வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithaigal

மனம்
மனம் நினைப்பது எல்லாம்
மனிதற்க்கு கிடைபதில்லை..

மனிதற்கு கிடைப்பதை எல்லாம்
மனம் ஏற்று கொள்வதும் இல்லை

இருபதைவிட்டு இல்லாததை தேடுவதே
குரங்கான(மனித) மனம்

************************************************************

எதிர் வீட்டு பெண்ணே

எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!

கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!

நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி

தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/

*************************************************


சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
*******************************************


latha:
அ ஆ
அ = அன்பில் கரையும் உயிர்களாம்
ஆ =ஆசையை காட்டும் மனங்களாம்
இ =இனிமையான குணங்களாம்
ஈ =ஈடில்லாது உழைக்கும் மனிதர்களாம்
உ =உறவை உணரும் மனிதர்களாம்
ஊ =ஊருடன் கலந்து வாழ்பவர்களாம்
எ =எளிமை எனும் வாழ்விலும்
ஏ =ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவார்
ஐ =ஐயமின்றி அமைதியாய்
ஓ =ஒன்று பட்டு வாழ்த்திடினும்
ஓ= ஓரவஞ்ச மனம் உண்டு
ஒள =ஒளவை சொன்ன பழமொழி எல்லாம்
அக்கு=அக்குதேஎன்று மறந்திடுவார் (

தமிழன் என்று சொல்லினும்
தாழ்ந்த குணம் உண்டாட -அரசியலில்

செம்மொழி எனும் மாநாட்டின் ஆடம்பரம்
இனி-புதிது புதிதாய் வரிகள் பிறக்கும்
சட்டங்கள் தம் கையில் எனும் நிலையில்

பாவப்பட்ட பாமரர்களோ அரசியலின்
சூழ்சியறியாது தாரை தாரையாய்
ஊர்வலமாம் செம்மொழி மாநாட்டை
கண்டு ரசிக்க கோவையை நோக்கி
***********************************************************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 9:16 am 0 கருத்துரைகள்
புதன், 23 ஜூன், 2010
என்னுயிரே
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து

உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து

உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி

உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே

சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்

என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************

கருத்துகள் இல்லை: