சனி, 9 அக்டோபர், 2010

வாழ்க்கை

வாழ்கையில் ஏமாற்றம் வரலாம்
சில நேறங்களில் -எல்லோருக்கும்

ஆனால் வாழ்க்கையே ஏமாற்றமாய்
இருக்ககூடாது எப்போதும் -சிலருக்கு

உண்மையும் பொய்மையும் கலந்த வாழ்கையில்
கஷ்டமும் கசப்பும்தான் கடைசியில் மிஞ்சுபவை
*****************************
நட்பே

எங்கோ போனாயோ ?என்ன ஆனாயோ ?
யாரிடம் கேட்பது உன் நிலை பற்றியோ?
என்- நட்பே கண் மூடினாலும்
உன் - நினைவுதான் எப்போதும்
கண் விளித்தாலும்- உன்
நினைவுதான் எப்போதும்

அறிவாய் புத்தி சொல்லவும்
ஆசையாய் பரிவு காட்டவும்
பாசமாய் பண்பை காட்டவும்
கோபமாய் என்னை ஒழுங்குபடுத்தவும்
என் -புத்தி கோணலை நேர்படுத்தவும்
என் வாழ்கையில் இறையின் கருணையால்
தெய்வமாய் அம்மாவாய் அப்பாவாய் ஆசானாய்
எல்லாமுமாய் கிடைத்த அன்பான நட்பே


உன் பிரிவு என்னை வாட்டுகிறது
பாராமுகமாய் நீ போவதுவும் பிடிக்கவில்லை
என்னை பார்க்க வராமல் இருபதுவும் பிடிக்கவில்லை
***********************************
நட்பே
ஓ நீ பணியில் பளுவால் ஓடுகிறாய்
நட்புகளை சந்திக்க நேறம் -இல்லை
என -நினைத்தேன் இந்த முட்டாள்

பல நாள் காத்திருந்து நீ வராது
உண்னை தேடினேன் உன் ஆர்குட்டில்
நீயோ - மற்ற நட்புகளிடம்
தொடர்பில் இருகிறாய் -எனவும்
இப்போது தெரிந்து கொன்டேன் தோழமையே

காரணமும் தெரியவில்லை எதுவும் புரியவில்லை
என் -நடப்பை நீ விலக்கியது தோழமையே
இனி உண்னை தேடாது இந்த நட்பு

உனக்கு கவலையும் வேண்டாம் கஷ்டமும் வேண்டாம்
எங்கிருந்தாலும் நலமுடன் நீ -வாழ பிராத்திக்கும்,
உன் உண்மை நட்பு -இதுவே
நான் உனக்கு அனுப்பும் கடைசி ஸ்கிராப்பும்

நீ இங்கு மறைந்து வரவும் தேவை இல்லை
மறைந்து போகவும் தேவை இலலை
வாழ்கையில் நட்பும் கூடாது பிரிவும் கூடாது
இது இரண்டும் என் வாழ்கையில் -எப்போதும்
வேண்டாம் இறைவா அதை தாங்கும் சக்தி
எனக்கு எப்போதும் இலலை என வேண்டி
உன் -முடிவை சந்தோசமாய் ஏற்று
சங்கடமாய் பிரியும் அன்பை மறவும் -நட்பு
நன்றி வணக்கம்
*****************************************
நட்பே
காரணம், இன்றி பிரிந்த - நம்
நட்பு ரணமாய் நம் மனதில் -என்றும்

தினம் தினம் நீயும் இங்கு வருகிறாய்
தினம் தினம் நானும் இங்கு வருகிறேன்

ஆனால் இருவரும் பேசுவது இல்லை
இருவருக்கும் தெரியும் நாம் இருப்பது

நீ எப்படியோ தெரியாது -இங்கு
உன் பெயரில் உன் வரவை அறிந்ததும்
நீ -எண்ணுடன் பேசுவாயோ -என
என் உள்ளம் துடிக்கிறது -தினமும்

நீ மௌனமாய் செல்லும் ஓவ்வொரு நாளும்
என் - விழிகளின் ஓரத்தில் வழிந்தோடும்
கண்ணீர் துளிகளுக்கு நான் தடை போடுவது -இல்லை
கட்டுபடுத்தி தடா போடுவதுவும் இல்லை

நம் நட்பை போல் முறிந்து விடாமல்
கண்ணீராவது கரை சேரட்டும் என்றுதான்


நட்பில் சண்டையும் வரலாம்
சமாதானமும் வரலாம் நமக்குள் -ஆனால்
பிறிவு வரகூடாது தோழமையே

உன் நட்பும் என் நட்பும் உண்மை என்றால்
உயிர் பிரியும் வரை உண்னை எதிர் நோக்கும்
உன் மேல் என்றும் அன்புடன் இருக்கும் நட்பு
**********************

நட்பு
உளம் தொட்ட நட்பு -என்றும்
மறந்தும் மறைந்தும் போகலாம்

உயிரை தொட்ட நட்போ
நரம்போடும் இரத்தத்தோடும் கலந்துவிடும்

உள்ளம் தொட்ட நட்போ
கானல் நீராய் மறைவதுண்டு

உயிரை தொட்ட நட்போ
நாம் -சிதையில் எரிந்த பின்பும்

நினைவலைகளாய் தொடரும்
நம் -நட்புகளின் மனதில் -என்றும்
*************************************
நட்பு
நட்பென்ற மழையிலே
நனைந்திட்ட உள்ளமோ
பிரிவென்ற நிலையிலோ
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

உண்மை நட்பென்று மயங்கி -அது
உயிரை பிடுங்கும் நட்பென உணர்ந்து
மனம் -கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

நட்ப்பென்ற நிலையை கணவென
நினைத்து மறக்கவும் முடியாது
பிரிவென்ற நிலையை -கண்ணீரில்
கரையும் காகிதத்து எழுத்தாகவும்
நினைக்க முடியாது
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

உள்ளமும் உயிரும் நினைவுகளும்
உடல் -எனும் எலும்பும் சதையும்
மண்ணோடு மக்கிபோகும் நிலையிலும்
நட்பின் உணர்வுகள் மேலோங்கி
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

பூமியை தொட்ட மலையும் மறையலாம்
பூமியை தொட்ட பனித்துளிகளும் மறையலாம்

பூஉடலை ஆட்கொண்ட அன்பும் நட்பும்
மறைத்தல் என்பது முடியாத சக்தி -அதனால்
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது
*****************************************

கருத்துகள் இல்லை: