புதன், 8 டிசம்பர், 2010

நட்பு
-------------
அலையாய் அடித்து
அக்கரையில் சேர்ந்தாலும்

தென்றலால் மீண்டும்
அலையாய் இக்கரைக்கு
வருவது போல் -நட்பு

மனம் எனும் மாய எண்ணங்களால்
மானுடம் மறந்து
நட்பை மறந்தாலும்

நினைவுகளோ மாறி மாறி
நட்பை நினைவுபடுத்தும்
நம் மனம் எனும் கடலில்
எப்போதும் - என்றும் அன்புடன்
----------------------------------------------------------

* வானம்
*********************************
முதல் மாமன் சூரியனோ
நெருப்பால் உண்னை சுட்டது போதுமென
தங்கமாய் கதிர்களை
அள்ளி தெளித்துவிட்டு -அவசரமாய்
அடிவானில் மறைகிரானோ -என்று
உன் -உடல் வெட்க்கி சிவந்ததுவோ ?

இல்லை - அடுத்த மாமன் நிலவோ
தென்றல் தவழ -தன்
நட்சத்திர பரிவாரங்களுடன் -வந்து
தன் -பால் முகம் காட்டி
இறவு முழுதும் தன் ஒளியால் -உண்னை
மூழ்கடித்து சந்தோசபடுத்தும் வெட்கமோ ?

இல்லை -இருவரின் அன்புக்கும்
சொந்தமுடையவள் கட்டுப்பட்டவள் -என
வெட்கத்தால் சிவந்ததுவோ
உன் -உடல் முழுவதுவும் வானமே

****************************************\
பாரதி (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

***************************
காரைக்கால் அம்மையார் பிறந்த
காரைகுடியில் அழகர் கல்யாணி
தம்பதியரின் ஆனந்த இல்வால்கையின்
அட்டகாசமான சந்தோசத்தை வெளிபடுத்த
அம்மர்களமாய் பிறந்த குழந்தை -நீயோ
கவிபேரரசு பாரதியின் நாமம் சூடி
கல்வியிலோ சிறப்பும் பெற்று
நல்ல ஆறிவையும் ஆற்றலையும் பெற்று
தனகென்று ஓரு நிலையில்
தன்னடக்கமாய் வாழ்ந்து
மற்றவர்களின் சிரிப்பில் சந்தோசிக்கும் -நீ
பல்லாண்டு பல்லாங்கு காலம்
நீடூடி வாழ்க வாழ்க என
மனமார வாழ்த்துகிறேன்
***************************************
அல்லியே

******************
ஆதவனின் தோன்றலிலே
காதலனை கன்னட காதலி -போல்
நீ -மெல்ல மெல்ல ஆசையாய்
இதழ் விரித்து சிரித்து பூத்து
உன்னுடன் நீந்தி மகிழும் இலை -தோழிகளுடன்
வானத்தை நோக்கி புன்னகையிலேயே

காத்திருந்த தேனீக்கள் -உன்
இதழ் புகுந்து மகரந்தத்தில் -தேன்
உறிஞ்சி மயங்கி கிடக்கிறதோ
உன் -சுவை கிட்டிய மமதையில்லோ
உன்னுடன் நீந்தி மகிழும் இல்லை துளிகளுடன்
------------------------------------------------

(3) தென்னைகள்
***************
நெர்கதிர்களோ தென்றலாய் தாலாட்ட
மலைகளோ அரண்களாய் காத்து நிற்க
தென்னைகளோ வரிசையாய் நின்று
தலை தாழ்த்தி தம் அழகினை ரசிக்கிறதோ
ஓடுகின்ற கால்வாய் கண்ணாடியில்
*****************************************

பெண்னே நீ
*******************
யாருமில்லா தனிமையிலேயே
நீள் நெடு பாதையிலே -நீ
வானை தொட்டு ரசிக்க ஒடுகையிலே

நான் -உண்னை தொட்டு மகிழ
நிழலாய் தொடருவேன் -உண்னை
நீ அறியாது பெண்னே -என்னை
***********************************
காதல்
************
அன்பின் வெளிபாடுதான் காதல்
அறிந்தும் வருவது காதல்
பிறர் -அறியாமல் வருவதும் காதல்

தெரிந்தும் நடப்பது காதல் -பிறருக்கு
தெரியாமலும் நடப்பது காதல்

குழந்தை காதலோ -ஏதும்
அறியாது முகம் பார்த்து சிரிப்பது

சிறு பிள்ளளை காதலோ
முகம் பார்த்து அடையாளம் அறிவது

விடலை காதலோ
ஒருவரை பார்த்து மற்றவர் சிரிப்பது

பருவ காதலோ எல்லாம் -அறிந்து
ஒருவரை ஒருவர் புரிந்து செய்வது
பார்ப்பது கேட்பது எல்லாமும் -காதல்
என -தன் நினைவுகளில் என்னி
மனம் -உருகி தவித்து திரிவது

தாம்பத்திய காதலோ முறையாய்
இன்னார்க்கு இன்னார் என்று
அனுமதியுடன் சந்தோசிபது

கிழ காதலோ முன் சென்ற -களத்தில்
அனுபவித்த காதல் நினைவுகளை
அன்பின் வெளிப்பாடுகளை நினைவுகூர்ந்து
அசைபோட்டு சந்தோசபடுவது


-----------------------------------
காதல்

*********************
நாம் நேசிப்பவரை விட
நம்மை நேசிப்பவரை காதலித்தால்
உண்மை காதலின் அர்த்தம் புரியும்

எல்லா காதலும் ஜெய்பதுவும் -இல்லை
எல்லா காதலும் தோற்பதுவும் -இல்லை
காத்திருபதுவும் காலம் கடதுவதுவும்
முக்கியமில்லை யாருக்காக காத்திருன்தோமோ
அவரை கைபிடிபதுதான் உண்மை
காதலுக்கு கிடைத்த வெற்றியாகும்
***************************************************
நட்பும் காதலும்

**************
நட்பு காதல் -இரண்டும்
அன்பின் வசப்பட்டது
ஒருவர் மற்றவர் மீது
காட்டும் அன்பான் வெளிபாடு

நட்போ எல்லையுடன் நிற்பது
காதலோ எல்லை மீறி நடப்பது
*********************************

கருத்துகள் இல்லை: