சனி, 9 அக்டோபர், 2010

நட்பின் நட்ப்பே

அறிமுகத்தில் அம்மா என -விளித்தாய்
வயதை அறிந்ததும் என்னினும்
மூத்தவன் என்றதால் நட்பு என மாற்றினாய்

பண்பாய் பழகினாய் பாசமாய் பேசினாய்
துன்பத்திற்கு ஆறுதல் சொன்னாய்
நினைப்பது நடக்கும் என்றாய்
நட்பிற்கு வயது இல்லை என்றாய்

நினைப்பது நடக்கும் என்றாய்
பொல்லாத மொழி பேசினாய் கடைசியில்
என் வேதனைக்கு காரணமாய் ஆனாய் -நீயே தோழமையே

பெண் என்றால் கேவலம் எனும் நிணைவு
உனக்கும் வந்து விட்டதோ -புரியவில்லை
காரணமும் அறிய விரும்பவில்லை
பூ போன்ற மனதை முள்ளால் கீரிவிட்டாய்
ரணமும் மனமும் ஆறவில்லை தோழமையே
*********************
நீ பயப்படாதே,

நான் உன்னுடனே இர்ருக்கிறேன்,
திகையாதே நான் உன் தேவன்....ஏசாயா:41:10
பதிலளி
எதற்கு பயப்படனும் -நான்
உண்மை அன்பிற்கும் நேசதிற்கும்
பாசத்துக்கும் பண்பிற்கும் கட்டுப்பட்டவள் -நான்
இதை மொத்தமாக செலுத்துபவர்க்கு
என் -உயிரையும் தருவேன் உண்மையானவர்கள் என்றால்
இது -என்றும் எனது நீதி
*************************************
காத்திருப்பது சரி
ஆனால் மற்றவர்களை வேண்டும் - என் ட்ரே
காக வைப்பது தவறு -எல்லோருக்கும்
எத்தனையோ வேலை இருக்கும்

நாம்தான் உசத்தி என்று நினைக்க கூடாது
மற்றவர்களை உதாசின படுத்தவும் கூடாது
அன்பு மனங்களை நோகடித்து -பின்னலில்
உன் மனதை நோகடித்து கொள்ளாதே
*************************************

அமுதன்
அமுது ஊட்டிய அன்னைக்கு
அன்பை பொழிந்த அமுதனே
இன்று உன்னிடம் அன்பை பொழியும்
உறவுகள் இல்லை என்றாலும்
நேசமுடன் பாசமாய் அன்பு செலுத்த
உன் நட்புகள் உண்டு தோழமையே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் லதா சந்திரன்
*********************************
கல்லூரி பூக்கள்
கல்லூரி பூக்கள் எல்லாம்
காலையில் பூத்த பூக்களை -போல்
பேருண்திற்கு உற்சாகமாய் காத்திருந்து
வண்டுகளாய் மொய்த்து பட்டாம்பூச்சியாய் -ஏறி
கனவுகளுடன் கல்லூரிக்கு போனாலும்

மாலையில் வாடி வதங்கிய மலர்களாய்
காற்று போன பலூனாய் களைஇழந்து
ஜன்னலில் சோகமான முகத்துடன்
கான்கையில்லோ என் உள்ளம்
ரசம் போன்ன கண்ணாடியாய்
உற்சாகம் குன்றி போவதேணோ
*******************************
மனிதரும் மருந்தும்

மானிடம் எனும் சரீரம்
மண் எனும் பூமியில் -புதையும்
ஆயுள் காலத்தை நீட்டிக்கும்
மகதுவம்மேஆயுள் எனும் -மருந்து

காலன் எனும் எமனிடம்
போராடி கள்வனை போல்
ஒளிந்து வாழ உதவிடும்
உயிர் நாடி- மருந்து

ஊராருக்கும் உறவினர்க்கும்
உற்ற துணை நான் என்று
இழுத்து போகும் காலத்தையும்
இழுபறியாய் தவணை முறையில்
உதவி உதவிடும் மகத்துவம் -மருந்து
****************************************தாய்மை எனும் மறு ஜென்மம் புணரும் தெய்வங்களே

கருபியோ சிகபியோ அழகியோ அசிங்கமோ
காட்டிலோ மேட்டிலோ வீட்டிலோ
ஈரைந்து மாதம் இஷ்டமாய் கஷ்டப்பட்டு
கருவை சுமந்து பிள்ளை ஈனும்
தாய்க்கு மறுஜென்மம் புணரும்
தெய்வங்களே மருத்துவர் -உங்களை
மகபேறு மருத்துவர் என்றழைப்பது
மகத்தான பேறு அடையும் -சிசுகளை
தாய்மையிடம் இருந்து பிரித்து -உலகிற்கு
ஈனுவதாலே மகபேறு மருத்துவர் என்கின்றனரோ !!!!!!!!!!

தெய்வ நிலையான இப்பனியோ
இன்று -களங்கம் சுமைகிறதே
பணம் எனும் பேராசையால்
சுகபிரசவமாய் பிறகும் சில சிசுக்கள்
சிக்கல் என சொல்லி
சிகிட்சையால் பிரிகபடிகிண்றன தாயிடம் இருந்து

அறியாமை எனும் புத்தியால் மக்களினமோ
தெய்வமென உங்கள கூற்றை ஏர்கின்றனர்
தேவையில்ல சிகிட்சையால் -பின்
நொந்தும் வெந்தும் போகும் தாய்மைகள் எத்தனையோ

தற்போதோ வறுமை பிடியில் வாழும் மக்களோ
தமக்கு கடைகொள்ளி போடா
வாரிசுபெற யோசிக்கும் நிலையில் -மருத்துவம்

இன் நிலை மாற கருணை மனம் கொள்ளுங்கள்
கட்டாய சிகிட்சையும் வேண்டாம்
கர்மாவுக்கு பாவமும் வேண்டாம்
நீங்கள் மனம் மாறி தெய்வமாக்வே -இருங்கள்
தாய்மை எனும் மறு ஜென்மம் புணரும் தெய்வங்களே
*******************************

கருத்துகள் இல்லை: