வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithaigal

கருப்பு

வண்ணங்களில் நீ தெறித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெறித்தால்
அதை அழகு என்பர்

எப்படியும் நீதான் அழகு என உணராத மூடர்கள்

*******************************************************

மின்னல்

பூமியை தொட்ட மினல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?
உன் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்தனவோ?

**********************************************

அன்பின் அடையாளம் நீ

அன்பிற்கு அடையாளமாய்
அளிக்க (அழைக்க )படுகிறாய் -நீ
உன்னை அழகு படுத்துவதும்
அசிங்க படுத்துவதும் மனிதர்களே

மனவறையிலும் சரி
பினவரையிலும் சரி
முன்னுரிமை உனக்குதான்
அன்பின் அடையலாம் என்று
**********************************************************
நீயும் நானும் ஒன்று
அலையில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலே -என்
நிலையும் உன் போன்றே

காதல் எனும் கடலில்
கரைசேர முடியாது
தத்தளிக்கும் என் -இதயம்

உன்னை கரை சேர்கக்
துடுப்பும் ஆளும் உண்டு
எனை கரை சேர்க்க -என்
காதலியும் அவள் காதலும்
தடை இன்றி கிடைக்குமோ?
**********************************************************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 11:43 pm 0 கருத்துரைகள்
தீக்குச்சி

தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்

உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!

*****************************************************************************
நிணைவுகள்

நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்

நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்

**************************************************************

தீ

தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்

காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்

**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?

**********************************************************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 11:41 pm 0 கருத்துரைகள்
வாகிங்கில் (சில வாட்சிங் )
வாகிங்கில் (சில வாட்சிங் )

வீதியில்லே கால்; பதித்து
தெருமுனையில் நடக்கையிலே
அவசர கோபுர தரிசனம் செய்யும்
வாகர்சின் பக்தியும் -அடடா !அடடா

துப்புரவாளர்களின் கூட்டும் பணியும்
வாசலில் கோலமிடும் தெரு -பெண்களின்
சிறு அரட்டைகளும் வம்புகளும்
சிரிப்புடன் கலையும் அவசரமும் -அடடா அடடா!

நாற்பதை கடந்தும் தொப்பை குறைய
ஹீரோவாய் சைக்கிளில் வலம் வரும்
அவசர அவசர மிதிபுகளும்
தெரிந்தவர்களை கண்டதும்
அவஸ்தைப்படும் முகமும் அடடா அடடா!

தெருவோரங்களில் டீக்கடையில்
பேப்பர் படித்துகொண்டு ஊர் கதை பேசும்
பெருசுகளின் பொக்கைவாய் சிரிப்பும் நக்கலும்
தண்ணீர் பிடிக்க அவசரப்பட்டு
சண்டையிடும் கீழ்தட்டு மக்களின் அவசரமும்
சமாதானமும் அடடா அடடா!

ஜோடியாய் நடை பயிலும் தம்பதிகளின்
நீ என்னை மதிபதில்லை என கணவனும்
நீங்கள் என் பேச்சை மதிபதில்லை
என மனைவியின் குற்றசடும்
வீதியிலும் தொடரும் வேதனையும்
விரைவில் விடு திரும்பும் அவசரமும் அடடா அடடா!

ஒண்ட குடிசை இன்றி சாலையின்
ஓரத்தில் தூங்கும் கதியற்றவர்களும்
விடியலில் பெய்த திடீர் மலையால்
தங்க இடமின்றி தத்தளித்து வீடுகளின்
படிகளிலும் கடைகளின் படிகளிலும்
தஞ்சம் புகும் அவசரமும்
பிள்ளைகளின் அழுகுரலோ மனதை பிசைய
பாவமாய் பார்த்து செல்லும்
வகர்சின் அவசரமும் அடடா அடடா!

மார்க்கெட் சென்று திரும்பும் வாக்கர்சின் அவசரமும்
அழகி ஒருத்தி தந்தையுடன் நடக்க
உஸ்ஸு உஸ்ஸு என்ற சதம் -திரும்பி
பார்கையில்லோ நாயை துரத்தும் சாக்கில்

அழகியை திரும்ப வைக்க முயற்சி செய்யும்
சில -எதிர்புற (வாக்கர்ஸ்) இளசுகளின் முயற்சியும்
குறும்பும் பயமும் கலந்த அவசர நடையும் அடடா அடடா !



வித விதமான நாய்களுடன்
அவசரமாய் வங்கிங்கும் அதற்கு
பணித்து போகும் பெரிய மனிதர்களின் பணிவும்
முக்கியமாக( தன்வீடு குழந்தைகளை )
கவனிக்க நேரம் இல்லாத அவர்களின் அவசரமும் அடடா அடடா !

அப்பப்பா தினம் தினம் வாக்கிங்
ஆனால் -கட்சிகளோ மாறுபாடு
சந்தோசம் சந்தோசம் தினம் -பல
மனிதர்களையும் காட்சிகளையும் காணுவதும்
மனதிற்கு ஓரு மாறுதலும் அடடா அடடா

******************************************************************************************************************************

கருத்துகள் இல்லை: