சனி, 25 டிசம்பர், 2010

கடிதம்
தனிமையிலே ஓர்கடிதம்
தட்டு தடுமாறி நான் - எழுத

எழுத்துக்களும் கோர்வையில்லை
வார்த்தைகளும் கோரவில்லை

எதர்க்காக எழுத வந்தேன்
எதை நினைத்து எழுத வந்தேன்
எனக்கோ புரியலையே -இந்த
தனிமையும் அமைதியும் பிடித்தாலோ
நானும் கவி ஆகலாம் -என
நினைத்து வந்தானோ ?

**********************************
இதயம்

ஓர் கை பிடியில் அடங்கும் இதயமே
உன்னுள் இந்த உலகமே அடங்கும்
ரகசியம்தான் என்னவோ ?

நீ -இன்றி ஓர் அணுவும் அசையாது
இதயமின்றி சுவாசம் ஏதோ ?

கண்ணாடி இதயமே-நீ
கல்பட்டோ தவறி விழுந்தோ
சில்லு சில்லாய் சிதருவாய்

ஆனால் - மனித இதயங்களோ
ஓர் சொல் அம்பு பாட்டாலே
சிதறிவிடும் சில்லு சில்லாய்
***********************************

நான் ( விக்கி )
எட்டி போடும் நடை -எல்லாம்
மண்ணாகி போவதாலோ

இருபுறமும் இருக்கும்
வெத்து செடிகளும் -என்னை
பார்த்து பூத்து சிரிக்கிறதோ ?

காய்ந்த சருகுகளும் -என்
கால்களில் பின்னி பின்னி
சடுகுடு ஆடுகிறதோ ?

தனிமையும் நாங்களும்தான் -இனி
உனக்கு துணை என்று
****************************
அழகு

ஊதா வண்ண மேகத்தில்
தங்கவண்ண சரிகை -ஓட
i சூரியனின் மரையும்
செவ்வான ஜொலிப்பு
போகும் பாதைக்கு வழிகாட்ட
ஒற்ரைமரமோ ஒய்யாரமாய் நின்று
முகமன் கூறி சிரிகிறதோ
**********************************
கருந்திராட்ச்சை பழமே

பழமாய் நீ புளிப்பாய் இனிபாய்
சுவை தந்து ரசிக்கவைப்பாய்
i ஆனால் -விழித்திரையில்
கருவண்டாய் சுழன்று
i உலகையே சொக்கவைபாய்
பம்பரமாய் சுழலழும் பார்வைகளில்
*******************************
வானம்
நீல வானமே -நீ
உன் அங்க மெல்லாம் தெரியும்
வெண் மட்ச்சங்களின் - அழகை
நீரோடும் கண்ணாடியில் பார்த்து -ரசிக்கிராயோ என்ன ?
******************************
கடல்
வானமோ குடை விரிக்க
மேகமோ போர்வை போர்த்த
வெட்கத்துடன் பாய்ந்து -வந்து
பசும் ஆடை போர்த்தி
அழகு காட்டி நிற்கும்
மலைகளை முத்தமிட்டு
மகிழ்கிறாயோ -கடலே

அந்த அழகை ரசிக்கும்
உண்னை தொட்டு மகிழும்
மனிதர்களின் பாதங்களையும்
உடலையும் முத்தமிட்டு -நீ
எட்சில் படுத்தினாலும்
யாரும் உண்னை கோபிபதில்லை -ஏனோ ?

ஆனால் -நீ எல்லை மீறி
உணர்சிவசபட்டுய் முத்தமிட்டு -எல்லோரையும்
உன்னுள் இழுத்து கொள்ளும் போது
உன் -உணர்சிக்கு ஆட்பட்ட உயிரினங்களோ
உயிர் இழந்து போவதாலே -இப்போது
கடல் என்றாலே எல்லோரும் -உண்னை
எட்டி நின்றே ரசிகின்றனர்
உன் -ஆவேச முத்தத்திற்கு பயந்து *
*****************************
மழை துளி
ஆசையாய் புவியை
முத்தமிட்டு மகிழல வந்த -மழைத்துளிகள்

இடையே உன் வண்ணத்தையும்
அழகையும் கண்டு மயங்கி
உண்னை -மட்டும் முத்தமிட்டு
மகிழ்கிறதோ நீ மகிழும் வரை
***********************

கருத்துகள் இல்லை: