதி மறையுமளவு ........
காசுமாலையும் ஆரங்களும் -நிறைந்திருக்க ......
அழகிய கையதுவில் வங்கியும் ......
கைநிறைய் வளையல்களும் கலகலக்க ......
உடுக்கை இடையதனில் ......
வட்டியானம் அணிந்திருக்க ......
வாழையாய் நீண்ட கால்களில் ,,,,,
வெள்ளி தண்டையும் கொலுசும் ......
ஜல் ஜல் என்ன சலசலக்க ......
எட்டு முழபுடவை உடுத்தி .......
பூம்பாவை நீயவளோ
*******************************************
கோபம்


என்மீது கோபம் இல்லாத போது .......
அதை -வெளிபடுத்த உண்ணால் முடியாதே ........

இன்று -உண்னையே உனக்கு ......
பிடிக்காமல் போனது -ஏனோ ......

உன்னுடைய தவறுகள் -உனக்குள் .......
உண்னை குத்தி காட்டுவதாலே ........

உண்மையை -உணர்ந்து ஊமையானாயோ ......
என்னை திட்ட முடியாமல் .........
******************************************
அடுப்பு
எரிகிறேன் என்னில்-நானே......
கரைகிறேன் நெருப்பாய் .......
உலகிற்கே உதவுகிறேன் .......
என் -நிலையிலும் உண்பதற்கு .....
நானே -விறகாய் கியாஸ்ஸாய் ........
சுள்ளியால் எரிக்க பட்டாலும் .........
அடுப்பாய் அரவணைத்து ......
ஆகாரம் தயாரித்து ......
சுவைத்து ஆசையாய் உண்பதற்கு .....
****************************************
பிரிஜ்(குளிர் சாதன பெட்டி )
சுமை தாங்கி ஆனேனே.. .....
எல்லோருக்கும் நான் ........
சுமைதாங்கி ஆனேனே.........
என்னை படைத்த விஞஞாநியே........
பாராட்டோ உமக்கு .......
மனிதர்களின் ஜீவிதர்க்கு .....
தேவையானவற்றை பாதுகாக்கும் ....
சுமைதாங்கி ஆனேனே....-நான் .......
என் -ஆயுள் முடியும் மட்டும் ....
ஓயவென்பதே கிடையாதே -எனக்கு ....
****************************************
மிக்ஸி
அவசர உலகத்தின் ......
அவசரத்தை உணர்ந்து ......
அரைக்க பொடிக்க .........
நிமிடத்தில் உதவிடும் .....
பாஸ்ட்டு எல்பர் நாந்தானே ... ..

************************************
கிரைண்டர் (ஆட்டுக்கல் )
ஆட்டு ஆட்டு என .....
என்னை -ஆட்டுவிப்பதால் ......
உடல் தேய்ந்து போகின்றேன் .....
உன் -கை பட்டு தடவுவதாலே .....
ஏனோ நானும் ஆடுகிறேன் .........
உன் -விருப்பம் நிறைவேரும்வரை ........
********************************************
சுட்சு (சாக் )
என்னை தொட்டதால் ......
.உனக்கு -சாக் அடித்ததோ "........
பெண்ணே -என்னை மன்னிப்பாயாக ......
உன் -கையில் உள்ள .......
ஈரம் பட்டதால் -என் .......
உடல் சிலிர்ப்பால் வந்த ......
இன்ப அதிர்சியே அது
*******************************************
தமிழ்

நேசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை ...........
வாசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை .........

சுவாசிக்க தெரிந்தவனுக்கும் ............
வாழும்முறை தெரிந்தவர்களுக்கும் ......
தமிழ் ஓரு நல்ல தோழி மட்டும் -இல்லையே ....
எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் -திகழ்வதே ....

இதை தலைமுதல் பாதம்வரை -கற்றுணர்ந்து ......
தன்னிலை அடைந்தோர் யாருமில்லையே ......
கற்க கற்க அமுதாய் கேணியாய் ...
ஊற்றேடுக்கும் அமுதசுரபியே -தமிழ் ..........

இயற்தமிழ் . இசைதமிழ் .........
நாடகதமிழ் இலக்கியதமிழ் ...............
சொற்றமிழ் ஓவியதமிழ் .............
கவிதைதமிழ் காவியதமிழ் ........
பைந்தமிழ் பழமைதமிழ் ......
சங்கத்தமிழ் பொருட்தமிழ் .........
அணிதமிழ் நயதமிழ் ........
இடைதமிழ் பசுமைதமிழ் .....
இன்னும் -எத்தனை எத்தனையோ ......
சொல்ல முடியாது போய் கொண்டே.......
இருக்கும் நம் தமிழின் பெருமையே ... .....

கொடுமை என்னவேன்றாலோ -தற்போது .......
உலகம் முழுவதும் -நம் ......
தமிழின் பெருமை பெருமை உணர்ந்து ......
அதன் சுவையறிய எல்லா நாட்டவரும் ......
தமிழை கற்று வருகின்றனர் .....


ஆனால் தமிழ் நாட்டில்லோ ஆங்கில-மோகம் .......
தலை விரித்து ஆடுகிரதே -உச்த்சத்தில் .......
பிறக்கும் குழந்தைகள் கூட -முதலில் .....
சொல்லும் வார்த்தை அம்மா அப்பா -இல்லை .....
டாட் மாம் ஹாய் அல்லோ .......
தமிழ்லா எனக்கு தெரியாதே -என ......
வாண்டுகளும் சொல்லும் -இழுக்கு .......
தமிழகத்தில் தமிழுக்கு ........
ஆங்கில மீடியா படிப்புதான் ....
குழந்தைகளுக்கு நல்லது -என் .....
தீர்மாணிக்கபடுவதாலும் -ஆங்கிலத்தை .....
படித்தால்தான் மரியாதை என்னும் .....
நிலைமை மாறி வருவதாலும் ......


..இப்போதாவது - பரவாயில்லை போக போக ........
தமிழகத்தில் பிறக்கும் தங்கங்களுக்கு .........
இனி -தமிழ் தகிடதத்தோம் தான்
******************************************

கருத்துகள் இல்லை: