சனி, 28 மே, 2011

நட்ப்பு

நட்ப்பில் உண்மை அன்பு வேண்டும்
நட்ப்பில் பொய்மை கூடாது

நட்ப்பில் பாசம் வேண்டும்
நட்ப்பில் பாசாங்கு கூடாது

நட்ப்பில் அன்பு வேண்டும்
நட்ப்பில் அதிகாரம் கூடாது

நட்ப்பில் விட்டு கொடுங்கள்
நட்ப்பில் விடாமல் கெடுக்காதீர்கள்

\நட்ப்பில் விருப்பத்தை காட்டுங்கள்
நட்ப்பில் விரோதத்தை காட்டாதீர்கள்

நட்ப்பில் தட்டி கொடுங்கள்
நட்ப்பில் தட்டி கழிக்காதீர்கள்

நட்ப்பில் தவறுகளை குறையுங்கள்
நட்ப்பில் தன்னம்பிக்கையை ஏற்ருங்கள்

நட்ப்பில் மனம் விட்டு பேசுங்கள்
நட்ப்பில் மனப்புழுக்கம் கூடாது

நட்ப்பில் அன்பை கூட்டுங்கள்
நட்ப்பில் அரவணைத்து வாழுங்கள்

****************************

நட்ப்பு

தினம் தினம் புது புது
நட்புக்கள் கிடைக்கலாம் -ஆனால்

நினைவில் நிலைப்பதும்
நிழலாய் தொடர்வதும்
உயிரோடு கலப்பதும்

பார்க்க முடியாது போனாலும்
பார்த்தாலும் பேசமுடியாது போனாலும்
நினைவுகளோடு தொடருவது -உயிர்
நட்ப்பு என ஒருவரே இருத்தல் முடியும் -யாருக்கும்


********************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜடம் எனும் உடல்
உயிர் எனும் ஜீவிதம் வாழ
உயிர் காக்கும் உணவு பயிர்களை
உலகிற்கும் கொடுக்கும் விவசாய பெருமகனே

விவசாயம் எனும் ஆழகிய கலையயை
தொன்று தொட்ட பாரம்பரிய
உயிர்காக்கும் உன்னத தானியங்களை
உயிர்ப்பித்து உலகிற்கு அளிக்கும்
உன்னத உழவனே உன் ஆயுள் நீடித்து
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க -என
வாழ்த்தும் அன்பு தோழமை

********************************

நட்ப்பு

என்னால்லும் முடியும்
உன்னாலும் முடியும்
ஒருவரை மறக்க +ஆனால்

நம் நிணைவுகள் மட்டும் மறக்காது -எப்போதும்
நம் நட்பின் ஆழத்தை -அது
கடலில் புதைந்த ரகசியமாய்

******************************

முத்தம்

ஆதரவாய் ஓரு முத்தம் -தலையில்
பரிவாய் ஓரு முத்தம் -நெற்றியில்
இமையாய் இருபேன் என ஓரு முத்தம் -கண்களில்
மூச்சாய் இருபேன் என ஓரு முத்தம் -மூக்கில்
பட்டுபோல் காப்பேன் என ஓரு முத்தம் -கன்னத்தில்
உயிராய் காப்பேன் என காதலாய் முத்தம் -உதட்டில்

*******************************

குடை

புறாவுக்கு பூணை குடை பிடித்தாலும்
பூனைக்கு புறா குடை பிடித்தாலும்
மழை தூறலின் சிதறல்கள்
இரண்டிற்கும் தெரிககத்தான் செய்யும்
சிந்தனைகளும் சிறகடிக்கதான் செய்யும்
உணர்வுகளோ உல்லாசமாய் மாறும்
உறக்கமோ ஓடி போகும் தொலைதூரம்

**********************************

பிறந்த நாள் வாழ்த்து

பிறப்பதும் ஓரு முறை
இறப்பதும் ஓரு முறை
வாழ்வதும் ஓரு ஜென்மம்
பிறரை வாழ்விப்பதும் ஓரு ஜென்மம்

உயிர்களிடத்தில் அன்பாய் இறு
நட்ப்பாய் நேசி -உண்மை
நட்ப்புக்களையும் நேசி
அன்பபை யாசி அதிகாரத்தை -யோசி

பண்பை பகிர்ந்து கொடு
பாசத்ஹை மொத்தமாய் கொடு

மனதில் படுவதை பட்டுன்னு சொல்லிவிடு
மனதிற்கு பிடிக்காததை சட்டுன்னு விட்டுவிடு

உண்மையாய் உழை ஊதாரியாய் இருக்காதே
உனக்காகவும் வாழ் ஊருக்காகவும் வாழ்

என்றும் அன்புடன் நீ சிறப்பாய் வாழ
அன்புடன் வாழ்த்தும் நட்ப்பு

********************************************************

அன்பு

அன்புக்கு இல்லை தடை ஏதும்
ஆசைக்கும் இல்லை தடை ஏதும்
பண்புக்கும் இல்லை தடை ஏதும்
பாசத்துக்கும் இல்லை தடை ஏதும்
அத்தனையும் அடங்கிய ஓரு சொல் -அன்பு

பொறாமைக்கும் உண்டு தடை -*எப்போதும்
போட்டிக்கும் உண்டு தடை -*எப்போதும்
பொல்லாப்புக்கும் உண்டு தடை -*எப்போதும்
இவையும் தடுக்கும் ஓரு சொல்-அன்பு

****************************

இதயம்


உன் -இதயத்தில் அழகி இருந்தாலும்
இல்லை-ஓராயிரம் அழகிகள் குடிவந்தாலும்
எனகென்று ஓர் இடம் -இருக்கும் -அது
உன் உயிர் உனைவிட்டு பிரிந்தாலும்
நினைவுகளாய் தொடரும் உன் -ஆவியுடன்

உன் - இதயமெனும் கூட்டுக்குள் இல்லாத
நினைவுகளாய் நான் மறைக்கப் பட்டாலும்
உன் -உயிர் எனும் துடிப்புகளில்
நிலையில்லாமல் துடிப்பது -புரியும்

நீ மறைத்தாலும் மறுத்தாலும் மறந்தாலும்
உன் -ஓய்வொரு துளி நினைவுகளும்
என்னுடன் என் நினைவுகளுடன் என புரியும்

இதம் என்பது குட்டி குடுவை -அதில்
கொட்டிகிடக்கும் உணர்வுகளோ எல்லையில்லாத -வானம்

******************************

எந்திரம் இல்லை நீ

கருக்கலிலே கண் விளித்து
கடமை செய்திட கருத்தாய் கிளம்பி
காட்டையும் மேடையும் கடந்து
கரும்புகாட்டையும் தென்னதோப்பையும்
கூலிக்கு ஆள்பிடித்து நீயும் அவர்களுடன்
களைப்பின்றி வேலைதனை செய்தாலும்

இரவுவரை ஓய்வின்றி உழைத்தாலும்
உணகென்று ஒர் ஆசையும் இல்லையோ?
மனிதன் என்றால் மனமும் ஆசைகளும் உண்டு
நீயோ - எதையும் எதிர்பார்காது
ஆசைக்கு இடமின்றி அபூர்வமாய் போனாய் ?

ஓயாது உழைக்கும் இயந்திரத்திற்கும்
பழுது என்று ஓய்வு கிடைக்கும்
நீயோ -ஓய்வின்றி உழைக்கிறாய் ஏனோ?
படுத்தும் தூக்கம் கவலைகளுக்கு டாட்ட ஏனோ?

நண்பா நீ மனித உயிர்
உணகென்ற ஆசைகளும் உணர்வுகளும் -உண்டு
அதனை உன்னுள் புதைத்து கொள்ளாதே -நீ
இயந்திரமாய் மாறி விடாதே -நீ

உணகென்று வாழவும் பழகு
உனக்குள் ஆசைகளை விதைத்து கொள்
இயற்க்கையையும் இசையையும் ரசி
உணவை ரசித்து உன் உணர்வுகளுக்கு
உன்னதமான உயிரோட்டம் கொடு -நீ
மனிதராய் பிறக்க மாதவம் செய்தடல் வேண்டும்
என்ற பாரதியின் கூற்றுக்கு உயிர் கொடு
உண்னை நீ மதி விதியை நினைத்து
மதியை இழக்கதே இயல்பாய் இரு -நீ
எப்போதும் இயந்திரமாய் இருக்காதே
*******************************

மனமே

உணகென்று பல மனம் துடிக்க
உன் -வரவுக்காக காத்து கிடக்க
சுக துக்கங்களை பகிர நினைக்க -நீ
உன் மனம் மட்டுமே போதுமென்று
உன்னில் உண்னை புதைகாதே

உண்னை பாராது ஏங்கும் மனங்களோ
உண்னை கானது விழியோரத்தில்
கண்ணீர் துளிகளுடன் காத்திருப்பதை அறிவாயோ ?

உண்மை அன்புக்குள் சண்டை வேண்டாம்
புரிதல் அவசியம் ஒருவருக்கு oruvar
vittu கொடுத்தல் உண்மை அன்பு

சின்ன சின்ன ஊடலும்
சிங்கார சிரிப்பும்
சிறுபிள்ளை தனமான சண்டையும்
உண்மை அன்பில் சகஜம்

என்னதான் கோபித்தாலும் -உன்
வரவை ea ea ஈதிர் நோக்கும் -உன்
அன்பு மனதை எப்போதும் மறைக்காதே

**********************************

கருத்துகள் இல்லை: