ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நட்பு
ரோஜாவை மொட்டு விட்டு
தாமரையாய் மலர்ந்து
மல்லிகையாய் வாசம் வீசி
சூரிய காந்தியை விரிந்து
குறிஞ்சி போல் பலவருடம்
விட்டு விட்டு பூத்தாலும்
அழியாத பூக்களினம் போல்
மாறது மலரும் நட்புகள் -நம்
நட்புக்கள் என்றும் அன்புடன்
*****************************
நட்பு ( நீர் , நிலம் , நெருப்பு ,காற்று . ஆகாயம் )

மனம் -(எனும் நிலம் ஊன்றிய நட்பாய்
நெருப்பாய் பாசத்தில் தகித்தாலும்
நீர் பட்டாலும் அணையாது
காற்றாய் பரவி பரவி
ஆகாயத்தை எட்டும் சந்தோசமான
நட்புக்கள் நம் நட்புக்கள்
**********************************
நட்பென்ற கொலைகாரா

பார்க்காத போது சிரிகின்றாய்
பார்த்தாலோ மறைகின்றாய்
பேசும் போது ஓடுகிறாய்
பதில் ஏதும் கூறாது

இல்லாத போது வார்த்தைகளை
பூவானமாய் பொழிகின்ராய்
நேறில் வந்தால் அன்பாய்
பொழிவேன் என்கிறாய் -நீ
வருகிறாயோ வரட்டுமா என்றாலோ

மின்னலாய் மறைகின்றாய் நொடியில்
நீ -உயிர் காக்கும் உயிர் நண்பனோ -இல்லை
உயிர் வாங்கும் நட்பென்ற கொலைகாரனோ ?
****************************************

நான் இப்படி இல்லை நட்பே

உன் - இடிகுரல் கேட்டு அன்பை பொழிய
நான் ஒன்றும் மழையும் இல்லை


உன் -குரல் கேட்டு பயந்து ஓட
நான் ஒன்றும் கோழையும் இல்லை

உன் -குரல் கேட்டு அன்பாய் பற்றி கொள்ள
நான் ஒன்றும் பஞ்சும் இல்லை

உன் -பாசத்தில் நனனைய
நான் ஒன்றும் பூவும் இல்லை

உன் -குரல் கேட்டு குளிர (கரைய )
நான் ஒன்றும் பனிகட்டியும் இல்லை
**************************************
மோகன சுந்தரம் ( இனிய (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
சென்னிமலையின் வாழ்ந்த
மாரியப்ப கவுண்டருக்கும்
புன்னகையும் பொறுமையுமான
ரத்தினம் அம்மையாருக்கும் -மகவாக
பிறந்து கல்லில் வடித்த சிலை போல்
பார்போரை கவரும் ஆழகால்
எல்லோரின் மனதையும் கொள்ளை கொண்டதால்
மோகன சுந்தரம் என நாமம் சூடி
அன்பாய் பண்பாய் ஆசையாய்
நல் மகனாய் வளர்ந்து
அறிவில் சுடராய் ஆளுமையில்
தனிகரில்லாத தன்மையும் பெற்று

அம்மை அப்பரை காக்கும் நல்
மனமும் அன்பும் கொண்ட தெய்வம்
எனும் திருமகளை கரம் பிடித்து
இல்லறமும் நலறமுமாய் வாழ்ந்து
நல் மகவை பெற்று செந்தில்ராஜா
என நாமம் சூடி தன் வழியில் அவனை ஆளாக்கி
அவனுக்கும் நல்வாழ்வு தந்த
தெய்வ திருமகனே
மோகன சுந்தரம் அவர்களே
நீவீர் நீடூடி வாழ என் மனமார்ந்த
இதயம் கனிந்த வாழ்த்துகள்
***************************
முள்ளென்ற நடப்போ ?
நட்பால் விரிந்த அன்பும் -உன்னால்
என் -மனதை தொட்ட வார்த்தைகளும்
முள்ளாய் தைக்கிறது என் -இதயத்தை
நட்பு எனும் நேசதால் என்றும் அன்புடன்
******************************
எத்தகைய நட்ப்போ

நீர ஊற்றாய் பெருகி
ஆராய் பெறுகெடுத்து -ஓடி
கடலாய் அலையடித்து
சுனாமியாய் பொங்கி
வானத்தை எட்டி பிடித்து
சிறகடித்து பறக்கும் நட்போ ?

இடியாய் இடி இடித்து
மின்னலாய் வெட்டி வெட்டி
மேகமாய் சூழ்ந்து
மழையாய் பொழிந்து
பூமியை தொட்டு முத்தமிட்டு
கொஞ்சி விளையாடும் நட்போ ?

வான்னுகும் பூமிக்கும்
காற்றாய் ஆர்பரித்து திரிந்தாலும்
நட்பின் நடனம் நாளும் உண்டு - எனினும்
வானுக்கும் எல்லை இல்லை
பூமிக்கும் எல்லை இல்லை
அது -போல் நம் நட்புக்கும் எல்லை இலையோ?

***********************************
மனம்

அலைபாயும் மனமும் -உண்டு
அன்பு செலுத்தும் மனமும் -உண்டு
அன்பில் கரையும் மனமும் -உண்டு
அன்பால் கரைய வைக்கும் மனமும் -உண்டு

உன் -சிரிப்பில் உண்மை உண்டு
உன் -அன்பில் நேசமும் உண்டு
உன் -பேச்சில் கனிவும் உண்டு
உன் -வார்த்தைகளில் அக்கறையும் உண்டு

அதை ஏர்க்கும் தகுதி பிறர்க்கு உண்டோ?
உன் -அன்பை மறுகவும் - இல்லை
உன் -நேசத்தை குறை கூறவும் - இல்லை
முழுமனதாய் ஏற்கவும் இல்லை
எப்போதும் நீ என்னால் வேதனை படகூடாது -என்று
என்றும் உன் நலம் நாடும் என் -மனம்
********************************
நீ

நீ பேசாது போனாலும் -நான்
உன்னிடம் பெசுவியன் என் மனம் திறந்து
என் சுகம் துக்கம் வேதனை - அத்தானையும்
ஏன் என்றாலோ நீ என் நன்பேன்டா
*************************
நீ
நீ ஓரு கிளமானா இளமை மனிதன்
உன் உருவம் தான் பெருசு
உள்ளமோ இளசு இளசு
இளமை ததும்பும் உள்ளாம்

பயமின்றி உண்மை பேசும் குணம்
அன்பும் ஆசையும் கூறும் மனம்
************************
நட்பு

நீ -இருப்பதும் தெரியும்
இல்லாமல் இருபது போல்
ஒளிந்து போவதுவும் தெரியும்

மற்றவரை குற்றம் சொல்லதே
உன் -குற்றத்தை நீ திருத்தி கொள்
பிறர் மனதை துக்கப்படுத்துவது - எளிது
சந்தோசப்படுதுவது மிக கடினம்

என்றும் மாற குணமுடன்
நீயும் சந்தோசித்து மற்றவரையும்
சந்தோஷப்படுத்து என்றும் அன்புடன்

இது நீதியின் குரல்
**********************************

natpu ட்பு

எண்ணமெனும் நதியினிலே
எழுந்து வரும் அலைகள் (நிணைவுகள் ) - எல்லாம்
நட்பு எனும் கரை ஏறி
நாளும் பொழுதும் சந்தோசிக்கவோ ?



பேரலையாய் ஆற்பரிதலும்
நாளும் சந்தோஷத்தில் நனைந்தாலும்
நன்மை தீமைகளில் பங்கெடுக்கும் -அன்பும்

துன்பத்தில் தோள் கொடுத்து
கண்ணீர்விடும்போது அதை துடைத்து
நான் இருக்கிறேன் தோழமை -என
அன்பு கரம் நீட்ட ஓரு நட்பும்
eppothum veandum ellorukum
******************************
நட்பே
மணிகணக்காய் காத்திருந்த
நேரம் எல்லாம் மையில் கல்லாய் ஆனதடா

பொறுத்திருந்த மனமோ பொங்கியதால்
கண்ணீரால் கரை புரண்டு போனதடா

உன் -அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமுண்டா
இல்லை -துன்பமெனும் எல்லைக்கு
வித்தாகி போன நட்பாகுமோ உன்- நட்பு -
********************************

நட்புகள்

எண்ணம் தொட்ட நட்புகள்
எல்லைவரை நின்றுவிடும்
உள்ளம் தொட்ட நட்ப்புகள்
உயிரோடு கலந்துவிடும்

எண்ணமெனும் நதியினிலே
எழுந்து வரும் அலைகள் (நிணைவுகள் ) - எல்லாம்
நட்பு எனும் கரை ஏறி
நாளும் பொழுதும் சந்தோசிக்கவோ ?


பேரலையாய் ஆற்பரிதலும்
நாளும் சந்தோஷத்தில் நனைந்தாலும்
நன்மை தீமைகளில் பங்கெடுக்கும் -அன்பும்

துன்பத்தில் தோள் கொடுத்து
கண்ணீர்விடும்போது அதை துடைத்து
நான் இருக்கிறேன் தோழமை -என
அன்பு கரம் நீட்ட ஓரு நட்பும்

காலங்கள் ஓடினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத அன்பு உறவு நட்பு
********************************
நட்பு
பொழுது போவதும் நட்பால்தான்
பொழைப்பு போவதும் நட்பால்தான்

நேசம் வருவதுவும் நட்பால்தான்
நாசம் வருவதுவும் நட்ப்பால்தான்


ஆசை வருவதுவும் நட்பால்தான்
அழிவு வருவதுவும் நட்பால்தான்

அன்பு வருவதுவும் நட்பால்தான்
அறிவு வருவதுவும் நட்பால்தான்
*********************************

நட்பு
நட்பு என்றாய் நம்பிநேன்
எல்லாம் என்றாய் நம்பிநேன்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
நட்பு பைத்தியம் ஆனேன்

என்னை போல் நம்பிய
நட்பு முட்டாள்கள் யாரும்
இல்லை என இந்த நெட்டில் புரிந்தும் கொண்டேன்
என்மனம் நொந்தது இந்த அளவில்
எப்போதும் இல்லை என புரிந்து கொண்டான்

என்னையே நான் விசித்திரமாய் நோக்கிறேன்
எதற்கும் துடிக்காத உள்ளம்
நட்பிற்காக அழுவாத என்று -பைதியம்


மனதில் ஒளிந்து கொண்ட நட்பாகட்டும்
நினைவால் வருத்த அவசியம் இல்லை
நீங்க சோகமும் தேவை இல்லை
***************************************
நட்பு
உன் -பொய்மையும் புரியும்
உன் -உண்மையும் புரியும்

அன்பிற்கும் வாழ்விற்கும் மணைவி
மனதை கொல்லவும் வார்த்தையை கொட்டவும்
நட்புக்களோ நம்பிக்கை என்ற நிலையில் ****
***************************
நட்பு
நட்புகள் ஆயிரம் கிடைத்தாலும்
நம் நினைவில் நிலைப்பது எதுவோ ?
நம் உயிரில் கலப்பது எதுவோ ?

நட்பு என்றதும் புத்தியில் தோன்றுவதும்
மனதில் இருந்து உதட்டில் ஒலிக்கும்
உயிரின் பெயர் தான் உண்மை நட்பு
*************************************

புதன், 13 அக்டோபர், 2010

முத்தம்
முத்தம் ஓரு சத்தமில்லாத
சந்தோசமான இன்ப சொர்க்கம்

தை சேய்க்கு கொடுக்கும் -முத்தம்
பாசமான அன்பின் பரிமளிப்பு

முதியோர்கள் பேரகுழந்தைகளுக்கு கொடுக்கும்
முத்தம் -பந்தத்தின் பரிமளிப்பு

குழந்தைகள் மற்றவர்களுக்கு தரும் -முத்தம்
எல்லையில்லா சந்தோசத்தின் பரிமலிப்பு

காதலனும் காதலியும் கொடுக்கும் -முத்தம்
அன்பின் எதிரொளி பரிமளிப்பு

கணவனும் மனைவியும் பரிமாறும் -முத்தம்
இல்லறத்தின் தாம்பத்திய சங்கீத பரிமளிப்பு


முத்தம்
முத்தம் -சத்தமில்லாத ஓரு சொர்க்கம்
முத்தம்-அமைதி போர்க்களம்
முத்தம்-முதலீடு இல்லாத லாபம்
முத்தம்- ஆசை அன்பின் வெளிபாடு
முத்தம்-முன் பின் எதிர்பாராமல் கிடைப்பது
***********************************

விடிவு
விடியும் என்று விண்ணை நம்பினேன் -தினம்
விடிவும் நடக்கிறது நாளும்

முடியும் என்று உண்னை நம்பினேன் -தினம்
ஆனால் முடிவுதான் நிஜமானது -உன்னால்

உள்ளார்ந்த உறவு என்றாய் -தினம்
உணவும் உறக்கமும் நீயே என்றாய்

ஏனோ என்று விளித்தால் -தினம்
நம் - நட்பின் பரிமாணத்தின் பிரதிபலிப்பு என்றாய்

காலம் கடந்த நட்பு என்றாலும் -தினம்
நாமும் நட்பு என்று அள்ளாவி சந்தோசிகிறோம்

மறைந்து மறைக்க பட்ட கூற்றுகளை -தினம்
கூறி கூறி குறை தீர்க்கிறோம் பயமின்றி

சந்தோஷ விடிவு என்பது எல்லோருக்கும் - இல்லை
எந்த நட்பிற்கும் முடிவு என்பதும் இல்லை
***************************************
நட்பு
நட்பு என்கிறாய் நம்பு என்கிறாய்
பார்த்தாலோ முகம் திருப்பி போகிறாய்
நான் போன பின்போ செய்தி அனுப்புகிறாய்
ஏன் இந்த கொலை வெரி
அமைதியான மனதை கொன்றாய்
ஆலைபாயும் விழியில் தேட வைத்தாய்
நட்பென்ற அன்பை கொட்டி
பிரிவென்று கண்ணீரில் மூள்கடிகிறாய்
***************************
நட்பு (பைத்தியம் _)
பாறையாய் இருகிய -என்
மனமோ பாகாய் கரைந்தது
உன் -+நட்பால் சந்தோஷத்தில்

நட்பு என்றால்; இப்படித்தான் -என
அறியாத என் உள்ளம் -இன்று
நட்புகளின் மழையில் நனைந்தாலும்
குடையின்றி உன் நட்பில் நனையவே விரும்பியது

பிரிவிற்கும் முடிவிற்கும் விளக்கம் கேட்டால்
பைத்தியம் என பட்டம் கொடுக்கிறாய்
************************************
நட்பு
நட்பு என்பது எதையும் எதிர் பார்பதுவும் இல்லை
யாசகம் பெறுவதும் இல்லை
அன்பும் பண்புமே நட்புக்கு -பரிசு

மருந்தும் தேவை இல்லை
மாயமும் தேவை இல்லை
நல்ல மனமும் தூய நினைவும்
போதும் இனிய தூக்கத்திற்கு


தெரிந்து இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்
மனமும் அன்பும் போது நல்ல நட்பிற்கு
*********************************
நட்பு
ந=நன்மை ,ட்=இஸ்ட்டமான, பு=புன்னகை
நன்மையையும் இஸ்டமுமாய் புன்னகைக்கும்
அன்பில் விரியும் பாசபின்னல்கள்

சிறுக சிறுக சிலந்திவளையாய்
சுற்றி சுற்றி வரும் பாசபின்னல்கள்
இடையில் துண்டிக்க பட்டாலும் -மீண்டும்
விடா முயற்சியால் பின்னப்படும்
பாச வலைகள் -நட்பு
********************************
மாரியப்பன் எல் .ஏ (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

தென்காசி பட்டனதிலே
ஆறுமுக முதலியாரின் மணைவி
சரஸ்வதி அம்மைக்கும்
கருவாய் உருவாகி இப் -பூமியில்
மகவாய் பிறந்த மாணிக்கம்

மண்ணில் புரண்டாலும்
மடியில் புரண்டாலும்
மயில் இறகால் நீவி
மார்மேலும் தோள்மேலும் -போட்டு

மாரியாய் (மழையாய் )பொழியும்
அன்பனாய் வளர மாரியப்பன் -என
நாமம் சூட்டி அன்பாய் வளர்த்து
கல்விதனை புகட்டி
கட்டிளம் காளையாய் வளர்ந்து

வேலை எனும் பணியும் கிடைத்து
உலகமெனும் மாயையில்
சுழல்பந்தாய் சுழலும் நன்பனே

ஜாதி மத பேதம் இல்லை உனக்கு
மதம் என்றால் இந்தியன் என்கிறாய்
மனதை புல்லரிக்க செய்கிறது
உன் வார்த்தையும் நாட்டுபற்றும்

பிறந்ததோ தென்காசி
வேளையோ சென்னையில்
அடுத்து பாண்டி என்கிறாய்

ஊர் மாறி போனாலும் -உன்
உள்ளம் மாறது நாட்டு பற்றும்
தேசபற்றும் என்றும் -உன்
போல் வளரட்டும் அன்புடன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
********************************

சனி, 9 அக்டோபர், 2010

வாழ்க்கை

வாழ்கையில் ஏமாற்றம் வரலாம்
சில நேறங்களில் -எல்லோருக்கும்

ஆனால் வாழ்க்கையே ஏமாற்றமாய்
இருக்ககூடாது எப்போதும் -சிலருக்கு

உண்மையும் பொய்மையும் கலந்த வாழ்கையில்
கஷ்டமும் கசப்பும்தான் கடைசியில் மிஞ்சுபவை
*****************************
நட்பே

எங்கோ போனாயோ ?என்ன ஆனாயோ ?
யாரிடம் கேட்பது உன் நிலை பற்றியோ?
என்- நட்பே கண் மூடினாலும்
உன் - நினைவுதான் எப்போதும்
கண் விளித்தாலும்- உன்
நினைவுதான் எப்போதும்

அறிவாய் புத்தி சொல்லவும்
ஆசையாய் பரிவு காட்டவும்
பாசமாய் பண்பை காட்டவும்
கோபமாய் என்னை ஒழுங்குபடுத்தவும்
என் -புத்தி கோணலை நேர்படுத்தவும்
என் வாழ்கையில் இறையின் கருணையால்
தெய்வமாய் அம்மாவாய் அப்பாவாய் ஆசானாய்
எல்லாமுமாய் கிடைத்த அன்பான நட்பே


உன் பிரிவு என்னை வாட்டுகிறது
பாராமுகமாய் நீ போவதுவும் பிடிக்கவில்லை
என்னை பார்க்க வராமல் இருபதுவும் பிடிக்கவில்லை
***********************************
நட்பே
ஓ நீ பணியில் பளுவால் ஓடுகிறாய்
நட்புகளை சந்திக்க நேறம் -இல்லை
என -நினைத்தேன் இந்த முட்டாள்

பல நாள் காத்திருந்து நீ வராது
உண்னை தேடினேன் உன் ஆர்குட்டில்
நீயோ - மற்ற நட்புகளிடம்
தொடர்பில் இருகிறாய் -எனவும்
இப்போது தெரிந்து கொன்டேன் தோழமையே

காரணமும் தெரியவில்லை எதுவும் புரியவில்லை
என் -நடப்பை நீ விலக்கியது தோழமையே
இனி உண்னை தேடாது இந்த நட்பு

உனக்கு கவலையும் வேண்டாம் கஷ்டமும் வேண்டாம்
எங்கிருந்தாலும் நலமுடன் நீ -வாழ பிராத்திக்கும்,
உன் உண்மை நட்பு -இதுவே
நான் உனக்கு அனுப்பும் கடைசி ஸ்கிராப்பும்

நீ இங்கு மறைந்து வரவும் தேவை இல்லை
மறைந்து போகவும் தேவை இலலை
வாழ்கையில் நட்பும் கூடாது பிரிவும் கூடாது
இது இரண்டும் என் வாழ்கையில் -எப்போதும்
வேண்டாம் இறைவா அதை தாங்கும் சக்தி
எனக்கு எப்போதும் இலலை என வேண்டி
உன் -முடிவை சந்தோசமாய் ஏற்று
சங்கடமாய் பிரியும் அன்பை மறவும் -நட்பு
நன்றி வணக்கம்
*****************************************
நட்பே
காரணம், இன்றி பிரிந்த - நம்
நட்பு ரணமாய் நம் மனதில் -என்றும்

தினம் தினம் நீயும் இங்கு வருகிறாய்
தினம் தினம் நானும் இங்கு வருகிறேன்

ஆனால் இருவரும் பேசுவது இல்லை
இருவருக்கும் தெரியும் நாம் இருப்பது

நீ எப்படியோ தெரியாது -இங்கு
உன் பெயரில் உன் வரவை அறிந்ததும்
நீ -எண்ணுடன் பேசுவாயோ -என
என் உள்ளம் துடிக்கிறது -தினமும்

நீ மௌனமாய் செல்லும் ஓவ்வொரு நாளும்
என் - விழிகளின் ஓரத்தில் வழிந்தோடும்
கண்ணீர் துளிகளுக்கு நான் தடை போடுவது -இல்லை
கட்டுபடுத்தி தடா போடுவதுவும் இல்லை

நம் நட்பை போல் முறிந்து விடாமல்
கண்ணீராவது கரை சேரட்டும் என்றுதான்


நட்பில் சண்டையும் வரலாம்
சமாதானமும் வரலாம் நமக்குள் -ஆனால்
பிறிவு வரகூடாது தோழமையே

உன் நட்பும் என் நட்பும் உண்மை என்றால்
உயிர் பிரியும் வரை உண்னை எதிர் நோக்கும்
உன் மேல் என்றும் அன்புடன் இருக்கும் நட்பு
**********************

நட்பு
உளம் தொட்ட நட்பு -என்றும்
மறந்தும் மறைந்தும் போகலாம்

உயிரை தொட்ட நட்போ
நரம்போடும் இரத்தத்தோடும் கலந்துவிடும்

உள்ளம் தொட்ட நட்போ
கானல் நீராய் மறைவதுண்டு

உயிரை தொட்ட நட்போ
நாம் -சிதையில் எரிந்த பின்பும்

நினைவலைகளாய் தொடரும்
நம் -நட்புகளின் மனதில் -என்றும்
*************************************
நட்பு
நட்பென்ற மழையிலே
நனைந்திட்ட உள்ளமோ
பிரிவென்ற நிலையிலோ
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

உண்மை நட்பென்று மயங்கி -அது
உயிரை பிடுங்கும் நட்பென உணர்ந்து
மனம் -கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

நட்ப்பென்ற நிலையை கணவென
நினைத்து மறக்கவும் முடியாது
பிரிவென்ற நிலையை -கண்ணீரில்
கரையும் காகிதத்து எழுத்தாகவும்
நினைக்க முடியாது
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

உள்ளமும் உயிரும் நினைவுகளும்
உடல் -எனும் எலும்பும் சதையும்
மண்ணோடு மக்கிபோகும் நிலையிலும்
நட்பின் உணர்வுகள் மேலோங்கி
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

பூமியை தொட்ட மலையும் மறையலாம்
பூமியை தொட்ட பனித்துளிகளும் மறையலாம்

பூஉடலை ஆட்கொண்ட அன்பும் நட்பும்
மறைத்தல் என்பது முடியாத சக்தி -அதனால்
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது
*****************************************
நட்பின் நட்ப்பே

அறிமுகத்தில் அம்மா என -விளித்தாய்
வயதை அறிந்ததும் என்னினும்
மூத்தவன் என்றதால் நட்பு என மாற்றினாய்

பண்பாய் பழகினாய் பாசமாய் பேசினாய்
துன்பத்திற்கு ஆறுதல் சொன்னாய்
நினைப்பது நடக்கும் என்றாய்
நட்பிற்கு வயது இல்லை என்றாய்

நினைப்பது நடக்கும் என்றாய்
பொல்லாத மொழி பேசினாய் கடைசியில்
என் வேதனைக்கு காரணமாய் ஆனாய் -நீயே தோழமையே

பெண் என்றால் கேவலம் எனும் நிணைவு
உனக்கும் வந்து விட்டதோ -புரியவில்லை
காரணமும் அறிய விரும்பவில்லை
பூ போன்ற மனதை முள்ளால் கீரிவிட்டாய்
ரணமும் மனமும் ஆறவில்லை தோழமையே
*********************
நீ பயப்படாதே,

நான் உன்னுடனே இர்ருக்கிறேன்,
திகையாதே நான் உன் தேவன்....ஏசாயா:41:10
பதிலளி
எதற்கு பயப்படனும் -நான்
உண்மை அன்பிற்கும் நேசதிற்கும்
பாசத்துக்கும் பண்பிற்கும் கட்டுப்பட்டவள் -நான்
இதை மொத்தமாக செலுத்துபவர்க்கு
என் -உயிரையும் தருவேன் உண்மையானவர்கள் என்றால்
இது -என்றும் எனது நீதி
*************************************
காத்திருப்பது சரி
ஆனால் மற்றவர்களை வேண்டும் - என் ட்ரே
காக வைப்பது தவறு -எல்லோருக்கும்
எத்தனையோ வேலை இருக்கும்

நாம்தான் உசத்தி என்று நினைக்க கூடாது
மற்றவர்களை உதாசின படுத்தவும் கூடாது
அன்பு மனங்களை நோகடித்து -பின்னலில்
உன் மனதை நோகடித்து கொள்ளாதே
*************************************

அமுதன்
அமுது ஊட்டிய அன்னைக்கு
அன்பை பொழிந்த அமுதனே
இன்று உன்னிடம் அன்பை பொழியும்
உறவுகள் இல்லை என்றாலும்
நேசமுடன் பாசமாய் அன்பு செலுத்த
உன் நட்புகள் உண்டு தோழமையே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் லதா சந்திரன்
*********************************
கல்லூரி பூக்கள்
கல்லூரி பூக்கள் எல்லாம்
காலையில் பூத்த பூக்களை -போல்
பேருண்திற்கு உற்சாகமாய் காத்திருந்து
வண்டுகளாய் மொய்த்து பட்டாம்பூச்சியாய் -ஏறி
கனவுகளுடன் கல்லூரிக்கு போனாலும்

மாலையில் வாடி வதங்கிய மலர்களாய்
காற்று போன பலூனாய் களைஇழந்து
ஜன்னலில் சோகமான முகத்துடன்
கான்கையில்லோ என் உள்ளம்
ரசம் போன்ன கண்ணாடியாய்
உற்சாகம் குன்றி போவதேணோ
*******************************
மனிதரும் மருந்தும்

மானிடம் எனும் சரீரம்
மண் எனும் பூமியில் -புதையும்
ஆயுள் காலத்தை நீட்டிக்கும்
மகதுவம்மேஆயுள் எனும் -மருந்து

காலன் எனும் எமனிடம்
போராடி கள்வனை போல்
ஒளிந்து வாழ உதவிடும்
உயிர் நாடி- மருந்து

ஊராருக்கும் உறவினர்க்கும்
உற்ற துணை நான் என்று
இழுத்து போகும் காலத்தையும்
இழுபறியாய் தவணை முறையில்
உதவி உதவிடும் மகத்துவம் -மருந்து
****************************************தாய்மை எனும் மறு ஜென்மம் புணரும் தெய்வங்களே

கருபியோ சிகபியோ அழகியோ அசிங்கமோ
காட்டிலோ மேட்டிலோ வீட்டிலோ
ஈரைந்து மாதம் இஷ்டமாய் கஷ்டப்பட்டு
கருவை சுமந்து பிள்ளை ஈனும்
தாய்க்கு மறுஜென்மம் புணரும்
தெய்வங்களே மருத்துவர் -உங்களை
மகபேறு மருத்துவர் என்றழைப்பது
மகத்தான பேறு அடையும் -சிசுகளை
தாய்மையிடம் இருந்து பிரித்து -உலகிற்கு
ஈனுவதாலே மகபேறு மருத்துவர் என்கின்றனரோ !!!!!!!!!!

தெய்வ நிலையான இப்பனியோ
இன்று -களங்கம் சுமைகிறதே
பணம் எனும் பேராசையால்
சுகபிரசவமாய் பிறகும் சில சிசுக்கள்
சிக்கல் என சொல்லி
சிகிட்சையால் பிரிகபடிகிண்றன தாயிடம் இருந்து

அறியாமை எனும் புத்தியால் மக்களினமோ
தெய்வமென உங்கள கூற்றை ஏர்கின்றனர்
தேவையில்ல சிகிட்சையால் -பின்
நொந்தும் வெந்தும் போகும் தாய்மைகள் எத்தனையோ

தற்போதோ வறுமை பிடியில் வாழும் மக்களோ
தமக்கு கடைகொள்ளி போடா
வாரிசுபெற யோசிக்கும் நிலையில் -மருத்துவம்

இன் நிலை மாற கருணை மனம் கொள்ளுங்கள்
கட்டாய சிகிட்சையும் வேண்டாம்
கர்மாவுக்கு பாவமும் வேண்டாம்
நீங்கள் மனம் மாறி தெய்வமாக்வே -இருங்கள்
தாய்மை எனும் மறு ஜென்மம் புணரும் தெய்வங்களே
*******************************