புதன், 8 டிசம்பர், 2010

தூணி

ஒற்றை குட்ச்சியிலே
ஓராயிரம் வித்தை பயில்வேன் -நானோ

சருகான இறகுகளோ
கற்றால் சரிந்து விட்டாலும்
கல்லாய் சமைத்து நிற்பேன் -நானோ

விடலை பிள்ளைகளின் -ஆசை
விளையாட்டு பூச்சி -நானோ
**************************
கடிதம்

தனிமையிலே ஓர்கடிதம்
தட்டு தடுமாறி நான் - எழுத

எழுத்துக்களும் கோர்வையில்லை
வார்த்தைகளும் கோரவில்லை

எதர்க்காக எழுத வந்தேன்
எதை நினைத்து எழுத வந்தேன்
எனக்கோ புரியலையே -இந்த
தனிமையும் அமைதியும் பிடித்தாலோ
நானும் கவி ஆகலாம் -என
நினைத்து வந்தானோ ?
******************************
இதயம்

ஓர் கை பிடியில் அடங்கும் இதயமே
உன்னுள் இந்த உலகமே அடங்கும்
ரகசியம்தான் என்னவோ ?

நீ -இன்றி ஓர் அணுவும் அசையாது
இதயமின்றி சுவாசம் ஏதோ ?

கண்ணாடி இதயமே-நீ
கல்பட்டோ தவறி விழுந்தோ
சில்லு சில்லாய் சிதருவாய்

ஆனால் - மனித இதயங்களோ
ஓர் சொல் அம்பு பாட்டாலே
சிதறிவிடும் சில்லு சில்லாய்
*****************************
நான் ( விக்கி )

எட்டி போடும் நடை -எல்லாம்
மண்ணாகி போவதாலோ

இருபுறமும் இருக்கும்
வெத்து செடிகளும் -என்னை
பார்த்து பூத்து சிரிக்கிறதோ ?

காய்ந்த சருகுகளும் -என்
கால்களில் பின்னி பின்னி
சடுகுடு ஆடுகிறதோ ?

தனிமையும் நாங்களும்தான் -இனி
உனக்கு துணை என்று
****************************

கருத்துகள் இல்லை: