ஞாயிறு, 30 ஜனவரி, 2011

காதல்

காதல் கத்திரிகாய்
கத்திரிகாயோ வாடினாலும்
குழம்புக்கு உதவும்

காதலோ மலர்ந்தாலும் வாடினாலும்
கண்ணீருக்கு மட்டுமே உதவும்
சந்தோசிகவும் துக்கிக்கவும்
?????????????????????????????????????????????????
இறைவா

காசும் இருக்கு பணமும் இருக்கும்
படுத்து புரள படுகையும் இருக்கும்
ஆனால் பங்கு போடா துணையும் -இல்லை
என்னை மறந்து எங்கு போனதோ -இறைவா

ஆசை ஆசையாய் கரம்பிடித்து
அனபுமனைவியாய் அழைத்துவந்து
இல்லத்து அரசியாக்கி இனிமையாய் வாழ்ந்தும்
இல்லாமல் போனாளே என் மனைவி -இறைவா

காதல் மொழிபேசி
கண் இமைக மறந்தும்
கள்ளமில்லாமல் பழகிய அன்பு மனைவி
என்னை மறந்து போனது ஏனோ -இறைவா

வீடு என்ற கோவினில் வில்லங்கம்
கூடாது அன்பு போதுமென்றால் -என்னை
விட்டு என் துணை போனது ஏனோ இறைவா

பிறந்த பிள்ளை அவன் பின்னாளில்
என்னை மறந்து போக அவனை -என்னிடம்
இருந்து பிரித்து அழைத்து போனது ஏனோ -இறைவா

தோட்டமும் மரங்களும் -அங்கு
சுவாசித்து வாழும் காக்கை குருவிகளும்
என் துணை என்று இப்போது
மாறியது ஏனோ - இறைவா

கொஞ்சி கூவும் குட்டி பறவைகளின் ஒலியோ
என் குழந்தையின் குரலாய் ஒலிக்கிறதே
தூரத்து பெண்களின் மாமோவ் என்ற அழைப்போ
என்னவளின் குரலாய் எனக்கு ஒலிக்கிறதே -இறைவா

ஒன்றுமில்லா சண்டைக்கு
என்னை ஒதுக்கி போனாளே
ஆண் என்ற ஆணவம் என்னையும்
பெண் என்ற திமிர் அவளையும்
பணிந்து போகாது ஆட்டி வைக்கிறதோ
இந்நிலை மாறி நாம் இணைவோமா -இறைவா

காத்திருதளிலும் ஓரு சுகம் இருக்கு
காணமல் ஏங்குவதிலும் ஓரு சுகம் இருக்கு
காலங்கள் கடந்தாலும் கோலங்கள் மாறினாலும்
அவள் என்னை மறந்தாலும் மறுத்தாலும்
எப்போதும் அவளே என் துணை -இறைவா
****************************************************
நட்ப்பே
நட்ப்பே நட்ப்பே -நீ
எப்போ எப்போ வருவாயோ ?
என்னுடன் நிலையாய் நிலையாய் இருப்பாயோ ?
என் -விழிகளோ விழிகளோ எப்போப்தும்
உண்னை தேடி தேடி அலைகின்றதே..........

நீ - நிலையாய் நின்று பார்பாயோ ?
நிம்மதியாய் பேசி சிரிப்பாயோ ?
அலையாய் அடிக்கும் மனதாலே
அன்பை கொட்டி தருவாயோ ?

இல்லாத மொழியெல்லாம் விழியாலே பேசி
வியப்பை நீயும் அள்ளி அள்ளி தருவாயோ ?
நெருப்பாய் சுடும் விழியாலே
விலகி விலக்கி நீயும் போகாதா

மழையாய் பெருகும் என் -அன்பாலே
அதை அணைத்து நானும் மகிழ்வேனே
அன்பெனும் அலைகளில்
ஆசை எனும் நிலைகளை -நீயும்
என்னிடம் கொண்டுவந்து கரை சேர்பாயோ ?

நட்ப்பே நட்ப்பே நீயும் எங்கே ?
நாளும் பொழுதும் நமக்குண்டு
பிரிவும் கூடலும் நமக்கெதற்கு ?
பிரிவு நிலை எப்போதும் தேவை இல்லை
புரிதல் மட்டும் எப்போதும் தேவை இங்கு
நீயோ -எப்போ எப்போ வருவாயோ ?
**************************
இதயம்
இதயமோ கண்ணாடி -அதில்
பதிவதோ நம் நேசங்களே
அன்பெனும் பதிவுகளும்
ஆசை எனும் பதிவுகளும்
எப்போதும் அழிவதில்லை

இருப்பதுவோ ஓர் கைபிடியளவு -இதயம்
நிணைபதுவோ ஓர் கடல் ஆளவு -ஆசைகள்

நினைபதெல்லாம் கிடைத்து விட்டால்
நிணைவுகள் எதுவும் தேவை -இல்லை
*****************************

இதயம்
உன் இதயம் இதயம் -பறக்கிறதோ ?
அது -எங்கோ போகிறதோ ?
நிழலாய் நிழலாய் உன்னிடமோ
இப்போ இருகிர்றதோ ?

பரபதையோ பிடிப்பது யார்
உனக்கோ தெரிகிறதோ?
உன்னிடமோ இருப்தையோ
பறிப்பதுவோ யார் யாரோ ?

இதயமோ இருபதோ ஒன்றுதான்
அதன்னுள்லோ கலப்பதுவோ
எத்தனை எத்தனை உயிர்களோ ?

நட்பென்றும் உறவென்றும்
இதயத்தை பறிப்பதும் அன்பலே
நமக்கே நமக்கே தெரியாது
நம்மை நேசிக்கும் உயிர்கள் எதுவென்று

அறிந்து நேசிகும் உயிர்கள் பலவென்றால்
அரியாது நேசிகும் உயிர்களும் பல இருக்கும்
நம் இறப்பினில் தெரியும் நிஜம் எல்லாம்
நம்மை நேசித்த உயிர்களின் -விழிகளில்
பெருகும் கண்ணீர் துளிகளில்

அர்ரூபமாய் அதை கண்டோ
நாமும் ஆனந்தம் அடைந்திடுவோம்
பறந்திட்ட இதயமதுவோ
பல நல்ல இதயங்களில் கலந்தது -என்று
******************************************************

கருத்துகள் இல்லை: