வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கூனியும் சகுனியும்
(1)
கூனி , சகுனியும் யாரிவர்கள் ? ராமாயண காலத்திலேவாழ்ந்தவள்
கூனி . ராணி கைகேயிக்கு ஓர் பணிப்பெண் அவள் .முதுகில்லே கூன் இருந்த காரணத்தினால் மந்தரை என்ற இவளுடைய இயற்பெயர் மாயமாகி , கூனி என்று கல்வெட்டு போல் காலம் முழுதும் நின்று விட்டது .

இந்த சகுனி என்பவர் யார் ? இவர் மகாபாரத காலத்திலே வாழ்ந்தவர் . சகுனி சாதாரண ஆள் இல்லை .காந்தார நாட்டின் இளவரசர். துரியோதனன் மற்றும் அவன் தொன்நூத்தி ஒன்பது தம்பிமார்களுக்கு தாய்மாமன் .
துர்போதனை செய்து மற்றவர் குடிகீடுக்கும் மங்கையரை கூனி என்றும் ,உடனிருந்து உறவாடி கெடுப்போரை சக்ஹுனி என்றும் ,இன்றைக்கும் நாம் சொல்லுவது உண்டு . இரு வேறு காலங்களில் வாழ்ந்த இருவருக்கும் இருக்கும் மிக பெரிய ஒற்றுமை அடுத்தவரை கெடுபதுதான் . இதற்காக கூனி எடுத்த ஆயுதம் சூழ்ச்சி .சகுனி எடுத்த ஆயுதம் சூது .இதை சற்று விளக்கமாக பாப்போம் .


page (2)
சிறுவர்களாக இருந்த ராம லட்சுமணர்கள் உண்டிவில்லால் கூனியின் முதுகில் அடித்து விளையாடினார்கள் . அரசகுமாரர்களோ அடித்து விளையாடும் போது ஓரு அபலை பெண்
அவர்களை மிரட்ட முடியுமா இல்லை விரட்டதான் முடியுமோ?
அந்த அவமானம் நாள்ஆகா நாள்ஆகா கோப தீயாகி ராமனை பழிவாங்கும் அளவிற்கு கூனியை மாற்றிவிட்டது .

ராமனுக்கு பட்டாபிசேகம் என்ற நிலை ஏற்பட்ட போது ,தக்க தருணத்திற்கு காத்திருந்த கூனி தன் சூழ்ச்சி கனைகளை ராணி கைகேயின் மீது ஏவினாள் .
மந்தரையின் போதனையால் மனம் குழம்பிய கைகேயி தன் கணவன் தசரதனிடம் தன் சாகசத்தால் இரு வரங்களை கேட்க்க அதன்படி பரதனுக்கு பட்டாபிசேகம் என்றும் , ராமனுக்கு பதினான்கு வருடம் வனவாசம் என்றும் தீர்மானிக்கபட்டது .
கூனியின் சூழ்ச்சியும் வென்றது .பரதனுக்கு நாடும் ,ராமனுக்கு காடும் கிடைத்தது .பதினான்கு வருடம் வனவாசம் முடிந்த பின் ராமனுக்கு பட்டாபிசேகம் நடந்தது .

இனி சகுனி பற்றி பாப்போம் .அஸ்தினாபுரத்தின் அரியனைகுரிய பட்டது இளவரசன் யுதிஷ்டிரன் என்ற தரமான அல்லது துரியோ தனனா என்ற சர்சை எழுந்தது . பீஷ்மர் உட்பட பல பெரியோர்களும் தர்மன் மூத்தவன் எனவே தர்மனே அரியணை ஏற தகுதி உடையவன் எனக் கருதினார்கள் .விடுவானோ சகுனி ? தன் மைத்துனனும் அஸ்தினாபுறத்தின் மன்னனுமான திருத ராஸ்டிரனின் மனதை குழப்பி ,துரியோதனந்தான் பட்டது இளவரசன் என்று அறிவிக்கசெய்தான் .சமரச முயற்சியாக பாண்டவர்களுக்கு நாட்டின் ஓரு பகுதி பிரித்து கொடுக்கப்பட்டது .

பாண்டவர்கள் தங்கள் பாகத்தில் இந்திரபிரஸ்தம் என்ற நகரை நிர்மாணித்து சீரும் சிறப்புமாய் வளர ஆரம்பித்தார்கள் .

peage(3)
ஓரு நாள் பாண்டவர்களின் அழைப்பின் பேரில் தன் தம்பிகளோடு இந்திரபிரஸ்தம் சென்றான் துரியோதனன் .அங்குள்ள மாட மாளிகைகளின் அழகையும் , செல்வ செழிப்பையும் கண்ட துரியோதனன்பாண்டவர் மேல் பொறாமை கொண்டான் .அங்கு ஓர் இடத்தில அவன் தடுமாறி விழ .அதைகண்டு பாஞ்சாலி சிரிக்க ,அவமானத்துடன் நாடு திரும்பினான் துரியோதனன்.

மருமகனின் மனவேதனை அறிந்த சகுனி ,பாண்டவர்களின் நாட்டையும் செல்வங்களையும் உனக்கு சொந்த மாக்குகிறேன் என்று சூளுரைத்தான் .சகுனியின் திட்டப்படி அழைப்பு அனுப்பப்பட்டது . பாண்டவரும் அஸ்தினாபுரத்துக்கு பாஞ்சாலியுடன் வந்தனர் . விருந்து முடிந்ததும் பொழுதை போக்க சூதாட வருமாறு தருமரை அழைத்தான் சகுனி , சூதாட்டத்தில் விருப்பமுள்ள தருமாறும் அதற்கு சம்மதித்தார் .

ஆட்டம் தொடங்கியது .அதன் முடிவில்லோ தர்மன் தன் நாடு ,நகரங்கள் ,செல்வங்கள் மற்றும் தம்பிமார்கள் உட்படதன்னையும் பந்தையம் வைத்து தோற்றார் . இறுதியாக ஐவரின் மணைவி திரௌபதியையும் தோற்று அனைத்தையும் இழந்தார் . அன்று சகுனியின் கையில் உருண்ட பகடைகள் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு குருசேத்திரத்தில் போரிலே பல்லாயிர கனக்கான தலைகள் உருள காரணமாகி விட்டது .

peage(4)
ஆம் அஸ்தினாபுரத்தின் அரசவைக்கு இழுத்துவரப்பட்ட திரௌபதியின் துகிலை உரித்து அவமதித்தான் துரியோதனன்.
கௌரவர்களை கொன்று குவித்து ,துரியோதனன்நின் ரத்தத்தை தலையில் பூசியபிரகுதான் அதை அள்ளி முடிவேன் என்று சபதம் செய்தாள் பாஞ்சாலி .

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓரு வருடம் அஞ்ஞா தவாசமும் முடித்துவிட்டு வந்து பாண்டவர்கள் ,கண்ணனை தூது விட்டனர் .தங்கள் நாட்டை திருப்பி தருமாறு துரியோதனனை கேட்டானர் .
ஊசிமுனையளவு கூட இடம் விடமாட்டேன் என்று துரியோதனன் கூறிவிடவே மூண்டது மகாபாரத போர் .

பதினெட்டு நாட்கள் குருசேத்திரம் என்ற படுகளத்தில் பீஷ்மர் ,துரோணர் .கர்ணன் .அபிமன்யு போன்ற மாவீரர்களும் .துரியோதனன் மற்றும் அவன் தம்பிமார்களும் பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும் தங்கள் இன்னுயிரை இழந்தனர் .பகடைக்காய்களை உருட்டி ஓர் பெரும் போரியா உருவாக காரணமாயிருந்த சகுனியும் பலியானான் .

கூனி செய்த சூழ்ச்சியாலும் ஓர் போர் நடந்தது .அது ராம -ராவண யுத்தம் . அதில் இல்லங்கை அழிந்தது . விபீசணன் மற்றும் அவனை சேர்ந்த சிலரையும் தவிர அரக்கர் இனமே ஒழிக்கப்பட்டது .

peage (5)
அன்று அரக்கர் இனம் ஒழிக்கப்பட்டது போல் இன்று தமிழர் இனம் அழிக்கபடுகிறது . இலங்கை மண்ணின் ராசியே இதுதான் போல் லிருக்கிறது .

கூனியின் சூசியாலும் ஓர் போர் மூண்டது ,சகுனியின் சூதினாலும் ஓர் போர் மூண்டது .மனித குலத்திற்கு இவர்களால் தீமை ஏற்ப்பட்டு இருந்தாலும் ,நன்மையையும் கிடைத்திருப்பதை நாம் மறுக்கமுடியாது .ராமன் வனவாசம் செல்லாவிட்டால் ராமாயணமும் ,பாஞ்சாலி சபதம் செய்யாவிட்டால் மகாபாரதமும் நமக்கு கிடைத்து இருக்குமோ ? அல்லது பாரோர் போற்றும் பகவத்கீதையும் நமக்கு கிடைத்து இருக்குமோ ? இன்றுவரை சூதும் சூழ்ச்சியும் இப்படிதான் கேடு விளைவிக்கும் என்று உதாரணமாய் காலம் காலமாய் மக்கள் உபதேசம் பெரும் பல காவியங்களும் மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் கிடைத்து இருக்குமோ ?

சகுனி ,கூனி இவர்கள் இருவரையும் நாம் தூற்றுவத இல்லை போற்றுவதா ? எப்படி இருந்தாலும் நல்லவர்களும் வல்லவர்களும் மட்டும்தான் சரித்திரத்தில் சாகாவரம் பெற முடியும் என்ற வாதத்தை உடைத்தெறிந்து பொல்லாதவர்களும் கூட இடம் பெறமுடியும் என்று நிரூபித்து மகாபாரதம் என்றால் சகுனியும் .ராமாயணம் என்றால் கூனியும் உடனே எல்லோரின் நினைவிற்கு வரும் , சாதனையாளர்களே சகுனியும் கூனியும் எனக் கூறி விடைபெறுகிறேன் .
வணக்கம்

*******************************

விழிகள்

விழியோரத்தில் உன் விழியோரத்தில்
ஆர்வமும் ஆசையும் பொங்குவது - ஏனோ?

நட்பின் மீது ஆர்வமோ ? இல்லை - உன்
உன் நட்பின் மீது காதலோ?

புரியாதோற்கு இது குழப்பம்
புரிந்தவற்கோ இத்து இன்பம் இன்பம்
நட்பிடம் வைக்கும் அன்பும் காதல் தான்
காதலியிடம் வைக்கும் அன்பும் நட்புதான்

ஹ ஹ குழம்புதோ

********************
ஓ மனிதா

உன்னிடம் நிறைய பேச ஆசை
நீயோ நிற்காமல் ஓடுகிறாய்
பதினைந்து நாட்கள் உண்னை கானது
பதினைந்து யுகங்களாய் போனது

உணகென்று மனம் இல்லையோ ?
உன்மீது அன்பு செலுத்துவோருக்கு -உன்
மனதில் துளியும் இடம் தர மாட்டியோ?

நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று உரைக்கிறாய்
அப்பாவி பெண் ஒருத்தி -உன்னை
நண்பனாக ஏற்று இன்று எல்லாம் -நீயே
என்று காத்துகிடகிறாள் தினம் தினம் -இந்த
வலைத்தளத்தில் உன் மனமெனும் வலையில் மாட்டி

அது -உனக்கு தெரியும் புரியும்
ஆனால் காணதது போல் வருகிறாய்
கண்டதும் பேசாமல் போகிறாய்
ஓரு வணக்கத்தையும்
ஓரு பையையும் சொல்லிவிட்டு ஓடுகிறாய்

பெண் பாவம் பொல்லாதது -அவள்
மனம் நோக செய்யாதே பாவமாவள்

உன்னிடம் நிறைய கனவுகள் உண்டு
நீ இருக்கும் இடத்தில தான் -தன்
கடைசி காலமென்று இருக்கிறாள்

உன் வீட்டு வேலைகாரியாய் சமையல்காரியாய்
இல்லை-உன் குழந்தைகளுக்கு ஆயவகவோ
உன்னருகில் இருக்க ஆசைகொண்டாள்
இந்த ஜென்மத்தில் நட்பென்ற அன்புடன்
*******************************

Ruthra:
கூனியும் சகுனியும்........அருமை

மகாகவி பாரதி-யின் வரிகளை சொல்லி ஈழ விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்து செல்வோம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொயாகும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

tks frd

*************************சுதந்திர தின விழா

வெள்ளையனிடம் மாட்டிய - நம்
தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது -உண்மை

ஆனால் -அதை பெற்ற நம்
மனித குலத்திற்கு சுதந்திரம் இருக்கிறதோ ?
நம் தேசத்திற்குள் எல்லோருக்கும் -உண்மையான
சுதந்திரம் இருக்கிறதோ இல்லை?

மாற்றானிடம் அடிமை பட்டபோது
கொந்தளித்து போராடி சுதந்திரம் பெற்றோம் -அன்று
இன்றோ -சொந்த நாட்டில் அடிமைகளாய்
இழிநிலை மாறது கொத்தடிமையாய் வாழ்கின்றனர் -பலரும்
இது மாறாத தொடரும் -என்றும்
அழிவில்லாத நிலமைதானோ -எப்போதும் ?

அடுத்து - ஆனால் பெண்ணுக்கும்
பெண்ணால் ஆணுக்கும் சுதந்திரம் இல்லா நிலை

கணவனால் ஆட்டிபடைக்கும் நிலைக்கு கட்டுப்பட்ட
பெண்ணவளோ திருமணத்திற்கு -பின்
தன் சுதந்திரம் பறிபோனது என்ற வருத்தத்திலும்

மனைவிக்கு கட்டுப்பட்டு தன் இஷ்டத்திற்கு
நடக்க முடியாத ஆனும் தன் -திருமணத்தால்
சுதந்திரம் பரி போனதென்ற துக்கத்திலும்
இருவரும் சுதந்திரமில்லை என்று வெறுபுடன்
குடும்பமெனும் குப்பி கொட்ட -அதில்
கிடைக்கும் வைரங்களாகிய குழந்தைகளோ
வளர்ந்து இருவரின் கட்டுபாட்டுக்கு அடைங்க முடியாது
சுதந்திரமில்லை என்று நட்புகளிடம் குறைபடுவதும்
என்ன கொடுமைடா சாமி -நாடு
சுதந்திரம் பெற்று இருந்தாலும்
நாம் எல்லாம் சுதந்திரமில்ல நிலையில் வாழ்கிறோம்
என்ற நினைவிற்கு எதுக்கு கொண்டாட்டம் ???????

******************************

கருத்துகள் இல்லை: