ஞாயிறு, 13 மார்ச், 2011

கவிதை

கவிதை சொல்கிறேன் என்றாய்
காத்திருந்த கவிதைக்கு
சொல்லாமலே\ போகிறாய்
கடுக்காய் கொடுத்துவிட்டு

**************************
வீட்டுகாரியும் வேலைகாரியும்

இல்லத்து அரசியவளோ
வேலைகாரியாகலாம் -நம்
இல்லத்தின் தேவைகளுக்கு-ஆனால்

இல்லாத அரசி எவளோ
இல்லத்து அரசியாககூடது -நம்
வீட்டு வேலைக்காரி அவளோ

முன்னவளோ வேலைகாரியானாலும்
மதிப்புதான் எல்லோருக்கும்
பின்னவளோ இல்லத்து அரசியானால்
கொண்டவனுக்கு கேவலம்

************************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இயற்கை எளில் கொஞ்சும்
இனிமையாய் பேசும்
எறும்பு போல் சுறுசுறுப்பாய்
மக்கள் ஓடி ஓடி உழைக்கும்
தொழில் மாநகரம் கோவையில்
வெங்கட் சித்திராவின்
அன்பு எனும் பாசபின்னைபில்
இல்லறம் எனும் நல்லறத்தில்
உதித்த அன்பு மகவான சுரேஷ்பாபு

பெற்றோருக்கு மதிப்பையும்
மரியாதையும் அள்ளித்தந்து
நல்பிள்ளையாய் வளர்ந்து
நன்கு கல்விபயின்று பருவத்தில்
காவிய என்னும் அழகியை மணந்து
குழந்தைகளை பெற்று அவர்களின்
எதிர்கால வளத்திற்கு நன்மை ஈனும் பொருட்டு

அயல்நாட்டிற்கு பொருள் தேட சென்று
வியர்வை சிந்தி ஒழுங்கான தூக்கமும்
நல்ல உணவும் இல்லாது ஆண்டுகள் -பல
கஷ்டப்பட்டு உழைக்கும்

ஓரு நல்ல நாள் கெட்டநாள்-என்று
சந்தோசத்தை பகிரமுடியாது
குடும்பத்தை பிரிந்து அவர்களின்
நினைவுகளும் நிழல்களும் நினைத்து
எங்கோ கன்னுகெட்டாத தூரத்தில்
கஷ்டப்படும் அன்பு நண்பர் சுரேஷ்பாபு
நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மனிதனாய் பிறப்பது கொடுப்பினை
அப்படி பிறந்திடினும் நல்
மகவாய் வளர்வதும் அதிசயம்
அப்படி வளர்ந்திடினும்
நற் பெயர் ஈனுதல் அதிசியம்
எல்லா வகையிலும் எல்லாம் பெற்று
முழு மனிதனை வாழ்ந்து காட்டுதல்
அதினிலும் அதிசியம் தங்கள்
அப்படி வாழ்வதும் சிறப்புதான்
உங்கள் குடும்பம் என்றும்
பின்னாளில் சிறந்து விளங்கும் தங்களின்
இந்த நாடுமாறி வாழும் தியாகத்தால்
வாழ்க வளமுடன் என்றும்

*******************************************
என்னமோ வாழ்க்கை

ஆசை ஆசையாய் கைபிடித்து
அன்பு முழுதும் கொட்டிவைத்து
அக்கறையாய் வாழவைத்தும் -என்
அன்பு மனைவியே ஏன் போனாய் ?

உண்னை -விடியலியில் விழிக்க சொன்னேனா ?
இல்லை -கருகலில்லே களைபறிக்க அழைத்தேனோ?
எட்டுமுழ கண்டாங்கிசீலை எடுத்தது
பின்கொசுவம் உடுத்திக்கிட்டு கொண்டையா போட்டுக்கிட்டு
தலை நிறைய பூவை வைத்து
நெற்றியில் குங்கும பொட்டிட்டு

கறியும் மீனும் சமைதுகிட்டு
கூடையிலெ சுமந்துகிட்டு
களத்துமேடு எடுத்தது வந்து
கைநிறைய உருண்டை செய்து
வாய்நிறைய ஊட்டிவிட்டு
புன்னகையை சிதறவிட்டு -என்
களபெல்லாம் போக்க சொன்னேனோ ?

இத்தனை ஆசை இருந்தும் -உன்
செயலோ உன் விருப்பமென்று
அத்தனையும் கணவாக்கி -என்
கண்நீற்றில் மறைத்தாலும்

எதிர் மறை குணமாக நீ வந்த போதினிலும்
அத்தனையும் தாங்கி நின்றேன்-எப்போதும்
ஏன் என்று கேட்டதில்லை எதுக்கும் திட்டியதில்லை
வாய் பேசாது நான் இருந்தும் -நீ
வாழலாம ஏன் பொன்னாய்
என்னமோ வாழ்க்கை இது ஏந்தான் வாழணுமோ?

****************************************************
நீ

உணகென்று ஓர் ஆசையும் இல்லையோ ?
உணகென்று ஓர் நினைவும் -இல்லையோ?
உணகென்று ஓர் உயிரும் இல்லையோ?

கவலைபடதே நட்பே -உன்
உயிராய் நினைவாய் நிழலாய் -எப்போதும்
நான் இருபேன் உன் நினைவுகளோடு

என் - மனதில் சொல்லும் வார்த்தைகளும்
என் - நினைவில் செய்யும் செயல்களும்
உன் மனதில் பதியும் நம் நட்பால்
****************************************************

எல்லாம் நீயாக

இதழ் விரித்து பூத்த -பூவில்
புண்னகை சிந்தும் -உன்
முகத்தை காண்கிறேன்-எப்போதும்

மலராத மொட்டுகளை பார்க்கும் போது
உன்னில் புதைந்த சோகத்தை காண்கிறேன்
உன் -வாடிய முகத்தினிலே

எது எப்படி ஆகினும் -உண்னை
தாங்கும் செடியாக நான் இருக்க
கவலை வேண்டாம் உனக்கு -எப்போதும்

என்னை தழுவும் தென்றலாகவும்
உதிக்கும் சூரியனாகவும்
மறையும் நிலவாகவும்
உண்ணும் உன்னவாகவும்
பார்க்கும் பொருளாகவும் -எப்போதும்
எல்லாமும் நீயே நீயாக தெரிவதால்

இனி நீயும் நானும் வேரில்லை
உடல் இரண்டென்ராலும் உயிரால் ஒன்றுதான்
என -எல்லாமும் நீயாகி போனயே

**************************************