வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வேதனை

எண்ணிரண்டு பதினாறு வயதில்
எண்ணிய என்னமெல்லாம்
எழுத்தாணி வார்த்தையாய்
மாறியதும் ஏனோ?ஏனோ ?

ஆசைப்பட்ட வாழ்க்கை அதோ
அட்ச்சாணி முறிந்த வண்டியாய்
நிலை தடுமாறுவதும் -ஏனோ ?

அன்பாய் இருந்தும் ஆசையாய் இருந்தும்
அரவணைத்து ஆறுதல் சொல்ல யாருமில்ல
பந்தம் இருந்தும் சொந்தம் இருந்தும்
சொல்லி அழவோ யாரும் இல்ல
***********************
காதல்
ரசிபதெல்லாம் காதல்
பிடித்ததெல்லாம் காதல்
நேசிபதெல்லாம் காதல்
அறிந்ததெல்லாம் காதல்
தெரிந்ததெல்லாம் காதல்
ஒருவருக்கு ஐநூறு முறை காதல் வருமாம் -உண்மையோ?
*************************
புரிதல்

காடும் நிலையில்லாது
வீடும் நிலையில்லாது
நிற்க நேரமும் இல்லது
மனையும் நினைவில்லாது
மனைவியும் நினைவில்லாது
மனம் போன போக்கில் போனாலும்
என் மனம் ஒன்றை அறிவது யாரோ -இறைவா
*********************************

மூலிகை மருந்து

மாமனை நீ நினைகவில்ல
அதனால் எனக்கு மனம் சுகமில்லை
எந்த மூலைக்கு போனாலும் -என்
மூளை சரியாக எந்த மூலிகை வேனுமோ?

எம் மூலை போனாலும் -உன்
உன் நினைவே என் மூளையில்

உன் மடியில் தலை சாய்த்தால்
மொத்தமாய் எல்லாம் மறந்திடுமோ ?
உன் நினைவே நானாகி கலந்துதான் போவானோ ?
அதையும்தான் சரி என்று
செய்துதான் பார்ப்போமோ -என்
அன்பு கண்மணியே
**********************

நட்பு
நட்பை மறக்க நான் ஒன்றும்
அரசியல்வாதியும் இல்லை
உலகறிந்த பெரும் புள்ளியும் இல்லை
சாதாரண பெண் அன்புக்கும் நட்புக்கும்
இலகனமாய் திகழ விரும்பும்
அன்பான நட்பு விரும்பி
*********************
ஓவியம்

எழுதோவியம் உண்டு
தூரிகை ஓவியம் உண்டு
வண்ண ஓவியம் உண்டு
கோல ஓவியமும் உண்டு
எத்தனையோ வகை உண்டு ஓவியத்தில்
எந்த ஓவியமும் -உன் -
எழில் ஓவியத்திற்கு ஈடு உண்டோ - அழகியே
************************

ஆசை

நட்பை காண ஆசை என்றேன்
தொலை நோக்கியில் வலைத்தளத்தில்
நேரில் வருகிறேன் enகிறாய்
நடப்பதை சொல்
நடக்காததை சொல்லாதே தோழா
கடைசியில் தொல்லையில் முடியும்
உன் ஆசை உனக்கு இல்லை எனக்கு
*************************
கருப்பு + வெள்ளை = சூப்பர்

வெண் மேகத்தில் பிரகாசிக்கும்
சூரியனின் ஒளியின் அழகை விட

அந்திசாயும் இருளின் ஒளியில்
மின்னலாய் ஜொலிக்கும் நிலவின் ஒளி -அழகு

ஆயிரம் வண்ணங்கள் இருந்தாலும்
அதில்-அழகு சேர்து தனித்து தெரிவது கருப்புதான்

கண்ணனுக்கு தெரியும் கவர்சி எல்லாம்
கண்கொண்டு ரசிக்கத்தான் -ஆனால்
காலத்தால் அழிந்து விடும்

ரசிக்கமுடியாத கோலங்கள் எல்லாம்
காலத்தால் அழியா கல்வெட்டாய்
மாறுவதும் உண்டு சரித்திரத்தில்

வெண்மைக்கு கருமை அழகு
கருமைக்கு வெண்மை அழகு
தனித்து அழகு தருவதை -விட
இவை இரண்டும் கலந்த அழகு தனிதான்
******************************
முத்தம்
கவிதை எழுதிய கைகளுக்கு
முத்தம் ஒன்று தர பாவை
ஒருத்தி விளிக்க் -அவள்
அழகில் மயங்கிய பேராசை கவினனோ
ஆசையாய் அழக கரமும் நீட்ட

வெட்கமாய் இருக்கிறது கண்களை மூடவும் -என
அவள் விழித்ததுவும் இவன் அடிபணிய
முத்தமிட்ட அவளோ மின்னலாய் -மறைய

முத்தத்தின் ஈரத்தால் மெய்மறந்த அவனோ
சில நிமிடம் கழித்து கண் விளிக்க்
வாய்விட்டு அலறினான் - அவனோ

ஓரு அழகியின் முத்தத்திற்கு ஆசைப்பட்டு
மொத்தமாய் வாழ்நாளில் சம்பாதித்த
கையில் இருந்த ஓரு மோதிரமும் கானம் என்று

உசாறு உசாறு முத்தமிடுகிறேன் என்றாலே
நம்மை மொத்தமாய் கவிழ்க்க போகிறார்கள்
என்று அர்த்தம் சபலங்களை தவிர்க்கவும்
மனிதர் குல மாணிக்கங்களே
**************************
தொப்பை

வித விதமாய் உண்டு
வில்லங்கமாய் பெருத்தாலும்
இதுக்கும் ஓரு அழகு -உண்டு

பின்னலில் குழந்தைகள் தலைவைத்து உறங்கவும்
பேர பிள்ளைகள் சறுக்கி விளையாடும்
ஆனந்தமும் கிட்டும் -இல்லாத
ஒட்டிய வயிற்றிக்கோ இப் பாக்கியம் கிட்டா
*************************
உறவு
தெருவிளக்கு
நான் தலை சாய்ந்து நிற்கிரேன் வெட்கப்பட்டு
யாரையும் முகம் பாராது -ஆனால்
எல்லோரும் தலை நிமிர்ந்து நடப்துவோ
தம் எண்ணப்படி உருவங்களை பார்த்து ரசிக்க
என் ஒளியின் உதவியால்
**************

கருத்துகள் இல்லை: