வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அன்பு
ஏங்கிய நினைவும்
எதிர்பார்த்த அன்பும்
எட்டி பார்க்காத நட்பும்
மறைந்து போகாது
மறைந்து நிற்கும் நினைவுகளா?
*****************************குரங்கு
குரங்கென்றால் குட்ரமோ ?

குரங்கிற்கு இயல்பாய் தாவும் குணம் -ஆனால்
மனிதற்கோ சந்தர்பம் தேடி தாவும் -மனம்
இதில் குரங்கிற்கு ஏன் இடம் -மனித
மனம் போல் இல்லை குரங்கு மனம்

சந்தோஷத்தில் குதிப்பது குரங்கு -மனம்
சந்தேகத்தில் குதிப்பது மனிதர் -மனம்

இயல்பாய் தாவும் குரங்கு -மனம்
இல்லாததை தேடி தாவும் மனித -மனம்
குரங்குகையில் கிடைத்தால் உடனே-வீண்
மனிதர் கையில் கிடைத்தால் காலம்
முடியும் வரை சிறிது சிறிதாய் வீண்
************************

மனமே

உருகும் மனமே
மருகும் குணமே
மன்னிளில் விழும் -உன்
வியர்வை துளியோ மறையாது

நினைவில் ஆடும் - உன்
உருவமோ மறையாது
கள்ளமில்லா உன் -சிரிப்பும்
கபடமில்ல உன் -பேசும்
வஞ்சமில்லா உன் -அன்பும்
வாழ்வில் மறக்காத நினைவுகளாய்
என் - மனதில் என்றும் எப்போதும்
***************************
குரங்கு மனம்

துணை பிரிந்து வாழும் கடுவனுக்கோ
அன்பை பொழியும் மந்தி நட்பானது

கடுவன் துணையோடு வாழ
எத்தனையோ வற்புறுத்தி வந்தாதாம் மந்தியோ
வாழ்வில் அக்கறையோ விருப்பமோ
இல்லாத கடுவனோ கடுமையாய் உழைததாம்
தன் -துன்பங்களை மறந்து வந்ததாம் எப்போதும்

என்னதான் அது சிரித்தாலும் -அதன்
வேதனைகளை சகிக்காத மந்தியோ
அதை பாவம் என நினைத்து நினைத்து
கடைசியில் பாவமாகி போனது
கடுவனிடம் எல்லையில்லா பிரியமும்
அன்பையும் வைத்து தன்னை பாவமாகி கொண்டது

\எத்தனையோ உறவுகள் இருந்தும்
கடுவனே உயிர் என நினைத்தது மந்தியோ
அது -புரிந்தும் புரியாது போல் முறைத்து கடுவனோ

புரிந்த மந்தியோ விலகிவிட்டது கடுவனை விட்டு
ஆனாலும் மந்தியின் மனமோ
கடுவனை மறக்காது தினம் எட்டி நின்று பார்த்து
தன்னை சந்தோசபடுதி கொண்டதாம் மந்தியோ
இத்து மந்தியின் உயிர் பிரியும்வரையும்
தொடரும் நினைவுகளாய் நிகழ்வுகளாய் -எப்போதும்
**************************
மனிதா

மனம் மறந்த மனிதனே
சுகம் மறந்த மனிதனே
உழைப்பாய் மாறிய இயந்திரமே

உணகென்ற சுகம் இல்லையோ ?
உணகென்ற மனம் இல்லையோ ?
இல்லை *-உண்னை நேசிக்கும் -அன்பு
உயிர்கள் எதுவும் இல்லையோ ?
இல்லை -அனைவரையும் நேசிக்கும்
மனம் உனக்கு இல்லையோ ?
இல்லை -உன் அன்பை பகிர்ர்ந்து
புதிய உறவுகளுக்கு தர மனம் இல்லையோ ?

மரங்களோடும் பறவைகளோடும் மட்டுமோ
உன் உலகமென்று இருந்து -நீயும்
மனம் மறத்து மரமாகி போகாதா மனிதா

நீ உழவன் என்றாலும் உழைப்பாளி என்றாலும்
உனக்கும் உயிர்களும் உணர்வுகளும் உறவுகளும் -உண்டு
அதையும் தாண்டி நட்ப்பு என்ற பொக்கிஷமும் உண்டு

எதை மறந்தாலும் நட்பை மறக்காதே மனிதா

***********************

இயற்க்கை

மேக மகன் சந்தோசித்தால்
பூமி மகள் குளிர்ந்து போவாள்

சூரியனோ கோபித்தால்
பூமி மகளோ உஷ்ணமாவாள்

நண்பனே நான் உன்னை கோபித்தால்
இரவை நிலவு கோபித்தால்
எல்லாம் இருண்டுவிடும்

சாமியை மானிடம் கோபித்தால்
அன்பும் அருளும் மறைந்து போகும்

நண்பனே நான் உன்னை கோபித்தால் ?
முடியாத ஒன்றை முடிக்க நினைத்தாள்
முடிவோ மரணமாகி போகுமோ ?

******************************************
நட்பே நட்பே


நாளும் பொழுதும் நமக்கே நமக்கே
அன்பும் பண்பும் நமக்கே நமக்கே

பாடிதிறிவோம் பேசிதிறிவோம்
நாலும் பொழுதும் நாமே நாமே

இன்னல் என்றாலும் இனிமை என்றாலும்
இணை பிரியாது இருப்போம் என்றும்

துன்பம் என்றாலும் துயரம் என்றாலும்
துடித்து போவோம் ஒருவருக்கு ஒருவர்

நட்ப்பு பிரிந்தாலும் பிரிக்கப்பட்டாலும்
பிரிவினை இல்லை நமக்கு என்றும் -மனதில்
***************************
விழிகள்
விழியோரத்தில் உன் விழியோரத்தில்
ஆர்வமும் ஆசையும் பொங்குவது - ஏனோ?

நட்பின் மீது ஆர்வமோ ? இல்லை - உன்
உன் நட்பின் மீது காதலோ
*************************

கருத்துகள் இல்லை: