ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavithai

பயம்
எட்டு கம்பி -ஜெயில் ....
கதவுக்கும் கனமான ...
ஒரு பூட்டு -அதன் ...
உள் இருக்கும் மனிதன் ...அந்த
கம்பிகளையும் திருடிவிடுவான் -என்று ....

**************************************
பிறந்த நாள் வாழ்த்து
முதலில் தாயாரின்
ஆசிப் பெற்று ....
தண் நம்பிக்கையுடன் -வாழ்க ...
கடவுளின் ஆசி பெற்று ....
நான் -என்ற கர்வமுடன் வாழ் ....
நல்லோரின் ஆசிபெற்று ..
நலமுடன் வாழ்க ....
நண்பர்களின் ஆசி பெற்று ...
நட்பை எந்நிலையிலும் ...
மறவாது வாழ்க..
பல்லாண்டு பல்லாண்டு ...
எல்ரோருடனும் பாசமாய் ....
நீர் நீடூடி வாழ்க வாழ்க
********************************************

ராமன்
நம்பிக்கையுடன் இருந்தால் .....ஒரு -...
ராமன் வருவான் - நிட்ச்யம் ....
இல்லையோ -தெரிந்தும் தெரியாமலும் ...
மணந்தவன் ராவணனாக -இருந்தால் ...
அவனை -ராமனாக மாற்றுவது ....
சீதைகளாகிய நம் -கடமை
****************************************
ஆயுள் ரேகை
ஊருக்கே ஜோதிடம் ...
சொல்பவன் தன் ஜாதகம் ..
பார்க்கமாட்டான் எப்போதும் ...
எங்கே தன் ஆயுள் ..
நாளையோ முடியும்
என தெரிந்து விட்டால் ..
என்ன ஆகும் ..என்ற பயத்தில்
********************************************

இதயம்
துடிக்கும் போது தெரியும் ...
யாருக்காக எதற்காக .....
துடிக்கிறோம் என்று ...
ஆனால் நிக்கும் போது ..
அதற்க்கே தெரியாது ....
எதற்காக எப்படி ...
நின்றோம் என்று
நம்பிக்கை
சட்டினியை பார்த்து ..
தோசை அழுதது -
என்னை தொடதே ...
எனக்கு எரியும் என்று .....
தோசை ...பார்த்து.....
சட்னி சொன்னது ....
நான் உன்னை தொடாவிட்டால் ...
யாரும் உன்னை ....
சீந்த மாட்டார்கள் -என்று
..அதை -பார்த்து மனிதன் ..
சொன்னான் உங்களை -நான் ..
முழுங்கி விட்டால் உங்களுக்குள் ...
சண்டையோ நடக்காது ..
நம்புங்கள் என்றான்
************************************
நல்லதோர் மனம்
நல்லதோர் மனம் கிடைத்தாலும் -அதை ...
மனிதர்கள் எப்போதும் மதிப்பதுண்டோ?
சொல்லடி சிவசக்தி -மனிதரில் ...
சுடர்மிகும் அறிவுடன் -பிறந்தவர்க்கு ....
வல்லமை தருவாயோ -இந்த -
நிலைகெட்ட சில மனிதர்களின் ....
நிலைகளை ஏர்ப்பதற்க்கோ .....
நல்லதோர் மனம் படைத்த-மானிடரை .....
நம் -மாநிலம்பயன்பட ஏர்ப்பதற்கு
சொல்லடி சிவசக்தி இப் -பூமியில் ....
இவர்களை சுமையாய் கருதும் ..
தீய நெஞ்சம் படைத்தோர்க்கு ....

நல்மனம் படைதோர்க்கு -மீண்டும் ...
மீண்டும் வரும் தீங்கினை .....
தாங்கும் திடமான உடல் கேட்டேன் ...
தீதிலா அம்மனங்களுக்கு -தினம் ....
நன்மை வேண்டும் சில -உண்மை ....
மனம் கேட்டேன் ...
அவர்களின் மனதினை -தீ சுட்டாலும் ...
சிவா சக்தியை மட்டும் -நினைத்து ..
பாடும் நல்ல மனம் கேட்டேன் ....
நல்லதோர் மனம் படைத்தோர்க்கு ....
எப்போதும் - மாறாத நிலையான ..
மனம் கேட்டேன் -இவை ....
கொடுப்பதில் உனக்கொன்றும் ...
தடை உள்ளதோ சொல்லடி -சிவா சக்தி
****************************************************

வேலை நிறுத்தம்

நான் கணினியன் முன் -அமர்ந்ததும் ..
விரல்கள் மடங்கி கைகளை - இறுகக்...
மூடியது தன்எலும்பு தேய்கிறது -என்று ....

எளுத்துகளாகிய தம் தலையில் ....
தட்டி தட்டி அதன் வடிவம் -.....
தேய்கிரதென்று கீபோர்டும் .....

மௌசெய் சுற்றி சுற்றி -வேலை ...
கொடுப்பதால் அதற்க்கு -தலை ...
சுற்றுகிரதென்று அதுவும் .....

இவைகளை இயக்க -பார்வை ....
உதவுவதால் தனது -விழிகள் ....
எரிச்சல் அடைகிறதென்று '.....
கண்களும் வேலை நிறுத்தம் ...
செய்தனவே ஏன் என-கேட்டதற்க்கோ

நீ -உன் நண்பர்களுடன் பேச......
எங்களை விடாமல் நோகசெய்கிறாய் ....
உன்னுடன் இருக்கும் எங்களை -பற்றி ....
சிரிதேனும் கவலை இருகிறதா ...
உனக்கு -என வேதனை பட்டன ....

பிறகுதான் உறைத்தது -ஏன் ...
.புத்தி வேலை செய்யவில்லை என்று ..
இப்போது -தினமும் சிலமணி நேரம்
அவைகளுக்கு ஓய்வு தருவதால் .....
வேலை நிறுத்தம் செய்வதை
அவைகள் விட்டு விட்டன ...
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 7:03 am 0 கருத்துரைகள்
தேர்தல்
இருப்பதை இல்லாதது -ஆக்குவதும் ...
இல்லாததை இருப்பதுபோல் ....
-காட்டுவதும் தேர்தல் ....
இதில் -செத்தவன் ...
ஒட்டு போடுவான் ....
உயிரோடு இருப்பவன் .....
செத்தவனாக கணக்கில் ....
காட்டப்படுவான் ...
வெள்ளை மனம் படைத்த ...
மக்கள் இருக்கும் வரை ....
கருப்பு மனம் படைத்த ...
அரசியல் வாதிகள் ...
ஏமாட்ட்ரி கொண்டுதான் ....
தான் இருப்பார்கள் -எப்போதும் ..
வெள்ளை சுவர்களில் -
வண்ணங்களால் நிறப்பி ...
நம் -எண்ணங்களை மாற்றுகின்றனர் ...
அவர் காரியங்களை மாற்றி .....
ஜெயித்தும் காட்டுகின்றனர் ...
மறுபடியும் தோற்றுவிட்டு ....
அடுத்து வரும் ஐந்தாண்டு ..
எதிர்நோக்கும் வெள்ளை ....
மனம் படைத்த மக்கள் ..
***************************************************************
புண்ணகை
தங்கத்தில் தயாரிப்பதோ ....
பொன் நகை .....
மகிழ்ச்சியான குடும்பத்தில் ....
பிறப்பதோ புண்ணகை....
வெண்பட்டு சிரிப்பிலே ...
முத்து நகை .....
நகைசுவை பட்டற்ரையில்லோ ....
சிவகாசி சிரிப்பு மத்தாப்பு
***************************************************************
துறவறம்

முற்றும் துறந்தவன் -முனிவனாம் ...
பொன் பொருள் பூமி எதன் -மீதும் ...
பற்றர்ரவனே முனிவனாம் -அன்று ...
சாதாரண ருத்ராச்ச மாலையும் ....
கீரை பழம் எழிய உணவும் ...
காவி உடையும் சடைமுடியும் ....
அவர்களின் அடையாளம் -அன்று

முற்றையும் முற்றிய -நிலையில் ...
அனுபவிப்பவனோ சாமியாராம் -இன்று ..
தங்க ரதத்தில் ஊர்வலமாம் .......
தங்கத்தாலான ருத்ராச்ச மாலையாம் ....
சலவைகள் மாளிகையாம் .....
மயில் தொகை சப்பரமாம் ......
தினம் ஒரு பட்டாடையாம் .....
அவருக்கு உதவியாய் - சிச்யை ....
என்று -வெளிநாட்டு அழகியாம் .....
ஏதோ ஒரு சேணலில் -தினமும் ......
அவருடைய சாதனை புகழலாம் ....
சாதாரண மானிடர்களையே ...
மிஞ்சும் பகட்டும் ஆடம்பரமும் ....
அப்பப்பா ஏமாறும் மனிதர்கள் ...
இருக்கும் வரை அவர்களை -முற்றும் ../
துறக்க வைக்கும் நிலை .....
இன்றைய சாமிகளின் நிலையாகும்
**************************************************
பந்தம்
அப்பா அம்மா -என்ற ....
ஒட்டு செடியில் -பிறந்த ..
ஆறு புஸ்பங்கள் -நாங்கள் ...

நிறம் வேறு வேறு -ஆனாலும் ....
குணம் வேறு வேறு ஆனாலும் ...
பண்பாலும் பாசத்தலும் ....
ஒன்றானவறே நாங்கள் .....

பிறப்பை பேனுதளிலும் ...
பிள்ளைகளை பேனுதளிலும்....
உறவை பேனுதளிலும்......
பந்த பாசங்களை காப்பதிலும் ....
எந்நிலையிலும் மாறாதவர்கள் -நாங்கள் ..

இருக்குமிடம் வேறானாலும் .....
.நினைப்பதெல்லாம் ஒன்றுதான் ......
இறைவா -நங்கள் உயிருடன் ....
இருக்கும் வரையில் -நாங்கள் ...
அனைவரும் இறக்கும் -வரையிலும் ..

யாரும் -இந்நிலை மாறாமல் ....
ஒற்றுமை குலவாமல் -ஊர் ..
போற்றும்படி கடைசிவரை .....
வாழ்ந்து-காட்ட வேண்டும் என்பதே....

இதை மட்டும் எப்போதும் -உன்னிடம்
நாங்கள் அனைவரும் வேண்டிக்கேட்க்கும் ...
வரமும் பிராத்தனையும் ஆகும்

முகவரி
மலர்ந்த முகமும் ....
அன்பான ...பார்வையும்.....
கனிவான பேச்சும் ..
உள்ளம் குளிரும் ....
சிரிப்புமே மனிதரின் ...
உண்மை முகவரி

*******************************************
(nambikai) ம்பிக்கை
யாரென்று உன்னை தெரியாவிட்டாலும் .....
என்னுடன் உன்னை இணைத்த -இனிப்பு ....
இளையதளமாக இர்ருந்தாலும் .....
உனக்கும் எனக்கும் வித்தியாசம் -உண்டு ...

நிஜங்களையும் கணவுகளையும் ...
எனக்கு கைகொடுக்கும் படி -எப்போதும் ....
நான் மாற்றிவிடுவேன் .....
அது -என் தன்னம்பிக்கைக்கு ...
கிடைக்கும் சிறந்த பரிசு ....

நீயும் தன்னம்பிக்கையின் -பாதையில் ....
ஊர்ந்து பார் எப்போதும் -உனக்கு ....
வெற்றி நிட்சியம்
***************************************


: இமயம்
இமயம் ஏறப்போகும் -இமாலயங்களுக்கு ..
உங்கள் பயணம் வெற்றி பாதையில் .....
ஏறி -உச்சி சென்று இமயத்தை .....
தொட்டு -நம் தாய் நாட்டின் .....
தேசிய கொடியை நட்டு .....
பட்டொளி வீசி பறக்கச்செய்து ......
இந்தியர் ஒவ்வொருவரும் ....

இமயம் தொடும் ஆசையை -தூண்டவும் ..
எல்லோருக்கும் இப் பாக்கியம் ....
கிடைக்காவிட்டாலும் இந்தியர் ...
ஒவ்வொருவரும். வாழ்கையில் .....
தம் லட்சியங்களை அடைந்து ......
வெற்றி எனும் சிகரத்தை -தொட்டு ..
உலக நாடுகளின் பட்டியலில் ...
இந்திய இந்திய என்று -அனைவரும் ...
புகழும் நிலையின் சிகரத்தை ...
எட்ட -ஆவலை தூண்டும்.-
நம்பிக்கை ஊட்டும் உமக்கும் .....
உம் -குழுவினர்க்கும் உங்கள் ...
பயணம் சிறப்புடன் முடிவு ...
பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
***************************************************

நட்பு
தோழிகளாக இல்லாவிட்டாலும் ....
எங்கேயோ பிறந்து எங்கேயோ ...
வளர்ந்த நாம் இங்கே சந்தித்து -கொண்டோம் ...

நமை இணைத்த நட்பு பாலமாக ..
இணையதளம் இருந்தாலும் .....
இறுதிவரையோ இந்தநிமிடமோ ..
தொடருவது இறைவன் -செயல் ...
இருந்தும் இருவரும் நலம் ..
விசாரித்து கொள்கிறோம் எப்போதும் ....
என்றோ எப்போதோ சந்தித்தாலும் .....

கடவுளின் கருணை நம்மையும் ...
சந்திக்க செய்தானே என மனம் -மகிழும் ....
மீண்டும் அவரவர் பாதையில் ....
பயணத்தை தொடர்ந்தாலும் ....

எப்போதாவது மீண்டும் நாம் -சந்திக்க
வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொள்வோம் ...
மனதில் ஒரு வலி எற்பட்டாலும் ....
மீண்டும் நாம் சந்திப்போம் -என்ற....
நம்பிக்கை உண்டு நிச்சயமாக ...
நம் குழந்தைகளின் திருமணம் ..
நம் நட்பு பாலத்தை பலப்படுத்தும்
**********************************************

காதல்
காதலே காதல்லே நீ போய்விடு ....
காலத்தை அழிப்பாய் போய்விடு ...
கவிதையை கவிதையை தூண்டாதே...
கடமை செய்வதை தடுக்காதே ....
கடவுளை வெறுக்க செயாதே ...

உயிரை உயிரை எடுக்காதே ...
உலகத்தை விட்டு பிரிக்காதே....
பாச்சத்தை நேசத்தை அழிக்காதே ...
பாவத்தை நீயும் சேர்க்காதே ...
உன்னை மட்டும் நேசிப்பதே .....
உலகம் என்று உணர்த்தாதே
***********************************************
மரணம்
பொழுதுகள் தினம் விடிந்தாலும்......
மாதங்கள் கடந்தாலும் ...
வருடங்கள் ஓடினாலும் .....
ஆயுள் மட்டும் முடியத்தான் -வேண்டும் ..
அப்போதுதான் உம் -சந்ததியும் ...
எல்லோருடைய சந்ததியும் ....
உருவாகி வளர்ந்து ....
அவரவருடைய குல பெருமையை .....
ஊருக்கும் நாட்டிற்க்கும் உணர்த்தலாம் ...
அதனால் மரணம் என்பது ...
நிச்சயம் வேண்டும் எல்லோர்க்கும் ....
முடிவு என்று ஒன்று இருந்தால் தான் ...
ஆரம்பம் என்று ஒன்று இருக்கும் ...
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால்தான் ...
முடிவு என்று ஒன்று ஏற்ப்படும்

**********************************************
பட்டாளம்
மழலை பட்டாளம் -ஒன்று....சேர்ந்தால்
அவைகள் இருக்குமிடம் இரண்டுபடும் ....

இளைனர் பட்டாளம் ஒன்று -சேர்ந்தால் ....
கூத்தும் கும்மாளமும் -கேலியும் ...
கிண்டலுமாய் ஆட்டமும் -பாட்டுமாய் ...
அந்த இடம் இரண்டுபடும்...

பெண்கள் இரண்டுபடும் ஒன்று -சேர்ந்தால் ..
உடை பற்றியும் நகை பற்றியும்....
அழகை பற்றியும் ஆசையை பற்றியும்....
சமூகத்தை பற்றியும் நாகரீகத்தை ....
பற்றியும்- பேசி அந்த இடம்-..இரண்டுபடும்..

ஆண்கள் பட்டாளம் ஒன்று சேர்ந்தால்....
அரசியலும் சினிமாவும் ....
ஆன்மீகமும் விஞானமும் ....
கருத்துகளும் கலந்துரையாடலுமாய் ....
அந்த இடம் இரண்டு படும் .....

ஆனால் -ராணுவபட்டாளாம் ஒன்று சேர்ந்தால்....
அங்கு -பீரங்கி , வெடிகுண்டுகளின் முழக்கமும் .....
துப்பாக்கிகளின் வெடி சத்தமும் .....
அலரல்சத்தமும் ஆவேச முழக்கமும்மாக ...
அந்த இடம் இரண்டு படும் ......

முன்பு சொன்ன பட்டாளங்களின் ....
நடைமுறைகள் எல்லோரும் விரும்புவது .
ராணுவ நடைமுறையோ எல்லோரும்..
வேதனை கொள்வது -இதில் ....
சந்தோசமாய் இருந்த எத்தனையோ --
உயிர்கள் நொடிக்கு நொடி இறக்கபடலாம் ....

இந்த இடமோ ரத்களரியகவும் ..
அழுகையும் ஒலக்குரலாகவும் ....
வேதனையால் இரண்டுபடும் ...
இந்த பட்டாளங்கள் ஒன்று சேர்ந்தால்
அங்கு சந்தோசத்திற்கு இடமேது ... ..
**********************************************************
பூ
உன் -காதலியன் கூந்தலுக்கு" பூ"..
பறிக்க தோட்டம் சென்றது -ஏனோ?
காசு இல்லாததால் ஓசியில் ..
அவளை சந்தோஷ படுத்தவா ..
அந்த -பூகளைத்தான் ஏற்கனவே...
குத்தகைகாரன் ஏலம் எடுத்து -இருப்பானே ....

நீ- காசு கொடுத்து வாங்கினால் தான் ....

அந்த பூவுக்கும் மரியாதை ...
அதை கொடுக்கும் உனக்கும் மரியாதை....
அதை வாங்கும் உன் காதலிக்கும் -மரியாதை ...
கஷ்டப்பட்டு ஒரு முழம் -பூவாவது ...
மணைவிக்கு வங்கி தருவாய்...
கடைசிவரை அவளை -நீ ..
காப்பாற்றுவாய் என -உன் ..
காதலி உன்னை நம்பி -தனை
உன்னிடம் ஒப்படைபாள்

************************************

அன்பு நிலா
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ...
தூரத்தில் தான் -நிலா ..
ஓடும் நீரிலும் ,பாடும் அழகிலும் ....
படிக்கும் வரியிலும் .,பால் நிறத்திலும்.... ....
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ....
தூரத்தில் தான் -நிலா .....

அதனுள் சென்று வந்தாலும் ...
அங்கு வாழ யாரும் - இன்னும் ...
செல்லவில்லை ஏனோ- தெரியவில்லை ?

ஆனால் -.நான் இருப்பதோ ...
ஒரு -முழுநிலவின் உயிரிலே,.....
ஒளிவட்டமும் பிரகாசமுமாய் ...
எப்போதும் -என்னை அரவணைக்கும் ...
அன்பு நிலாவின் உயிர் -நான் .....

பெயரில் மட்டும் பூரண சந்திரன் ....
இல்லையே -என்னவர் எப்போதும் ...
வாழ்விலும் -பூரணமாய் திகள்பவ்றே...
குட்டி நிலவாய் பிறந்து .....
வளர்பிறையாய் வளர்ந்து ....
எப்போதும் பொவ்ர்ணமியாய்...
திகள்பவ்றே என் உயிர் -நிலா ...

யார் முகம் வாடினாலும் -அந்த ..
நிலவின் பிரகாசம் ஒளி இழந்து விடும் .. .. ..
தன்னை சுற்றி இருப்பவர் யாராகினும் ...
தான் ஒளியால் பிரகாசிக்க -செய்வதே ...
அவருடைய அன்பு குணம் ...
உண்மை நிலவில் தோன்றும் ...
சிறு கலங்கலான தோற்றம்போல்


அவர் -கோபக்காரராய் இருந்தாலும் .....
அவரின் -கோபத்தின் உண்மை உணர்ந்து ...
யாருமே அடங்கிபோவனறே ..
எத்தனையோ குடும்பங்கள் ...
இவர் -ஒளியில் பிரகாசிப்பதோ ....
எப்போதும் -எனக்கு பெருமைதான் ..
எம் -இருவரின் குறிகோளும் ...
ஒன்றுதான் எப்போதும் ...
என் -உயிர் இருக்கும் ....
நிலா -என்னை விட்டு மறைந்தாலும் ...
அல்லது -நான் நிலவை......
விட்டு மறைந்து போனாலும் ........
ஒருவரை பிரிந்து ஒருவர் -வாழ்வது ...
இயலாத காரியம் -அதுதான் ....
உண்மையும் கூட இதுதானே...
எங்கள் பந்தத்தின் அன்புநிலை


****************************************

கண்ணாடி வளையல்
கண்ணாடி வளையல்....
கை குலுங்கும் வளையல்...
காளையரின் மனதில் .....
கல் வீசும் வளையல்....
கண்ணிபெண்ணின் மனதில் ...
காதல் செய்யும் வளையல்.....
குட்டி பெண்ணின் கையில் ...
கும்மாளம் இடும் வளையல்..
கல்யாண பெண்ணிற்கு -மனம் ..
கலகலக்கும் வளையல் .....
சீமந்த பெண்ணிற்கோ....
வளைகாப்பு வளையல்.....

பெண்ணிற்கோ இத்தனை ..
இத்தனை சந்தோசம் தந்த .....
வளையல் -வேதனையும் தருகிறதே...
அவளை கைபிடித்த கணவன் ....
இறந்துவிட்டால் அவனோடு -அவள் ...
சந்தோசம் போய்விடுவது நிட்சயமே ...

அவனோடு அனுப்ப பூவை எஅடுது ...
பொட்டை அழிப்பது சம்பிரதாயம் ..
என்றாலும் -அவள் கை நிறைய ...
கண்ணாடி வளையலை போட்டு ....
கடைசியாக அழகு பார்த்து ...
அவள் -கை பிடித்து வளையலை..
கல்லால் உடைத்து நொறுக்கும் -போது ..
அவள் -மனம் எப்படி நொறுங்குகிறது ...--
யாருமே -இதை உணர மாட்டாரோ ....

பிறந்த முதல் அணிந்த வளையலை...
விதவை என்றதும் பிறிவது - முறையானாலும் ...
வளையல் போட்டு கல்லால் உடைப்பதை ..
தவிர்த்து -போடாமல் விடலாமே.....
அன் நிலையில் தான் வாழ்கையில் ...
அநுபவித்த எல்லா சந்தோசங்களையும்

நொறுங்கிபோனதை நினைத்து ...
அவள் மனம் கலங்கி துடிப்பதை ....
பார்தாலே பார்போர் மனம் ...
கதறி அழுகிறது கல கலப்பான ...
அவள் -சந்தோஷ சத்தம் .,,
அந்த நொறுங்கிய வளையலோடு ...
போய்விடுகிறது அவள் கணவனோடு
************************************************************
அறிவு
மனிதருக்கு ஆறு அறிவு ....
சொல்வது மனிதர்கள் ...
தம்மால் பேசமுடியும் -என்பதால் ...

மனிதர்கள் ஏன்மிருகங்களுக்கு ஐந்து அறிவு ....
இதை -சொல்லவதும் ?
மிருகங்களால் பேச முடியாது -என்பதால் ....

காட்டில் வாழும் மிருகங்கள் -தான் ..
கூட்டமாய் வாழும் .கூட்டமாய் ஓடும் ...
கூட்டமாய் உண்ணும் .கூட்டமாய் உறங்கும் ..

வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் .....
மனிதனின் சொல்படி நிற்பது ...
நடப்பது உண்பது உறங்குவது...
செய்வது எல்லாமே மனிதரின் -இஸ்ட்டபடி ...
மனிதன் கற்று தருவதை -நன்றாக ...
கற்றுக்கொண்டு அவனைவிட சிறப்பாக.....
செய்து -அவனுக்கு புகழையும் ....
பணத்தையும் தேடி தருகிறது ...

அந்த -மிருகங்களுக்கு மட்டும் ....
வாய் -என்று ஒன்று இருந்தால் ....
.ஏய் - மனில் புதைந்து மண்ணை ..
போகும் -மானிட ஜன்மங்கலே....
நாங்கள் -உணவிற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுகிறோம் .....
வேறு -வழியில்லாமல் ..
நீங்கள் -பணத்திற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுவது நீஆயமா ...
நாங்கள் -உயிர் வாழ உயிர்களை ...
கொள்கிறோம் வேறு வழியில்லாமல் ...

நீர் உம் குலம் வாழ உயிர்களை -கொல்வது ...
எல்லா வழிகளும் தெரிவதால் ....
நாங்கள் தனித்து இருந்தாலும் .....
கூட்டமாக தான் வாழ்கிறோம் ...
நீர் -கூட்டமாக கூடினாலும் ...
தனி தனியாக வாழ்வது -உம் ...
சுய நலன்களை கருதி .....
மிருக வதை சட்டம் -என்பீர்கள் ...
புளுகிராஸ்என்பீர்கள்-எங்களை ....
காப்பாற்றுகிறோம் என்பீர்கள் ...
ஆனால் -நீங்களேஎங்களை-உம் ..
வீட்டு செல்ல பிராணிகளாய் -வளர்ப்பீர்கள் ..
யாமந்த ஆடு கோழி ,மாடு .பன்றிகளை ...
வெட்டி -உணவாக சமைபீர்கள் ....
ஊருக்கு விருந்து வைப்பீர்கள் ...
ஏன் - சிங்கம் ,புலி யானை ..
இதையெல்லாம் உண்பதில்லை ....
இவைகளை -நெருங்கினால் அவை ....
உங்களை உண்டுவிடும் என்பதால் ....
இருந்தாலும் விடுகிறீர்களா ....
அவைகளையும் தந்திரமாக -பிடித்து ...
கொன்று தொலையும் தந்தத்தையும் ..
விற்று பணம் பார்த்து கொள்கிறீர்கள் ....
நீங்கள் மட்டும் இறக்கும் போது ...
உம்முடன் -அந்த பணத்தை போட்டு ..
.புதைகிரார்கள இல்லையெ -உம் ..
கடைசி பயணத்தில் உம் -நெற்றியில் ..
ஒரே -ஒரு ரூபாய்தான் ஓட்டபடுகிறது ...
அதவும் -சுடுகாட்டில்
வெட்டியான் எடுத்து கொள்கிறான்



அத்தனை கஷ்டபட்டு வாழ்ந்து .....
கடைசியில் அந்தஒரு ரூபாய் கூட ...
சொந்தம் இல்லை உங்களுக்கு ....
அதற்க்கு நீங்களும் எங்களை- போல் \
வாழ்ந்து பாருங்களேன் கடைசியில் ...
சந்தோஷமாவது மிஞ்சும் ....

இதில் உங்களுக்கு ஆறு அறிவு .என்பதும் ...
எங்களுக்கு ஐந்து அறிவு -என்பதில் ...
என்ன சந்தோசம் உங்களுக்கு ...
நாங்கள் எப்படியோ வாழ்ந்து
தானாகவோ கொல்லபட்டோ சாகிறோம் ...
உங்களை போல் கச்டபடாமல் ....
நீங்களோ கஷ்டப்பட்டு வாழ்ந்து ...
தானாகவோ இல்லை யாராலையோ ....
கொல்லப்பட்டு சாகிறீர்கள் .....
உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே...
ஒரு வித்தியாசம் தான் ....
பேச முடியவில்லை என்பது ...

( கூடி வாழ்தல் கோடி நன்மை )
( இல்லாதவருக்கு குடுத்து வாழ்தல்
குலத்திற்கே நன்மை
***************************************
******************************************
மேகம்
நீல வண்ண மேகமே ..
உன் -ஆரம்பம் எங்கே....
உன்-முடிவுதான் எங்கே...
உன்-உள்ளே பரவி கிடக்கும் ...
வெண் பொதிகை கூட்டங்கள் ...
வண்ண புடவையில் -வெண் பொட்டு ..
வைத்து போல் எப்போதும் -இருகிறதே..

காலை கருகலில் விடியலை ...
உணர்த்தும் சூரியனோ ..
மெல்ல மெல்ல வெளிச்சம் -போட்டு..
உலகத்தை விழிப்புற செய்கிறான் ..
தண் -கதிர்களின் உஸ்நத்தால் ...
எல்லோரையும் சுறுசுறுப்பு ...
அடைந்து வேலை செய்ய -செய்கிறான் ....

மெல்ல மெல்ல நிறம் மாறி ...
அனைவரையும் மெல்ல மெல்ல ...
களைபுற செய்து மாலையில் ....
மறைந்து போகிறான் உன்னில் ..
தோன்றும் உன் உறவு சூரியன் ....

மாலையில் அந்தி சாய்ந்ததும், ..
மற்ற உறவுகளான சந்திரனும் ...
நட்சத்திர கூட்டங்களும் ....
வானில் உன்னிடம் கொஞ்சுகின்றன ..
இந்த -காட்சி உலக மக்களுக்கு ...
மனதில் சந்தோசத்தையும் ....
மகிழ்சியையும் தருகிறது ..

இன் நேரத்தில் எத்தனை -கவிதைகள் ...
எத்தனை கவினர்கள் உருவாகிறார்கள் ...
எத்தனை பாடல்கள் உருவாகிறது ...

உனக்குத்தான் எத்தனை சிறப்பு ..
சொல்லிக்கொண்டே போகலாம் ..
மனிதர்களும் ஜீவா ராசிகளும் ...
தினம் தினம் பிறக்கலாம் தினம் தினம் இறக்கலாம் ...
புதிது புதிதாய் காட்சிகளும் ....
வாழ்கையும் மாறிக்கொண்டுதான் ..
இருக்கிறது -ஆனால் நீயும் ...
உன் -உறவுகளான சூரியனும் ...
சந்திரனும் நட்சத்திர கூட்டங்களும் ....
எப்போதும் மாறாமல் இருபதால் -தான் ...
இன்னும் நிலா சோறு ...
நட்சத்திர கதைகள் ...
மாறாமல் வழி வழியாய் ....
குழந்தைகளுக்கு சொல்லபடுகிறது
*************************************
தேடுதல்
வேட்டைகாரன் தன் -...
வேட்டையை தேடுதலும்....
ஏழை தனக்கு பணத்தை -தேடுதலும்...
விவசாயி மகச்சூலை -தேடுதலும்...
பணக்காரன் நிம்மதியை -தேடுதலும்...
தாய் பாசத்தை -தேடுதலும்.....
குழந்தைகள் ஆதரவை -தேடுதலும்...
வேலை அற்றவர்கள் வேலை-தேடுதலும்...
போலீஸ் கள்வரை - தேடுதலும்...
கள்வர் கன்னம் வைத்து
பொருள் -தேடுதலும்.....
தேடுதல் எத்தனை எத்தனை -இருப்பினும் ...
இவை -அத்தனையும் ....
நிறைவேருதல் உண்மையே .....
ஆனால் -நட்பு மட்டும் ..
தேடுதல் இன்றி தானே -கிடைப்பது ..
தேடி கிடைக்கும் -நட்போ ...
தேவை முடிந்ததும் முடிந்து -விடும் ...
தானாய் வந்த நட்போ-பிரிந்தாலும் ...
மீண்டும் தானாய் இணைந்து -விடும் ..
இதுதான் உண்மை நட்பும் கூட ..
இந்த நட்பை நானும் -உணர்ந்தேன் ..
இந்த சாட் பகுதியன் மூலம் ....
அந்த -நட்புக்கும் புரியும் ...
இது -உண்மை என்று ...

**************************

சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா
*************************
கஷ்டம்
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....

திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....

பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...

பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....

வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....

ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....

கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......

கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....

செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....

செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
கு
ழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....

குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...

பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...

ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...

கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...

எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு

அதை அடைவது கஷ்டம்....
எல்லாம் இறைவன் செயல் ....
இன்னார்க்கு இன்னாரென்று ....
நம் -பிறப்பின் போதே.-பிரம்மன் ...
விதியை நம் தலையில் எழுதி ....
அனுப்புவதும் எமன் அதை
செய்து முடிப்பதும் ....
நம் வாழ்கை தத்துவம் ...
அதன் படி நடப்பது உத்தமம்
**********************************
கவிதை
நம் -வாழ்க்கையோ ....
ஒரு கவிதைதான் ....
அதன்-வரிகளோ
நாம் வாழும் முறைகளாம் ..
வார்த்தையோ நம் விதிகளாம் ....
அதில் -நன்மையும் இருக்கலாம் ...
தீமையும் இருக்கலாம் ....
ஆனால் -கவிதையின் முடிவு ...
மட்டும் -அந்த எமனின் கையில்

****************************************
புறா
அமைதியின் சின்னம் -புறா ...
சமாதானத்திற்கு தூதூ -புறா ...
வீட்டு கூட்டில் கூட்டு -புறா ...
அமைதிக்கும் சமாதானத்திற்கும் ..
சின்னமாக இருந்து -புறா ....
அமைதி காப்பதால் -அதன் ..
விருப்பமின்றி மாறுகிறது ...
ஓட்டலில் மாறுகிறது ...
ரோஸ்ட்டு புறாவாய்
************************************

விரும்புதல்
நீ -விரும்ம்பும் ஒன்றை விட .
உன்னை -விரும்பும் ஒன்றை -
ஏற்று -வாழ்ந்து பார்...
உண்மை அன்பும் உறவும் ...
புரியும் உனக்கு -நீ ..
முகம் பாராமல் வரிகளில்- பேசும் ,,,
காதலை விட முகம் -பார்த்து ....
மனம் அறிந்து ஏற்கும் காதல் -உயர்ந்தது ..
இக் காதலே சாதலிலும் ...
ஒன்று சேற துடிக்கும் ....
உலகில் -எத்தனையோ ஏமாற்று ....
வேலைகள் நடக்கின்றன ...
உம்- திட மனதை கலங்க விட்டு ...
கடைசியில் பித்தனாகி விடாதே ...
இதுவே -வாழ்கையும் இல்லை ...
காதலும் -கானல் நீறே -வயது ....
கோளாறினால் தோன்றும் ஆர்வம் ...
உண்மையையும் பொய்மையையும் ..
ஆராந்து ஏற்றல் அவசியம் ..
மனதை -தொலைத்து விட்டு ...
.அதை -தேடுதல் வேண்டாம் ...
உன் -வாழ்வையும் குடும்ப...
நிம்மதியையும் தொலைத்து விடாதே...
நடப்பது நன்மைக்கே -இறைவன் ..
விட்ட வழி என்று -உன் மனதை ..
திடபடுத்து நிலைபடுத்து ...
இல்லையோ நீ மனம் கலங்கி ....
அறிவு மழுங்கி மதி மயங்கி ..
பித்தனாவாய் நீ பித்தனாவாய்..
எதையும் தாங்க உன்னை -நீ ..
உறுதி படுத்து நீ உறுதி படுத்து
*********************************************

பெண்ணின் கண்கள்
அம்மா பெண்ணின் கண்களில் ....
அன்பு இருக்கும் ......
அக்கா பெண்ணின் கண்களில் ...
பாசம் இருக்கும் ...
தோழி பெண்ணின் கண்களில் ...
நட்பு இருக்கும்.....
ஆசை பெண்ணின் கண்களில் ...
காதல் இருக்கும் ....
உறவு பெண்ணின் கண்களில் ....
நேசம் இருக்கும் ..
எதிரி பெண்ணின் கண்களில் ...
கோபம் இருக்கும் .....
பத்தினி பெண்ணின் கண்களில் ...
நெருப்பு இருக்கும்
**********************************

குழந்தை
குழந்தை நம் குலம்....
வாழ வந்த வாரிசு ...
இல்லறத்தின் இனிமையை ....
உணர்த்த வந்த வாரிசு ...
என் -கண்மணி நீ தூங்கு ...
உஸ் -தூங்கும் குழந்தையை ....
எழுபாதே அது உறக்கம் ....
கலைந்து அழும் -அதை ...
பார்த்து நானும் அழுவேன்
********************************
கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும் .....

**********************************************

ஸ்ரீதர் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

உப்பில்லா பண்டம் குப்பையிலே ..
எனும் - பழமொழியை பொய்யாக்கும் ....
உப்பளம் நிறைத்த கடற்கரை மாநகரம் ...
தூத்துகுடியில் பாலுராஜ் தேவருக்கும் ....
உமையாள் ஸ்ரீதேவி அம்மைக்கும் ..
முத்துக் குளியலில் பிறந்திட்ட நல்முத்து ..
உன் -நாமமோ ..ஸ்ரீதர் -என ......
திருமாலின் அம்சமாய் அமைததுவே ......
இருபத்தி நான்காவது பிறந்தநாள் .....
காணும் உனக்கு நாளை -விடியும் ....
விடியல் இனிமையாகவும் .....
சந்தோசமாகவும் விடியட்டும் ...
இந்த ஆண்டு பிறந்த நாள் ...
ஏதோ நினைவலைகளுடன் தென்றலுடன் ....
காற்றாய் கலந்து மறைந்தாலும் ....
அடுத்து வரும் பிறந்தநாள் ....
உம் -வாழ்கையின் மறு பிறப்பாய் ....
திருமணத்தில் மலரட்டும் ...
அதற்கடுத்து வரும் ஆண்டோ ...
உம் -சந்ததியின் தொடக்கத்தை தொடரட்டும் ..
தொடர்ந்து வரும் பிறந்த நாட்களில் ...
உறவின் சூழ்நிலைகளில் கலந்து ..
சுக துக்க சந்தோசங்களையும் ...
வாழ்கை நெறிமுறைகளை அடைந்தும் ..
சந்தொசமாகவே தொடரட்டும் ..
நீர் வாழ்க உம் குலம் வாழ்க ..
உம் புகழ் என்றென்றும் வாழ்க ************
***************************************

கருத்துகள் இல்லை: