செவ்வாய், 28 செப்டம்பர், 2010

இதயம்
----------------------
என் அன்புக்குரியவர்களின் வரிசையில் -நீயும்
என் இதய துடிப்பின் ஓசையில் -நீயும்
நிமிடத்தின் நினைவுகளில் எப்போதும்
நீங்க நினைவாய் -நீயும்

பாராமுகமாய் இருந்தாலும் -உன்
இதயத்தை தொட்டு கேள்-இவள்
என் நட்புகுரியவளா என்று ?

இதயம் சொல்லும் உன் உயிருடன்
நினைவுகளுடன் மூட்சாய் கலந்தவள் என்று
நட்பு என்று சொன்னாலும் நேசமும் உண்டு என்று

அடுத்த ஜென்மம் இருதால் -இருவரும்
ஒன்றாய் சேர இறைவனை பிரத்தனை -செய்
உன் நட்பு உண்மை என்றால்
********************************************

நட்பே

நட்பாய் இருந்தாலும் இதயத்தின்
மூலையில் எங்கோ அன்புகுரியவராய் ஒட்டிக்கொண்டு
கண்விழித்து கண் மூடும்வறை
உண்னை சுற்றி நிணைவுகள்
அலைபாய காரணம் என்னவோ
உன் விளையாட்டு தனமான பேச்சோ -இல்லை
எப்போதும் இல்லாத நட்பு என்ற காரணமோ புரியலை
நீ -என் அன்புக்குரிய நட்பாய் மாறியது
*****************************************

இறைவன்

கண்னுக்கு அரூபமாய்
நம் இஷ்டத்திற்கு ஏற்று சொரூபமாய்
இல்லாத ஓரு சக்தி நமக்கு
கேட்பதை அருளும் நம்பிக்கைதான் -இறைவன்

இறைகளிலும் அசைவம் சைவம் -என (இறை -இறைவன் )
பிரிவினை சக்தி உண்டு
சொரூப இறைகள் கொடூர இறைகள் -என

அமைதியான இறைவனுக்கு துளசியும் பூவும்
கொடூர இறைவனுக்கு உயிரினங்கள் பலியிடுதல்
ஆனால் -இரண்டையும் கும்பிடும் மனிதஇனங்களோ
தம் இஷ்டத்திற்கு இறைவனின் பெயரை சொல்லி
இல்லாத கர்மங்களை செய்து -+தம்
கர்மங்களுக்கு பாபங்களை சேர்க்கிறது

ஏதோ -இறவன் எனும் அரூபதிற்காவது
பயப்படும் ஜீவன்கள் இன்னும் இருக்கின்றன
கண்ணிற்கு புலபடவிட்டலும்
நம்பிக்கையில் கண்டு உணர்கின்றனர் -இறைவனை
***************************************

அயோத்தி
அயோத்தி மனகரமாம்
அதை சிந்தித்தாலோ தசரத மன்னனும்
அவன் மூன்று மனைவிகளும் குழந்தைகளும்
அந்த ஆட்சியும் நினைவில் நீங்கா

செல்லை பிள்ளை ராமனோ
சித்திரை பதுமை சீதையை மணந்து
சீரழித்தான் அவள் வாழ்கையை
தந்தையின் ன் கட்டளைக்கு பணித்து

தசரதனோ ஓரு மனைவியின் பேஅராசையால்
ராமனை பிரிந்து இறந்து
நாட்டை சீரழித்தான் -அயோத்தியில்
சந்தோசம் இருந்ததோ இல்லையோ
சோகம் நிறைய இருந்தது -உண்மை

********************************

மனித நேயம்
அன்பு பாசம் நேசம் -இவை
மனித மனங்களிடம் நலிந்து வருகிறதோ !
கரணம் இன்றைய சூழலும்
பணம் பணம் என தேடிதிரியும் -நிலையும்

மனம் இருந்தால் மார்க்கம் -எனும்
நிலை மாறி பணம் இருந்தால்
எல்லாம் -ஜெயம் எனும் நிலை

மனம் - இருபவருக்கோ பணம் இருபதில்லை
பணம் இருபவருக்கோ மனம் இருபதில்லை
இரண்டும் இருந்தாலோ அவருக்கோ
ஆயிரம் ஆயிரம் பிரசினைகள் என் செய்ய ?

நம்மை பெற்று வளர்த்து தோள் கொடுத்து
வாழ்க்கைக்கு வழிகாட்டிய பெற்றோருக்கு
தள்ளாத வயதில் தோள்சாய
தோள் கொடுக்கும் மனித நேயம் வேண்டும்
சுமையாக நினைத்து முதியோர் இலங்கைளில்
அவர்களுக்கு இடம் தேடிதந்தால் -நாளை
நாளை நமக்கும் அந்நிலை என மறக்க கூடாது

தினம் சந்திக்கும் பிட்ச்சைகாரர்கள் என்றாலும்
என்றோ ஒருநாள் சில்லறை கொடுக்கும்
இரக்கமும் மனித நேயம்மும் வேண்டும்

அனாதைகள் என்றால் துன்புருத்தாது
அரவணைத்து அனுசரித்து அன்பை பொழியும்
நல் குணமும் மனித நேயம்மும் வேண்டும்

மனிதராய் பிறக்க மாதவம்
செய்தோமா செய்கிறோமா தேவை -இல்லை
மனிதராய் பிறந்த பின் நம்
கண்ணினில் படும் உயிர்களிடம்
அன்பும் இரக்கமும் காட்டும்
மனித நேயம்மும் வெண்டும்
பிறந்த இப் பிறப்பிற்கும் ஒர் அர்த்தம் வேண்டும்

மனிதராய் பிறந்தால் இப்படி பிறக்க வேண்டும் -என
மற்றவர்கள் நம்மை பார்த்து பொறமை படும்
மனித நேயம்மும் வேண்டும்

பிறந்ததோ இட்ஜென்மம்
பிறக்கு உதவிடவே எனும்
நினைவும் நிகழ்வும் நடத்திடும்
மனித நேயம்மும் வேண்டும்
******************************

கனவுகள்
கனவுகளோ ஆயிரம்
கற்பனைகளோ ஒறாயிரம்
நிணைவுகள் நடப்பதோ
சில துளிகள் மட்டும்

கடல் போல் ஆசை என்றாலும்
புயல் போல் காதல் என்றாலும்
மணலில் எழுதிய எழுத்துக்களை
அலைகள் தொடும் நாள் எதுவோ
அது போல் நம் கனவுகள் நினைவேறும்
நிகழ்வுகள் என்றோ எப்படியோ ?

கனவுகள் காண்போம் அதில்லேனும்
சந்தோசமாய் வாழ்ந்திடுவோம்
நினைவகினும் இல்லாவிடினும்

-------------------------------------

நட்பு
உன் மனதை தொட்ட -நட்புக்களை
உன்னால் என்றும் ஒதுக்க முடியாது

உன் -நினைவில் தேங்கிய நினைவுகளை
என்றும் அழிக்க முடியாது -உன்னால்

அது -நல்ல நட்பு தீய நட்பு என
நீ -உன் அறிவால் பகுத்து அறிந்தாலும்

ஏனெனில் நட்பு என்பது -எதையும்
ஆராயாமல் அன்பால் விளைவது

நன்மை தீமை லாபம் நஷ்டம்
எதிர் பாராது நேசாதால் உணர்வது -நட்பு
***********************************************

நட்பே
உன் மனம் உன்னிடம் இலையோ ?
உன் -நிணைவுகள் உன்னிடம் இலையோ?

இல்லை என்றால் நட்பை மறக்கும்
மனிதனும் நீ இல்லை
நட்பை மறுக்கும் மனிதனும் நீ -இல்லை

திடீர் என்று தொலைந்த உண்னை
உன் -நட்புகள் தேடுகின்றனா
உனக்கு என்ன ஆனதோ
என்று வேதனையில் தவிக்கின்றன
உனக்கு என்ன குறையோ கஷ்டமோ என்று
***************************************

நிலவே உன் மேல் கோபம்

நிலவே -உண்னை பெண்களுக்கு மட்டும்
உவமை படுத்த காரணம் -ஏனோ?

ஆணினத்தில் பால்போன்ற முகமும்
கள்ளமில்லா சிரிப்பும்
களங்கமில்லா அன்பும்
அழகான உருவம் உடையோரும் -இல்லையோ?

ஆனால் -உன் அழகிற்கும்
ஒளியின் பிரகசதிற்கும் -நிலவே
உண்னை பெண்களுக்கு மட்டும்
உவமை படுத்தி பெருமைபடுத்த
காரணம் ஏனோ புரியவில்லை -அதனால்
நிலவே உன் மேல் எனக்கு கோபம்
**************************************
நிலவே

அன்னை அவளோ இரவினில்
உண்னை காட்டி அமுதூட்டினாள்
வளர வளர நிலவைப்போல் -நீயும்
அழகு என உட்சி முகர்ந்து முத்தமிட்டாள்

வீட்டு முற்றத்தில் உறங்கும் போது
உன்னில் இருக்கும் நிழல் யார் ?-என
விளித்தாலோ தாத்தா புன்னைகையுடன்
உன் -பாட்டி வடை சுடுகிறாள் என்பார்

பெண்ணாய் வளர்ந்ததும் -நீயும்
நானும் வேறு என உணர்ந்தேன்
தினமும் -உண்னை ரசித்தேன் சிரித்தேன்
உன் -அழகிற்கு எதுவும் ஈடும் -இல்லை
ஒப்பும் இல்லை என வியந்தேன்

இரவில் மட்டும் நான் எங்கு சென்றாலும்
நீ - என்னை துரத்துவது ஏனோ ?
என் மீது அத்தனை பாசமோ !
உண்னை நான் பிரிய கூடாது என்றோ ?

ஆதி இடை கடை நிலைகளில் -எனக்கு
கிடைக்கும் உறவுகளும் நட்ப்புகளும்
என்னை விட்டு மாறலாம் போகலாம்
ஆனால் -நீ மட்டும் எனக்கு நிணைவு தெரிந்த
நாள் முதலாய் என்னை தொடருகிறாய்
எங்கு நின்று பார்த்தாலும் சிரிக்கின்றாய்
என்னை சந்தோஷ படுத்துகின்றாய்

நீ வராத அந்த அமாவசை மட்டும்
எனக்கு சூனியமாய் போய்விடுகிறது -நிலாவே
இறுதி வரை நீ மட்டுமோ -என்
நேசமும் நட்புமாவாய் நிலவே

கட்டாயம் உண்னை பார்த்து கொண்டு
என் - உயிர் பிரியனும் என் ஆசை நிலவே

----------------------------------------

கருத்துகள் இல்லை: