ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavithai

காயத்திரி
உன் பால்வடியும் முகமும் ....
பவமான பார்வையும் ...
அப்பாவித்தனமான தோற்றமும் ....
என் மனதை கொள்ளை கொண்டு ...
போனதடியே என் கிராமத்து சிட்டே ....

உன் உருவத்தில்லே கிராமத்து .....
மண்வாசனை மணக்குதடி பெண்ணே ....
காயத்திரி உன் பெயரோ .....
காயம் பட்டு திரிகிறதே ...
உன் -நினைவால் என் மனமே ....
நாகரீகம் அறியா கிராமத்தில் ....
படிப்பின் முக்கியமுணர்ந்து ....
படிப்பு தந்த பெற்றோர்களுக்கு ....
நான் நன்றி சொல்லிடுவேன் .......

பள்ளியில் உன்னை பார்த்த ....
நாள் முதலே உனது ரசிகனானேன் ....
உன்னை என் நட்பாக வரித்து .......
இருவரும் பழகினோம் தோழமையாக ...
பள்ளி படிப்பு முடிந்து நான் ....
கல்லூரியில் சேர்ந்தபின்னும் ...
என் மனம் உன் நட்பையே தேடியது....

நீயும் அடுத்த வருடம் ...
என் கல்லூரிக்கே படிக்க வந்ததும் ...
நான் தேன் குடித்த வண்டாக மயாங்கினேன்....
ஆனாலும் உன்னை நேசிப்பதை ...
சொல்ல தைரியம் இல்லாது ...
குடும்ப சூழ்நிலை காரணமாக ....
படிப்பு முடிந்ததும் ..வெளிநாட்டில் ...
வேலைக்கு சென்ர்றேனே..-அங்கு ...
எத்தனையோ கவர்சிகளை கண்டபோதும் ....

என் -மனம் உன் கிராமத்து உருவத்தையே ...
எண்ணி எண்ணி மயங்குகிறது கண்ணே .....
நீயும் படிப்பு முடிந்து குழந்தைகளுக்கு ...
கல்வி புகட்டும் பணியில் அமர்த்து ...
கேட்டு மிக்க மகிழ்வு கொண்டேனே...அன்பே ..
என்போல் நீயும் எனை நினைப்பாயோ ...

இல்லை -அந்த ஹரியை கும்பிடும் போதாகினும் ...
இந்த ஹரியை நினைத்திடுவாயோ கண்ணே ..
உன்னால் காயம் பட்டு திரியும் ....
என் மன காயத்திற்கு மருந்து ....
போடுவாயோ கண்ணே கயத்திரியே
********************************************
கம்பன்
கம்பன் வீட்டு ....
கட்டுத்தறியும் கவிபாடுமாம் ....
அந்த -கம்பங்காட்டு........
கம்பந்தட்டை...கவிபாடுமா ..
உண்மையில் கவிபாடுமா
*
**************************************

மரம்
பட்ட மரம் துளிர்காது
முறிந்த மரம் ஒட்டாது ..
உடைந்த மரம் விறகாகும்
விறகோ எரிந்து கரியாகும்
கரியோ எரிந்து சாம்பலாகும்
சாம்பலோ செடிக்கு உரமாகும்
செடியோ நமக்கு உணவாகும்
**********************************************

ஆரம்பம்
எவற்றின் தொடக்கமும் -ஆரம்பமே ......
தொடக்கம் தொடர்ந்துகோண்டே இருக்கும்
இதற்கு முடிவு கிடையாது .....
தொடர்ந்துகோண்டே இருக்கும் ......
தொடக்கத்தை நாம் முடித்தால்
அதற்க்கு முடிவு கிடைக்கும் .....ஆனால்.
முடிவோ நம் கையில் ....
முடியும் என்று நினைத்தால் -ஆரம்பம்
முடியாது என்று நினைத்தால் -முடிவு
***********************************
வெற்றி
வெற்றி இல்லாத வாழ்கையும் -உண்டு....
தம் - செயலில் தோல்வி கண்டவனுக்கு ....

வெற்றி மட்டுமே -தம் ....
வாழ்க்கையாகவும் உண்டு -சிலருக்கு ...
தன்- வாழ்கையில் சாதிப்பவனுக்கு ....

வழிகிடைக்கும் வரையில் -நாம் ...
ஓடலாம் வெற்றியை தேடி .....
வாழ்வில் ஜெயித்தும் - காட்டுவோம் ....
என்றும் நாம் போராடி ......

*****************************************

ஓடுதல்
எப்போதும் ஓடுகிறோம் -நாம் ....
வேலை துரத்துகிறது -நம்மை ....
எதை துரத்துகிறோம் -நாம் ...
பணத்தை குறிவைத்து ......
ஓடிக்கொண்டே நீர் -எமக்கு ....
சொன்ன அவசர வணக்கத்திற்கு ...
வந்தனம் சொல்கிறேன் -நான்

********************************************
விடியெல்
காலைக் கருக்கலில் ...
விடிவெள்ளி தோன்றும் -நேரத்தில் ....
காகங்களின் கரைசலும்....
குளுமையான காற்றும் ....
நம்மை சுறுசுறுப்பு
அடைய செய்கின்றதே......
அதிகாலை ஐந்துமணிக்கு -ஏழுந்து
பரபரவென்று பம்பரமாய் சுழன்று .....
வீட்டு வேலைகளை முடித்து ...
கணினியின் முன் அமர்ந்து .....
இருந்த இடத்தில் இருந்து .....
தோழிகளான உங்களுடன் பேசுவது ....
எத்தனை எத்தனை சந்தோசம் ..
சாமானிய பெண்களாகிய -நாம்
சாதனை பல படைப்போம் ....
ஒன்று சேர்ந்து ..-இது
கடவுள் நமக்கு கொடுத்த ....
வரமென்று நினைப்போம் .....
லதா சந்திரன்
***********************************
விடிவு
விடிந்ததும் தெரிந்தது -நான் ....
கண்டது கணவுதான் -என்று ...
எதர்க்காக ?-நான் கண்டகணவை .....
கட்டாயம் செய்து முடிப்பேன் - என்று
வாழ்வு முடியும் வரை -என்றும் ....
தெரிந்து கொள்வேன் -வாழ்கையை...
எப்படி வாழ்வதென்று


*********************************************
தாஜ் மஹால்
பணம் இருந்ததால் கட்டினான் -ஷாஜகான் ......
தன் - காதலிக்காக -தாஜ் மஹாலை .... ......
அதில் -என்ன பயனோ .....
அந்த - காதலியுடன் அவன் ....
வாழவில்லையே கடைசிவரை ....

அவளுடனே சாகவில்லை ....
அவனும், அப்போதே .....
இறந்துபோன காதலியின்
.நினைவுகளை ...எப்போதும்
சுமந்தாநே தன் நெஞ்சில் ...

அவன் கட்டிய -தாஜ் மஹால் ..
இன்று -காதல் கண்டவர்க்கும் ....
இன்று -தோல்வி கண்டுகொண்டு ....
இருப்பவர்க்கும் நினைவு சின்னமாக ....
நிலைதிருப்பதே என்றும் -மிச்சமாகும் ...
...
அவன் பெய்ர்சொல்ல -அவன் ...
வழிமுறையாக சந்ததிகள் -இல்லையே ....
ஆனால் -அதை கட்டிய கொத்தனார்களின் ....
வழித்தோன்றல்கள் இன்றும் ,,,,
பெருமை படுகின்றனர் -தம் ...
தாத்தன் முப்பாட்டனது உழைப்பு ...
தாஜ் மஹாலின் அழகை -இன்றும் ..
புது பொலிவுடன் காட்டுகிறது -என்று ..

பையில் பணம் இருந்தால்தான் ....
காதலியின் கழுத்தில் -தாலி ...
கட்டமுடியும் என்பதில்லை -நண்பா ....
நல்ல மனம் இருந்தால் -போதும் ...
எந்த செயலும் நன்றாகவே-நடக்கும் ...
நன்மையில் தான் முடியும்**
******************************************

ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்


கொடை
தான் சென்ற பாதையில் ....
படர இடமில்லாமல்- தரையில் ....
படர்ந்து கொண்டிருந்த
முல்லை -கொடிக்கு ...
தான் -வந்த தங்க தேரையே....
கொடி படர்வதற்கு -இடமாக ....
கொடுத்து படரவிட்டான் ....
கொடை வள்ளல் பாரி -அன்று ....

சில -சாமி சந்ததிகளில் ....
குடும்பத்துடன் தங்க தேர் இழுத்து .....
நிலைநிறுத்தும் அனுமதியும் ...
.கிடைக்கிறது இப்போது -எப்படி ?
அவர்கள் சன்னதிக்கு தரும் ....
பெரும் நன்கொடைகளால்
*********************************************
மழை
திடீரென்று வந்த மழையில் -எளுந்த .....
மண்வாசனை மனதைமயக்குகிறது ......
குளுமையான காட்றோ -புது ..
கவிதை எழுத் தூண்டுகிறது ....
மழை தூர்ரலோ -மனதை ...
பின்னோக்கி அழைக்கிறது ....
.....
கிடு கிடு என இடிக்கும் -இடியோ ...
பயத்தை ஏற்படுத்துகிறது ..
சிறுவயத்தில் இடிக்கு -பயந்து ....
அம்மாவின் சீலை முந்தானையில் ...
ஒளிந்தும் - மழைநீரில் ..
குதித்து குதித்து -ஆடியதும் ...

தெருவில் ஓடும் நீரில்சகோதரிகளுடன்.
.காகித கப்பல் -விட்டதும்...
.ஐஸ் கட்டிகளை -கையிலும் ...
பாத்திரத்திலும் பிடித்ததும் ....
அருகிருந்த ஓடையில்.......
மீன் -பிடித்ததும் ......

மழையில் நனைந்ததால் .....
ஜுரம் வந்ததும் -அதற்க்கு ...
அம்மாவிடம் வாங்கிய அடியும் ...
சுரத்திர்க்கு டாக்டர் போட்ட -ஊசியும் ....

மீண்டும் மழையைபார்த்தால்- ஓடுவதும் ....
எல்லாமே ரம்யமாய் என் -நினைவில் ....
மீண்டும் மீண்டும் வருகிரதே ....
அந்த சிறுவயது சந்தோசம் ....
இப்போது மழையை -பார்த்தால் ....
கிடைக்கும் சந்தோசத்திர்க்கு ....
ஈட்டாகுமா ஈட்டாகுமா ....
சிறுவயது சந்தோசமோ ...நம்
மனதில் என்றும் நினைவாக

***********************************

ஆயுதம்
உன்னை கொல்ல ஆயுதம் .. ..
தேவை இல்லை பத்திரிக்கை -வடிவில்
கொஞ்சம் சூடான அல்வாவுடன் .....
வீணான செலவு எதற்கு ......
ஒரு துளி விசம் போதும் ..
நீ -குடிக்கும் தண்ணீரில் -
கலப்பதர்க்கு ...இல்லையோ ....
உன் -தவறுகளை சொல்லி ..
vaaiyaal திட்டினாலே போதும்
***************************************************
காதல்
காதல் பதில் சொல்ல காத்திருந்த -நீ .....
எனக்கு உன் .காதல்வலி சொல்லி -நீ ......
உன் - கவிதையை முடிக்காதே...

வலி மறக்க போகும் -நீ ..
வழி தொலைந்த பாதையில் ..
.புதிய சொந்தத்தை பார் ....
எதிரே தேடி வருவதை ...

அப்போது புதிய -காதலை ....
பார்ப்பாய் எதிரே-நீ .....
அதுவே -உன் வாழ்க்கைக்கு ....
கடவுள் தந்த பரிசு -என ...
ஏற்று கொள்வாயோ -தோழா

*******************************************

காதல்
வேலை இல்லாதவன் ....
நினைப்பது காதல் .....
இவன் இதை தவிர ...
மற்றதை வெறுப்பான் ....

வேலை இருப்பவன் ....
நினைப்பது குடும்பம் ...
இவன் இதை தவிற ...
மற்றதை வெறுப்பான்


***************************************************
கல்லறை
தொலைந்த காதல் என்பதை-விட .....
நாம் -அடைந்த காதலே மேல் ...
நம்மை விட்டு பிரிந்ததை -விட ../.
நம் -அருகில் இருப்பதை-நீ ....
நேசித்து பார்த்தால் .-உனக்கு ...
.
தொலைந்த காதல் -மீண்டும் .....
வரவே கூடாது என - தோன்றும் ... .
இது அனுபவிப்பவர்களுக்கு -புரியும் ....
அவர்கள் -கல்லறையை .....
நினைப்பதை விட்டுவிட்டு-எப்போதும் ....
எதிர் - காலத்தை மட்டும் ....
நினைத்தே வாழ்வார்கள்
************************************************
ஊணம்
உடல் ஊணம் உள்ளவன் -தண் ....
மனதில் பலவானாக -இருக்கிறான் ...
உடலால் பலவானாக -இருப்பவன் ...
மனதில் ஊனமாக ..இருக்கிறான்....

கணில்லாதவனோ தானே ....
இசையமைத்து பாடுகிறான் .... .....
கையில்லாதவனோ ஓவியம் வரைகிறான் .. ...
கால் இல்லாதவனோ கதை -எளுதுகிறான்...
கவிதை சொல்கிறான் .....
காவியம் படைக்கிறான் ....

பேச முடியாதவரோ-வேலைக்கு ....
சென்று பொருள் சேர்கின்ற்னர் ....
இவர்கள் எல்லோரும் இன்னும் -
எத்தனையோ .சாதனைகள் -தம் ..
வாழ்வில் செய்து இன்றும் ......
காவியம் படைகின்றனர் ....
உடல் பலவான்களோ -சிலர் ....
தம் -மனத்தால் ....
ஊனமானவர்களாக இருக்கின்றனர் ...
ஊமையாய் இருக்கின்ற்னர் ....
கண் இருந்தும் குருடர்களாய் -இருக்கின்றனர் .. .
இவர்கள் பார்வைக்கு குறைவற்று ...
இருந்தாலும் -வாழ்க்கைக்கு நிறைவற்ற்...
மனிதர்கள் ஆவார்கள் ....
குறை காணும் வாழ்க்கை வாழும் ..
குறை உள்ள மனிதர்களோ ....
நிறைவான வாழ்க்கை .....
வாழ்தலும் முடியுமே
************************************************

சாட் உலகம்
எண்ணங்களின் பரிமாறலும் ....
எழுத்துக்களின் பரிமாறலும்........
கவிதைகளின் பரிமாறலும்........
கதைகளின் பரிமாறலும் ...

சொந்தங்களின் பரிமாறலும்....
சோகங்களின் பரிமாறலும்......
பந்தங்களின் பரிமாறலும்......
பாசங்களின் பரிமாறலும்....

காவியங்களின் பரிமாறாலும்....
காலத்தின் பரிமாறலும்......
ஒரே இடத்தில் இருந்து .. ...
எத்தனை நொடியில் ...
பரிமாறிக்கொள்ள முடிகிறது ...
ஒருவர் முகம் .-மற்றவர் .....
பார்க்காமல் இந்த -கணினியின் ./......
சாட் பகுதி மூலம்
***********************************************
மனம்
உன் பாதம் பார்த்தபின் -ஏன்.
பூக்கள் மரத்தில் இருந்து
கீழே விழுகிறது -என்று...
உன் கவிதை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ...
நல்லவன் என்று ...
தென்றலுக்கும் பிடிக்கிறது
-உன்னை -
அது தழுவும் போது....
நீ எத்தனை
அது உன்னை தழுவும் போது
மென்மையானவள் என்று
உன்மனதை என்னால்....
உனர முடிகிறது ....
உன்னை காண முடியாமல் ...
ஏங்கி. தவிகிரனே .....
என் தோழா
*****************************************

மனம்
உன் -மனதை பார்த்தபின் தெரிந்தது ....
நீ- எத்தனை நல்லவன் என்று ....
உன்- கவிதையை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ....
மென்மையானவன் என்று ....

உன் வரிகளை பார்த்தபின் தெரிந்தது ..
நீ -உண்மையானவன் என்று ....
தென்றலுக்கும் தெரிகிறதே......
உன்-இளகிய மனம் ....

உன்-மனதை என்னால் ....
உணர முடிகிறது தோழா ,,
அதனால் - தான் நான் ....
பேசுகிறேன் எப்போதும் .....
உன்னுடனே உண்மை தோழா
*************************************************:
மரமும் மனிதரும்

மரத்திற்கும் மனிதர்க்கும் ...
ஒற்றுமை உண்டோ -எப்படி ?
பூமியில் விதை - ஊன்றியோ ..
அல்லது - சிறு செடியாகவோ ....
நட்டு வேர்விட்டு வளர்கிறது .....

மனித உயிர் -தாயின் ....
கருவில் விந்தாக உருவாகிறது .....
மரம் சிறு செடியாக -முளைத்து ....
வேர்விட்டு வளர்கிறது .....
.
கரு பிண்டமாக உருவாகி ....
உருபெற்று வளர்கிரதே ....
மரம் தனக்கு விடும் -நீரை ./..
உறிஞ்சி வளர்கிரதே.......
கரு தண் தாயின் -ரத்தத்தை ....
உறிஞ்சி வளர்கிரதே ....

மரம் சிறு செடியாக -முளைத்து ...
சிறிது சிறிதாக - வளர்ந்து ..
.மரமாக வளர்சிபெருகிறது ...

கரு பிண்டமாக வளர்ந்து ....
பத்து மாதத்தில் -குழந்தையாக
வளர்ந்து இப்பூமியில் -பிறக்கிறது ....
மரம் சிறிது சிறிதாக -வளர்ந்து ..
மரம்மாக மாறி -நமக்கு ...பூ
காய் கணிகளை கொடுக்கிறது ...

அதுமட்டுமின்றி விறகாகவும் ..
.கறியாகவும் சாம்பலாகி -இருதியில் .
.உரமாகவும் பயன் பட்டு -மீண்டும் .
.புதிய செடி கொடி மரம் ...
வளர்வதற்கு உதவுகிறது ....

குழந்தையும் சிறிது சிறிதாக ...
வளர்த்து மூன்று மாதத்தில் -குபுரக்கவிழ்ந்து ....
எட்டு மாதத்தில் தவழ்ந்து ...... ..
.பத்து பண்ணிரண்டு மாதத்தில் ...
எட்டு வைத்து நடைபயின்று .......
நடக்கிறது -கொஞ்சம் கொஞ்சமாக .....
வளர்ந்து -பருவத்தில் திருமணம் ....
முடித்து - புதிய சந்ததியை.....
உருவாக்கி -மீண்டும் மனிதர்களை ....
தோற்ருவித்து தம் பரம்பரையை ....
வாழையடி வாழையாக -வாழ்விக்கிறான் ...

மனிதர்கள் மறிந்து -போனாலும் ...
நல்குலத்தில் பிறந்தது -மக்களிடையே..
நல்மதிப்பு பெற்று இருந்தால் ....
அவன் புகழும் செயலும் .....
மரங்களைப்போல் மீண்டும் ...
மீண்டும் -அவன் வழித்தோன்றளின் ....
மூலம் -தொன்று தொட்டு பேசப்படும்
*****************************
நட்பு முறை

ஆணுக்கும் பெண்ணுக்கும் -இடையையே..
.ஏற்ப்படும் நட்பானதோ ....
எழுபதிலும் அதற்க்கு மேலும் ...
பழங்கதைகள் பேசச் சொல்லும் ...

ஐம்பதிலும் அதற்க்கு மேலும்....
நலம் விசாரிக்க சொல்லும் . ...
முப்பதிலும் நாற்ப்பதிலும்-அவரவர் ..
பொருள்லாதாற நிலைமையையையும் ....
உடல் நலனையும் விசாரிக்க -சொல்லும் ..

இருப்பதில் இருந்து முப்பது -வரை ....
எதிர்காலக் கணவுகளையும் ....
வாழும் முறையும் பேசச் சொல்லும் ..

பதினெட்டிலிருந்து இருபதுவரை .......
நட்பு என்று சொல்லும் ....
ஒற்றுமை என்று சொல்லும் ....
பிரிக்கமுடியாது என்று -சொல்லும் ..
கடைசியில் காதல் என்று -சொல்லும் ...

பதினைதிலிருந்து பதினேலு வரை ..
குறுகுறுப்பான எண்ணங்களும் ....
நமுட்டு சிரிப்பும் நக்கல் பேச்சும் ....
போடா வாடி என்றும் -ஒருவர் ....
சொல்லவதை மற்றறவர் கேட்க்க ...
வேண்டும் என்ற உரிமைநிலை -இருக்கும் ...

பத்தில் இருந்தது பதினாக்குவரை .....
பள்ளியை பற்றியும் பாடங்கள் பற்றியும்

வகுப்பு ஆசிரியர்கள் பற்றியும் ...
உடன் படிக்கும் மாணவ ....
மாணவிகள் பற்றியும் ....
பேசச் சொல்லும்.....

ஐந்திலிருந்து பத்துவரை .....
தனது போல தண் -நட்ப்புக்கும் .....
எல்லாம் கிடைக்க வேண்டும் என -சொல்லும் ...

இரண்டிலிருந்து நான்குவரை ....
ஒருவரிடம் இருப்பது போல் ....
தனக்கும் வேண்டும் என ....
அடம் பிடிக்க செய்யும் .......

ஒன்றுமுதல் இரண்டுவ்ரை ...
தொட்டுப்பார்த்து முகம் பார்த்து ....
வாய்விட்டு சிரிக்கச்சொல்லும்
*****************************************

கருத்துகள் இல்லை: