வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

நட்புக்கள்

முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..
ஆனால் முகவரி தேடாது
முகம் பார்த்ததுவும் சிரிக்கும்

அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
ஆனால் ஆதாயம் தேடாது
ஆதரவாய் அரவனைகும்

பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
ஆனால் பாசத்தை மறந்தவை
பல்லிளிதும் பாசம் போல் நடிக்கும்
பாசாங்காய் பற்றி கொள்ளும் நட்பவை

கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்
நம் கஷ்டம் சொல்லாமலே -அறிந்து
நமை தேடிவரும் உண்மைகள் அவை
அவற்றின் விழியோரம் துளிரும்
சில துளி கண்ணீரில் அரியலாம்
நட்பும் இதுதான் உண்மையும் இதுதான் -என

**************************************

உறவுகள்

இதயத்தில் எழுதின உறவுகள் என்றும்
மறக்கப் படுவதும் இல்லை
மரிக்கப் படுவதும் இல்லை
உயிர் உள்ள வரை தொடரும்
உண்மை நட்பு

ஆனால் உயிருடன் கலந்த நட்புக்கள்
உயிர் மரித்த பின்னும்
ஆவியுடன் தொடர்பவை மேலோகத்திலும்

பூலோகத்தில் உள்ள உண்மை நட்புக்களோ
மரித்த நட்பை தான் ஆவி பிரியும் வரை
பார்க்கும் பூக்களிலும்
பேசும் நபர்களிடமும்
உறவுகளிடமும் நிணைவு கூர்ந்து
நட்பின் பெருமையாய் உணர்த்திவிடும்

நட்பிற்கு இலக்கணம்
குற்றம் செய்தால் தடுப்பது
நன்மை செய்தால் துணை போவது
உண்மைக்கும் பொய்மைக்கும்
உறுதுணையாய் நின்று நட்பை காப்பது

*********************************************

அழகு

பிறர் அழகை ரசிக்க
ஆழகு தேவையில்லை -உனக்கு
கண்கள்மட்டும் போதும்
அவள் பார்கிறாலோ இல்லையோ
உண்னை- என்று தெரியாத போது

உன் இதயத்தை நேசிக்க
அவளிடம் இதயம் இல்லையோ -இல்லை
ஏர்கனமோ வேறு ஒருவரால்
அவள் இதயம் பரிகபட்டு விட்டதோ
யார் அறிந்தார் பராபரமே
**********************************

விடியல்

தினம் விடியும் விடியல்
விடிவெள்ளியின் முகத்திலும்
குளுமையான தென்றலின் தழுவலும்
இனிமையான குயில்லோசையும்
காக்கை குருவிகளின் இரைசலும்
ஆடு மாடுகளின் கத்தலும் காதலுமாய்
இனிமையாய் விடிவதோ உழவனின்
தினம் விடியும் பொழுதுகளோ

*************************
உண்மை

இருப்பதை விட்டு இல்லாதததை
தேடும் வாழ்க்கை இயற்கையாய் வீசும்
தென்றலை விட்டு தொலை தூர
வசந்தத்தை தேடி ஆலைவது
பேன் காற்றை சுவாசிப்பது போல்
***************************

நட்பு

உறவாக இல்லாவிட்டாலும்
உயிராக நான் இருந்தால் -உண்னை
உயிராக நேசிகும் உயிருக்கு ஏமாற்றம் நட்ப்பே

மறு பிறவி என்று இருந்தால் -அதில்
எந்த உருவாக இருந்தாலும்
உன் அருகே இருந்து உயிர்
உன் அருகே இருந்து உயிர் துறக்கும்
பாக்கியம் வேண்டி இறைவனை துதிகின்றேன்
உனக்காக உன் -நட்புக்காக

****************************

நிணைவுகள்

பார்க்கும் இடம் எல்லாம் உன் -உருவம்
நீ எங்கே நீ எங்கே இருகின்றாய்யோ ?
வருவாயோ வருவாயோ என் அருகே
நீ -வருவாயோ வருவாயோ என் உயிரே?

உட்சிபார்க்கும் மலை முகட்டிலும்
தெரிவது உன் -முகமே முகமே

தரை பார்த்து வெட்கித்தாலும்
நிழலாய் தெரிவதும் உன் -முகமே முகமே

தலையசைத்து அசையும் மரம் செடிகளின்
அசைவிலும் உன் -முகமே முகமே

பூக்கும் பூவின் விரிதலிலும்
உன் முகமே உன் முகமே

புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பிலும்
உன் -முகமே உன் -முகமே

சுட்டு எரிக்கும் சூரியனின் ஒளியிலும்
மின்னுவதும் உன் முகமே உன் முகமே

இருட்டில் மின்னும் நிலவின் ஒளியில்
கண் சிமிட்டுவதும் உன் முகமே உன் முகமே

தழுவும் தென்றலிலும்
உன்நினைவே உன்நினைவே

தூறும் சாரலில் பொழிவதும்
உன்நினைவே உன்நினைவே

கொட்டும் பணியிலும்
கொள்ளை போகும் குளிரிலும் -எப்போதும்
உன்நினைவே உன்நினைவே

எங்கோ கண்ணனுக்கு தெரியாது
எட்டா தூரத்தில் இருக்கும் உயிரே

உண்மை அன்பு என்பது நிஜம் எனில்
என்றாவது உண்னை பார்திடுவேணோ ?

இந்த ஜென்மத்தில் என் நிணைவுகள்
என்னருகே இருந்து -நான்
தொட்டு பார்க்கும் பாக்கியம்
கிட்டா விட்டாலும் எட்ட நின்று
கண்ணால் பார்க்கும் சந்தோசமாவது
ஒருமுறை எனக்கு கிட்டுமோ -இறைவா
*************************

ஆசை

கொட்டி கிடக்கும் கொள்ளை அழகே-உண்னை
வாரி அணைத்து முத்தமிட்டாலும்
தடவி கொடுத்தாலும்
அடித்தாலும் பிடித்தாலும்
என்னவளின் -முகம்
கருத்து போகிறது நான் -உன்
வெள்ளை நிறத்தில் மயங்கிவிட்டேன் -என்று
நிஜம் அதுவல்ல என்ன செய்தாலும் -நீ
பேச மாட்டாய் என் செல்ல பூனையே
***********************
நட்ப்பு

காத்திருக்கும் நேரமத்தில்
காரணமில்ல கோபம் வரும்

பிறகு பயமும் அனுதாபமும்
மனதை அலைகழிக்கு என்ன ஆனதென்று

யோசித்து யோசித்து புரியாது
ஓராயிரம் கவிதை வரும்

அதில் பிரிதலும் காதிருந்ததுவும்
காலத்தின் கொடுமை என்று
காரணம் கற்பிக்கப்படும் நட்பிடம்
*************************

கருத்துகள் இல்லை: