ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நட்பு
ரோஜாவை மொட்டு விட்டு
தாமரையாய் மலர்ந்து
மல்லிகையாய் வாசம் வீசி
சூரிய காந்தியை விரிந்து
குறிஞ்சி போல் பலவருடம்
விட்டு விட்டு பூத்தாலும்
அழியாத பூக்களினம் போல்
மாறது மலரும் நட்புகள் -நம்
நட்புக்கள் என்றும் அன்புடன்
*****************************
நட்பு ( நீர் , நிலம் , நெருப்பு ,காற்று . ஆகாயம் )

மனம் -(எனும் நிலம் ஊன்றிய நட்பாய்
நெருப்பாய் பாசத்தில் தகித்தாலும்
நீர் பட்டாலும் அணையாது
காற்றாய் பரவி பரவி
ஆகாயத்தை எட்டும் சந்தோசமான
நட்புக்கள் நம் நட்புக்கள்
**********************************
நட்பென்ற கொலைகாரா

பார்க்காத போது சிரிகின்றாய்
பார்த்தாலோ மறைகின்றாய்
பேசும் போது ஓடுகிறாய்
பதில் ஏதும் கூறாது

இல்லாத போது வார்த்தைகளை
பூவானமாய் பொழிகின்ராய்
நேறில் வந்தால் அன்பாய்
பொழிவேன் என்கிறாய் -நீ
வருகிறாயோ வரட்டுமா என்றாலோ

மின்னலாய் மறைகின்றாய் நொடியில்
நீ -உயிர் காக்கும் உயிர் நண்பனோ -இல்லை
உயிர் வாங்கும் நட்பென்ற கொலைகாரனோ ?
****************************************

நான் இப்படி இல்லை நட்பே

உன் - இடிகுரல் கேட்டு அன்பை பொழிய
நான் ஒன்றும் மழையும் இல்லை


உன் -குரல் கேட்டு பயந்து ஓட
நான் ஒன்றும் கோழையும் இல்லை

உன் -குரல் கேட்டு அன்பாய் பற்றி கொள்ள
நான் ஒன்றும் பஞ்சும் இல்லை

உன் -பாசத்தில் நனனைய
நான் ஒன்றும் பூவும் இல்லை

உன் -குரல் கேட்டு குளிர (கரைய )
நான் ஒன்றும் பனிகட்டியும் இல்லை
**************************************
மோகன சுந்தரம் ( இனிய (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
சென்னிமலையின் வாழ்ந்த
மாரியப்ப கவுண்டருக்கும்
புன்னகையும் பொறுமையுமான
ரத்தினம் அம்மையாருக்கும் -மகவாக
பிறந்து கல்லில் வடித்த சிலை போல்
பார்போரை கவரும் ஆழகால்
எல்லோரின் மனதையும் கொள்ளை கொண்டதால்
மோகன சுந்தரம் என நாமம் சூடி
அன்பாய் பண்பாய் ஆசையாய்
நல் மகனாய் வளர்ந்து
அறிவில் சுடராய் ஆளுமையில்
தனிகரில்லாத தன்மையும் பெற்று

அம்மை அப்பரை காக்கும் நல்
மனமும் அன்பும் கொண்ட தெய்வம்
எனும் திருமகளை கரம் பிடித்து
இல்லறமும் நலறமுமாய் வாழ்ந்து
நல் மகவை பெற்று செந்தில்ராஜா
என நாமம் சூடி தன் வழியில் அவனை ஆளாக்கி
அவனுக்கும் நல்வாழ்வு தந்த
தெய்வ திருமகனே
மோகன சுந்தரம் அவர்களே
நீவீர் நீடூடி வாழ என் மனமார்ந்த
இதயம் கனிந்த வாழ்த்துகள்
***************************
முள்ளென்ற நடப்போ ?
நட்பால் விரிந்த அன்பும் -உன்னால்
என் -மனதை தொட்ட வார்த்தைகளும்
முள்ளாய் தைக்கிறது என் -இதயத்தை
நட்பு எனும் நேசதால் என்றும் அன்புடன்
******************************
எத்தகைய நட்ப்போ

நீர ஊற்றாய் பெருகி
ஆராய் பெறுகெடுத்து -ஓடி
கடலாய் அலையடித்து
சுனாமியாய் பொங்கி
வானத்தை எட்டி பிடித்து
சிறகடித்து பறக்கும் நட்போ ?

இடியாய் இடி இடித்து
மின்னலாய் வெட்டி வெட்டி
மேகமாய் சூழ்ந்து
மழையாய் பொழிந்து
பூமியை தொட்டு முத்தமிட்டு
கொஞ்சி விளையாடும் நட்போ ?

வான்னுகும் பூமிக்கும்
காற்றாய் ஆர்பரித்து திரிந்தாலும்
நட்பின் நடனம் நாளும் உண்டு - எனினும்
வானுக்கும் எல்லை இல்லை
பூமிக்கும் எல்லை இல்லை
அது -போல் நம் நட்புக்கும் எல்லை இலையோ?

***********************************
மனம்

அலைபாயும் மனமும் -உண்டு
அன்பு செலுத்தும் மனமும் -உண்டு
அன்பில் கரையும் மனமும் -உண்டு
அன்பால் கரைய வைக்கும் மனமும் -உண்டு

உன் -சிரிப்பில் உண்மை உண்டு
உன் -அன்பில் நேசமும் உண்டு
உன் -பேச்சில் கனிவும் உண்டு
உன் -வார்த்தைகளில் அக்கறையும் உண்டு

அதை ஏர்க்கும் தகுதி பிறர்க்கு உண்டோ?
உன் -அன்பை மறுகவும் - இல்லை
உன் -நேசத்தை குறை கூறவும் - இல்லை
முழுமனதாய் ஏற்கவும் இல்லை
எப்போதும் நீ என்னால் வேதனை படகூடாது -என்று
என்றும் உன் நலம் நாடும் என் -மனம்
********************************
நீ

நீ பேசாது போனாலும் -நான்
உன்னிடம் பெசுவியன் என் மனம் திறந்து
என் சுகம் துக்கம் வேதனை - அத்தானையும்
ஏன் என்றாலோ நீ என் நன்பேன்டா
*************************
நீ
நீ ஓரு கிளமானா இளமை மனிதன்
உன் உருவம் தான் பெருசு
உள்ளமோ இளசு இளசு
இளமை ததும்பும் உள்ளாம்

பயமின்றி உண்மை பேசும் குணம்
அன்பும் ஆசையும் கூறும் மனம்
************************

கருத்துகள் இல்லை: