வியாழன், 15 டிசம்பர், 2011

சுதந்திர தின விழா

வெள்ளையனிடம் மாட்டிய - நம்
தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது -உண்மை

ஆனால் -அதை பெற்ற நம்
மனித குலத்திற்கு சுதந்திரம் இருக்கிறதோ ?
நம் தேசத்திற்குள் எல்லோருக்கும் -உண்மையான
சுதந்திரம் இருக்கிறதோ இல்லை?

மாற்றானிடம் அடிமை பட்டபோது
கொந்தளித்து போராடி சுதந்திரம் பெற்றோம் -அன்று
இன்றோ -சொந்த நாட்டில் அடிமைகளாய்
இழிநிலை மாறது கொத்தடிமையாய் வாழ்கின்றனர் -பலரும்
இது மாறாத தொடரும் -என்றும்
அழிவில்லாத நிலமைதானோ -எப்போதும் ?

அடுத்து - ஆனால் பெண்ணுக்கும்
பெண்ணால் ஆணுக்கும் சுதந்திரம் இல்லா நிலை

கணவனால் ஆட்டிபடைக்கும் நிலைக்கு கட்டுப்பட்ட
பெண்ணவளோ திருமணத்திற்கு -பின்
தன் சுதந்திரம் பறிபோனது என்ற வருத்தத்திலும்

மனைவிக்கு கட்டுப்பட்டு தன் இஷ்டத்திற்கு
நடக்க முடியாத ஆனும் தன் -திருமணத்தால்
சுதந்திரம் பரி போனதென்ற துக்கத்திலும்
இருவரும் சுதந்திரமில்லை என்று வெறுபுடன்
குடும்பமெனும் குப்பி கொட்ட -அதில்
கிடைக்கும் வைரங்களாகிய குழந்தைகளோ
வளர்ந்து இருவரின் கட்டுபாட்டுக்கு அடைங்க முடியாது


சுதந்திரமில்லை என்று நட்புகளிடம் குறைபடுவதும்
என்ன கொடுமைடா சாமி -நாடு
சுதந்திரம் பெற்று இருந்தாலும்


நாம் எல்லாம் சுதந்திரமில்ல நிலையில் வாழ்கிறோம்


என்ற நினைவிற்கு எதுக்கு கொண்டாட்டம் ???????

******************************கட்டிடமும் கலையும்

கைவண்ணத்தில் விளையும் கலைகளாம்
அதில் கட்டிடமும் ஓர் கலையாம்

கலைகள் ஆயிரம் இருந்தாலும் -நம்
கண்கவர் கலைகளில் கட்டிட கலையும் ஒன்றாம்

கூர்மையான அறிவுகண் கொண்டு நுணுக்கமாய்
குன்றுகளையும் கோவில்லாக்கலாம்
குடிசைகளையும் கோபுரமாக்கலாம்

வெற்று இடங்களையும் குப்பைமேடினையும்
மாடமாளிகையாகவும் அரண்மனையாகவும் மாற்றிடலாம்
அரசு காலமதில் பாறைகளும்
கருங்கல்லுமாய் கட்டிடங்கள்
பண்டைகாலமத்தில் செம்மன் கொண்டு கட்டிடங்கள்
சுண்ணாம்பு கொண்டும் கட்டிடங்கள் -பின்
சிமெண்ட்டும் செங்கல்லுமாய் கட்டடகலையில் -ஓர்
அறிய மாற்றங்களும் மார்டன் முறைகளும்

மனித ஜீவன்கள் தோன்றிய காலத்தில் -இந்த
கலையும் தோன்றியது நிஜம்
மணலில் கோபுரம் கட்டி மண்ணில் குடிசைகட்டி
மரங்களையும் இலைகளையும் வைத்தோ
கூரையும் கதவும் செய்தனர் நம் முன்னோர்கள் -இன்றோ

கட்டட காலைகளில் கைவண்ணத்தை காட்டவோ -ஓர்
தனி படிப்பும் வந்தது சிவில் இன்ஜீனியரிங் - என்று

நம் எண்ணங்களின் அலைவரிசையில் உதிக்கும்
அற்புதமான வடிவங்களை -நம்
எண்ணம் போல் அள்ளி தெளித்து
அற்புதாமாய் கட்டிடம் கட்டும் கலைபடிப்பு

எத்தனையோ ஏழைகளின் ஒட்டிய வயிற்றிக்கு
பணம் மெனும் உதவிகிட்டி எக் -காலத்திலும்
ஓரு வேளை பசி தீர்க்கும் அறிய கலை
என்றும் அழிவில்லாதா மாற்றங்களை
குறைவின்றி மாறிவரும் ஓர் அறிய கலை
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௮ ஆகஸ்ட்
latha:
நட்பை கொன்றவளே

ஓர்குட்டில் தோழியாய் வந்தவளே
உன் - அன்பெனும் தோகை விரித்து
என்னை நிழலாக காத்தவளே

உன் -பாசத்தை மழையாய் கொட்டி
உன் -அன்பை அலையாய் அடித்து
என் -சந்தோசங்களை சுனாமியாய்
வாரி சென்றாயோ காதலியாய் என்று ,மாறி
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௭ ஆகஸ்ட்
latha:
இதயம்
நினைவுகளை தேக்கும்
நிரந்தர இல்லம் -இதயம்

இனிமையான உணர்வுகளை அடிகடி
நினைவூட்டி மகிழும் தேன்கூடு -இதயம்

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்கும்
எண்ணங்களின் அலை வடிவங்களின் தொகுப்பு -இதயம்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௭ ஆகஸ்ட்
latha:
நிணைவு

ஒற்றை ரூபாயில் ஓரு உசுரு
என் நினைவாய் உன்னிடம் -இது
இந்த எழுத்துக்கள் அழிந்தால் -நான்
இல்லை என்றும் உன் -மனதில்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௬ ஆகஸ்ட்
latha:
நிணைவு

ஒற்றை ரூபாயில் ஓரு உசுரு
என் நினைவாய் உன்னிடம் -இது
இந்த எழுத்துக்கள் அழிந்தால் -நான்
இல்லை என்றும் உன் -மனதில்
*************************************

கருத்துகள் இல்லை: