தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
********************************************
காசி
பெறோருக்கு எழாவது மகவாய் -பிறந்தாய் ......
புண்ணிய காசிக்கு சென்றால் பாவங்கள் ......
நீங்கும் என்பதோ ஐதீகம் ......
ஆனால் -இந்த காசியிடம் சென்றாலோ .......
பாவங்கள் நம்மை அன்டாதே எப்போதும்
*****************************************
உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே ......
சிறப்பில்லா மனிதன் தெருவினிலே ....
உப்பு அதிகரித்தாலும் குப்பையில்லே ......
சிறப்பு அதிகரித்தாலும் தெருவினிலே .....
புகழுடன் போஸ்டரில் படத்துடன் .......
உப்பிட்டவரை உயிர் உள்ளவரை -நினை .....
உணவிடாதவரை எப்போதும் நினைகாதே
*
*
*************************************
முத்தம்
அன்னநடை நடந்து வந்து .......
குறுஞ்சிரிப்பு சிரித்து நீயும் ......
என்னை இருக்க தழுவி ......
என் -கண்ணத்தில் நீ ......
பதித்த முதல் முத்தத்தை ......
என் -இறப்பிலும், நிணைத்து ......
புல்லரித்து மரிதேனடா......
என் அன்பு செல்லமே
*********************************************
தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
*******************************************
கண்நீரே
நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....
ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....
திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ
***********************************************
தாலாட்டு
கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்கலை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......
ரயிலின் காலி சீட்டதுவை -நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....
நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......
கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........
என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....
கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே
**************************************
அன்றும் ...இன்றும்
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை
**************************************************
சௌக்கியமா கண்ணே
சொக்கியமாக இருந்ததாலே ....
தயிர் வாக கடைக்கு வந்தேதான் ......
உண் -விசாரிப்புகளுக்கு நலம் என்றேன் ......
உண்னை -ஓரு வார்த்தை ச்வோக்கியமா .....
என நான் கேட்டிருந்தாலும் .......
உயிர் வலிக்க காதலித்து ...
என்னை நினைத்து வாழும் உனக்கு ....
செத்து விட தோன்றும் என்று .....
கேட்க மனம் வரவில்லையே .....
கேட்டு விட்டாலோ செத்து விடு -என .....
என் மனம் என்னை சொல்லுமேபட்ட .....
பிறகு -உண் விசாரிப்புகள் பொய்துவிடுமே......
பின் - உயிர் வலிக்க காதலித்த ....
காதலும் செத்துவிடுமே-அன்பே
************************************************
மழையே
வந்ததும் சாதிகிறாய் ......
மண்ணையும் மரத்தையும் ......
உயிர்களையும் மனிதர்களையும் .....
உன் இஷ்டம்போல் முத்தமிடுகிறாய் ......
உனக்குத்தான் எத்தனை தைரியம் .....
யாரும் உண்னை பிடிக்கவும் முடியாது ......
ஏதும் செய்யமுடியாதென்று ......
ஆனால் -என்னால் என் காதலிக்கு ......
கணவில் கூட முத்தம் தர முடியலையே .......
அவள் மாமன்களை நிணைத்தால்
*****************************
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை
அன்று
நிலவை காட்டி ....
ஸோரு ஊட்டிய அம்மாக்கள் ....
இன்று
நிலவுக்குள் சென்று ......
ஸோரு ஊட்டும் அம்மாக்கள் ...
அன்று
கல் ஆனாலும் கணவன் .......
புல் ஆனாலும் புருஷன்.....
தெய்வமாக மனைவிகளுக்கு .....
இன்று
கள் அருந்தினாலும் .......
புல் அடித்து வந்தாலும் ....
நிதானமாக வந்தாலும் .....
கோபத்தில் மிதிக்கும் மனைவிகள்
அன்று
இளமையிலும் முதுமையாக .....
காட்சி தந்த நாகரீகம் .தெரியாத .....
பாமர மக்கள் .....
இன்று
முதுமையிலும் இளமையாக .....
காட்சிதரும் நாகரீகத்தில் .....
ஊறிய மக்கள் ......
அன்று
கலாசாரம் மாணம் .....
மரியாதை கட்டுப்பாடு .....
உயிராய் இருந்தது ....
இன்று
கலாசாரம் மாறுதலும் ....
மாணம் மறியாதைக்கு .....
கட்டு படாததும் உயிர் வாழ்வது ....
அன்று
எழுது அறிவித்தவன் ......
இறைவனுக்கு சமம் .....
இன்று
எளுத்து அறிவிப்பவன் ......
கற்பவரின் கேளிக்கும் .....
மிரட்டலுக்கும் பயந்தவர் ......
அன்று
திருமணம் பெரியோர்கள் .....
முன்னின்று சொர்க்கத்தில் .....
நிட்சயிததாக என்னும் நிலை ......
இன்று
நிமிடதிருக்கு நிமிடம் .....
தாங்களாகவே நிட்சயித்து.....
தாங்களாகவே பிரியும் ......
நரகத்தின் நிலை .......
*************************************
தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போநேனே ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........
அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....
அழைகாது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்
**************************************
ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
***************************************************
சாட்சி
அடுத்தடுத்து டேபிளில் -நாம் .....
அமர்ந்து உண்டாலும் .....
கடைக்கண் பார்வையால் ........
பேசியதும் நிஜம் என்றால் .....
நீ -என்னை நினைத்த போது .....
நான் -உண்னை நினைத்து .....
உண்மையே என்றால் -நம்.....
இருவருக்கும் .ஒரே.....நேரத்தில் ......
புரை ஏரியதே சாட்சி
****************************
அதிகேசன்
ஆதி கேசனாய் ஆண்டவனின் ....................
நாமம் தரித்த -நான் .........................
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திட்டேன் ...........
பள்ளி பருவமதை முடித்து ......
கல்லூரியில் அடியெடுது வைதேன் ............
தேடி வந்த நட்புக்களும் ....................
கல கல நாட்களும் .........
ரொன்ப ஜாலியான வாழ்கை..............................
இறுதி ஆண்டோ -என் .................
வாழ்வை புரட்டி போட்ட -ஓரு ...............
சோகமான நிகழ்சியாய் முடிந்ததுவே ..................
..இரு சக்கர வாகனத்தில் .................
நண்பர்களுடன் உல்லாசமாய் .............................
சாலையில் பயணித்தபோது .............
படீர் என மரக்கிளைஒடிந்து -விழ ............
வாகனம் தூக்கி எரியப்பட்டு -நானோ .............
வெகு தூரத்தில் பறந்து விளுந்தேன் ...........
கண்முழித்து பார்கையில் மருத்துவமணையின்-படுக்கையில்
இடுப்புக்கு கீழ் வெறுமையான எண்ணம் ...............
போர்வையை எடுது பார்கையில் ....
கால்கள் இருந்ததால் நிம்மதி ...............
பெருமூச்சு விட்டபடி உணர்வு இல்லை என்றேன் ...
முது தண்டுவடத்தில் அடிபட்டதால்-இனி .....
நீ நடக்கமுடியாது என்ற சொல்ல ..................
பேரிடியாய் இறங்கியது நெஞ்சத்தில் ............
இனி -திருமண வாழ்க்கைக்கும் பயனில்லாது .......................
என்னுடன் என் சந்ததிக்கு ........................
முழுக்கு எனும் வேதனையும் .....
என்னை கொல்ல வீல் சேர்ரே ..................
என் -வாழ்கை என முடிவானதே .....................
தந்தை இல்லாததால் தயை ...............
அனாதையாய் விட்டு செல்ல மனமில்லாது ..................
நடை பிணமாய் என் வாழ்கை தொடர்ந்த்துவே...............
மீண்டும் குழந்தையாய் நிணைத்து ........
பணிவிடை செய்து என்னை ஆளாக்கியது .............
அன்னை என்னும் அன்பு தெய்வம் .............
உழைத்து தாயை காப்பாற்றும் -பருவத்தில் ..........
தாயோ என்னை சீராட்டி வளர்கிறாள் ....................
..
தமிழே உன்மேல் ஆசை
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு ...................
Sent at 8:57 AM on Saturday
வெள்ளி, 2 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக