புதன், 13 அக்டோபர், 2010

முத்தம்
முத்தம் ஓரு சத்தமில்லாத
சந்தோசமான இன்ப சொர்க்கம்

தை சேய்க்கு கொடுக்கும் -முத்தம்
பாசமான அன்பின் பரிமளிப்பு

முதியோர்கள் பேரகுழந்தைகளுக்கு கொடுக்கும்
முத்தம் -பந்தத்தின் பரிமளிப்பு

குழந்தைகள் மற்றவர்களுக்கு தரும் -முத்தம்
எல்லையில்லா சந்தோசத்தின் பரிமலிப்பு

காதலனும் காதலியும் கொடுக்கும் -முத்தம்
அன்பின் எதிரொளி பரிமளிப்பு

கணவனும் மனைவியும் பரிமாறும் -முத்தம்
இல்லறத்தின் தாம்பத்திய சங்கீத பரிமளிப்பு


முத்தம்
முத்தம் -சத்தமில்லாத ஓரு சொர்க்கம்
முத்தம்-அமைதி போர்க்களம்
முத்தம்-முதலீடு இல்லாத லாபம்
முத்தம்- ஆசை அன்பின் வெளிபாடு
முத்தம்-முன் பின் எதிர்பாராமல் கிடைப்பது
***********************************

விடிவு
விடியும் என்று விண்ணை நம்பினேன் -தினம்
விடிவும் நடக்கிறது நாளும்

முடியும் என்று உண்னை நம்பினேன் -தினம்
ஆனால் முடிவுதான் நிஜமானது -உன்னால்

உள்ளார்ந்த உறவு என்றாய் -தினம்
உணவும் உறக்கமும் நீயே என்றாய்

ஏனோ என்று விளித்தால் -தினம்
நம் - நட்பின் பரிமாணத்தின் பிரதிபலிப்பு என்றாய்

காலம் கடந்த நட்பு என்றாலும் -தினம்
நாமும் நட்பு என்று அள்ளாவி சந்தோசிகிறோம்

மறைந்து மறைக்க பட்ட கூற்றுகளை -தினம்
கூறி கூறி குறை தீர்க்கிறோம் பயமின்றி

சந்தோஷ விடிவு என்பது எல்லோருக்கும் - இல்லை
எந்த நட்பிற்கும் முடிவு என்பதும் இல்லை
***************************************
நட்பு
நட்பு என்கிறாய் நம்பு என்கிறாய்
பார்த்தாலோ முகம் திருப்பி போகிறாய்
நான் போன பின்போ செய்தி அனுப்புகிறாய்
ஏன் இந்த கொலை வெரி
அமைதியான மனதை கொன்றாய்
ஆலைபாயும் விழியில் தேட வைத்தாய்
நட்பென்ற அன்பை கொட்டி
பிரிவென்று கண்ணீரில் மூள்கடிகிறாய்
***************************
நட்பு (பைத்தியம் _)
பாறையாய் இருகிய -என்
மனமோ பாகாய் கரைந்தது
உன் -+நட்பால் சந்தோஷத்தில்

நட்பு என்றால்; இப்படித்தான் -என
அறியாத என் உள்ளம் -இன்று
நட்புகளின் மழையில் நனைந்தாலும்
குடையின்றி உன் நட்பில் நனையவே விரும்பியது

பிரிவிற்கும் முடிவிற்கும் விளக்கம் கேட்டால்
பைத்தியம் என பட்டம் கொடுக்கிறாய்
************************************
நட்பு
நட்பு என்பது எதையும் எதிர் பார்பதுவும் இல்லை
யாசகம் பெறுவதும் இல்லை
அன்பும் பண்புமே நட்புக்கு -பரிசு

மருந்தும் தேவை இல்லை
மாயமும் தேவை இல்லை
நல்ல மனமும் தூய நினைவும்
போதும் இனிய தூக்கத்திற்கு


தெரிந்து இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்
மனமும் அன்பும் போது நல்ல நட்பிற்கு
*********************************
நட்பு
ந=நன்மை ,ட்=இஸ்ட்டமான, பு=புன்னகை
நன்மையையும் இஸ்டமுமாய் புன்னகைக்கும்
அன்பில் விரியும் பாசபின்னல்கள்

சிறுக சிறுக சிலந்திவளையாய்
சுற்றி சுற்றி வரும் பாசபின்னல்கள்
இடையில் துண்டிக்க பட்டாலும் -மீண்டும்
விடா முயற்சியால் பின்னப்படும்
பாச வலைகள் -நட்பு
********************************
மாரியப்பன் எல் .ஏ (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

தென்காசி பட்டனதிலே
ஆறுமுக முதலியாரின் மணைவி
சரஸ்வதி அம்மைக்கும்
கருவாய் உருவாகி இப் -பூமியில்
மகவாய் பிறந்த மாணிக்கம்

மண்ணில் புரண்டாலும்
மடியில் புரண்டாலும்
மயில் இறகால் நீவி
மார்மேலும் தோள்மேலும் -போட்டு

மாரியாய் (மழையாய் )பொழியும்
அன்பனாய் வளர மாரியப்பன் -என
நாமம் சூட்டி அன்பாய் வளர்த்து
கல்விதனை புகட்டி
கட்டிளம் காளையாய் வளர்ந்து

வேலை எனும் பணியும் கிடைத்து
உலகமெனும் மாயையில்
சுழல்பந்தாய் சுழலும் நன்பனே

ஜாதி மத பேதம் இல்லை உனக்கு
மதம் என்றால் இந்தியன் என்கிறாய்
மனதை புல்லரிக்க செய்கிறது
உன் வார்த்தையும் நாட்டுபற்றும்

பிறந்ததோ தென்காசி
வேளையோ சென்னையில்
அடுத்து பாண்டி என்கிறாய்

ஊர் மாறி போனாலும் -உன்
உள்ளம் மாறது நாட்டு பற்றும்
தேசபற்றும் என்றும் -உன்
போல் வளரட்டும் அன்புடன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
********************************

கருத்துகள் இல்லை: