சனி, 25 டிசம்பர், 2010

இயற்கை

பூமி அள்ளிதெளித்த
அழகு ஓவியமோ -நீ
பட்சை பசுமையாய்
பார்போரை மயங்க வைக்கும்
பட்சை ஓவியமோ -நீ
****************************
இயற்கை

பூமிதாயோ தன் மலை -மகளுக்கு
பசும் ஆடை போர்த்தி
செந்நிற பூக்களை தெளித்து -விட

மாமன் மரங்களோ - எட்டி
நின்று ரசிகையிலே
மேகமெனும் திருட்டு காதலானோ
வெண் பஞ்சு பொதிகை நட்புக்களை
பரிவாரங்களாய் முன்னிறுத்தி
மறைந்து நின்று ரசிகிரானோ
மலை மகளே உன் -அழகை
******************************
மதம் மறபோம் மனித நேயம் வளர்ப்போம்

எல்லோரும் -மனங்களில் அன்பை வளர்ப்போம்
மக்களிடம் நேசத்தை வளர்ப்போம்
மதங்களிடையே பாசத்தை கூட்டுவோம்

இரத்தம் சிந்தாத ஊரை வளர்ப்போம்
ஜாதிகளை வெறுக்காத நாட்டை வளர்ப்போம்
கலவரம் வெடிக்காத தேசம் காப்போம்

எல்லோரும் ஒன்று எனும்
ஒற்றுமையை காப்போம் -எப்போதும்
எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் ஓர் மதம்
எல்லோரும் ஓர் தாயின் பிள்ளைகள்
என - சந்தோசமாய் வாழ்ந்து காட்டுவோம்

மதங்களை மறுப்போம்
ஒற்றுமையை வளர்ப்போம்
மனித நேயங்களை காப்போம்
ஜாதி மத பேத்தம் -இல்லாத
இந்தியர்கள் -என உலகிற்கு உணர்த்துவோம்
**********************************

மழை
உதடுகளோ இதழ் விரிக்க
பற்களோ ஒளி வீச -உன்
புன்னகையில் மயங்கிய
மழை துளிகளோ -உன்
அங்கமெல்லாம் அபிசேகித்து
உண்னை ஆரதிகின்றதோ
தம் அன்பால் நீ மனம் குளிர

***************************
பெண்னே
என்னமெல்லாம் யோசிக்க
உன் -புன்னகையோ சுவாசிக்க
பார்வையோ காந்தமாய் சுண்டி இழுக்க

பெண்ணே -எங்கிருந்துதான் பிறக்கிறதோ
உங்கள் முகங்களில் மட்டும்
வசீகரமாய் ஓர் புன்னகையும்
கண்களுக்கு என்ற பிரகாச ஒளியும்

பார்ப்போர் கெல்லாம் உன்னுள் உலகம்
மட்டுமே உலகம் இயங்குவதாய் -ஓர்
பிரமிப்பு ஏற்படுவது ஏணோ ?
*************************

கடல்
கடலலை கண்டு காதலிபவரை -விட
கடலை போட்டு காதலிபவர்கள் -தான்
அங்கு திரளாக திரை மறைவாய்
தில்லாலன்கடி வேலை நடதுகிண்டிரானறோ
அதனாலோ கடல் அன்னை -எப்போதும்
பொங்கி பொங்கி கண்ணீர் விடுகிறாளோ
***********************************
கடல்
கடல் எனும் இயற்கையை ரசிக்க
கண்களோ வேண்டும் ஆயிரம்

அதை ரசிக்க ரசிக்க இன்பம்தான்
துன்பம்மெனும் பேச்சுக்கு இடமில்லை

மனம் குளிர்ந்து மாசு கறைந்து
இதயமோ சந்தோசித்து
உடலோ லேசாகி இறக்கை கட்டி
பறக்க தோன்றும் விண்ணை தொட
தொடுவானம் என்பது
தொட்டுவிடும் தூரம்தான் -என்று
*******************************

கடல்
கடலை காதலிக்க
கள்ளமில்ல மனம் வேண்டும்

கவிபாடும் குணம் வேண்டும்
காத்திருக்கும் திறன் வேண்டும்

காலம் கடந்து போனாலும் -நம்
உருவம் மாறி போனாலும்

என்றும் மாறாது இளமையான
கடலை எப்போதும் காதலித்து
ரசிக்கும் மனம் வேண்டும்

இறபெனும் இறுதியில் -இடுகாட்டில்
புதையுண்டு மக்கிபோகாது -நான்
நேசிக்கும் கடலையே தம் ஜீவனாக
சுவாசித்து வாழும் உயிர்களுக்கு
உனவாக ஆசை ஆசை -என்
அன்புக்கடலில் சங்கமித்து கலக்க
எபோதும் ஆசை ஆசை
***********************************

இறப்பு

அன்பாய் பாசமாய் உயிராய்
கலந்து வளர்ந்த ஓர் -உயிர்
மரணம் எனும் அமைதியை தழுவினாலும்

அவ் உயிரோடு கலந்து பழகிய -மனங்களோ
அவ் இழப்பை தாங்காது கலங்கி விடுகின்றன -இனி
இந்த ஜீவன் நம்மோடு இல்லை -என

பிறப்பிலிருந்து அந் நிமிடம்வரை அவ் -உயிர்
தம்முடன் வாழ்ந்த நிலைகளை சொல்லி சொல்லி
மனம் உடைந்து கதறும் போதோ பார்ப்போர் கண்களில் -இருந்து
ஒரு சொட்டு கண்ணீராவது வாராமல் போகாது

நல்லவரோ கேட்டாவரோ இறந்த பின்
எல்லோரும் இறைவனுக்கு சமம்
அவரை மன்னிபதோ மனித இயல்பு
***********************************
பிரேம் கணேஷ் (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

பெரியசாமி செல்வி தம்பதியரின்
சந்தோஷ சங்கமத்தின் தாம்பத்தியம் -அதுவில்
சந்தோமெ வாழ்க்கை - என்று -
நாளும் பொழுதும் கழிக்க

தலை வாசல்லின் செழிப்பை
தழைக்க வைக்க தலைமகனாய் -
ஈன் ரெடுத்தடுத்த மகவதுவும்
எல்லோரிடமும் அன்பும் பண்பும்
பாசமும் பொழிந்து நல் மகனாய் வாழ

எல்லாவற்றிலும் முதன்மையாய் திகள
பிரேம் கணேஷ் என நாமம் சூடி
அருமை பெருமையாய் வளர்த்து
இன்று தலைவாசலின்
தலை சிறந்த உயர்ந்த மனிதனாய் -வாழும்
பிரேம் கணேஷ் தம்பிக்கு -அக்காவின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
***********************************

முதல் இடை கடை நிலை வாழ்க்கை

முல்லை பூ சிரிப்பும்
முகிழ்ன் தெடுக்கும் மகிழ்சியும்
சூது வாது பொய் பிரட்டு -அறியாது
கள்ளமில்லா மனமும்
கபடரியாத முகமும்
பார்பதெல்லாம் பரவசமாய் -நினைத்து
புல்லரித்து புளங்காகிதம் அடைந்து
வறுமை செல்வம் எந்நிலையில் வாழ்த்திடினும்
சந்தோசம் மட்டுமெ அறியும்
பிள்ளை பருவம் முதல் நிலை -வாழ்க்கை

அரும்பு விடும் ஆசை மனமும்
அலைபாயும் எண்ணங்களும்
பார்ப்பது எல்லாம் கவர்சியாய்
கண் கவரும் அழகாய் தெரிய
கண்டதும் காதல் கொண்டது மோகம் -என
எதையும் சாதிக்க முடியும்
எப்படியும் வாழ்கையில் ஜெய்கலாம் -என்ற
ப[ருவ நிலையில் மனமும் முடித்து
மகிழ்சியாய் துன்பம் சோகம்
எல்லாம் கலந்து வாழும் வாழ்க்கை
இடை நிலை வாழ்க்கை

பிள்ளை பருவம் வாலிப பருவம்
இரண்டு நிலைகளிலும் வாழ்ந்த வாழ்கை
நிலைகளை நினைவலைகளில் நினைத்து பார்த்து
அலை அலையாய் மன நிலையில் வருசை படுத்தி

இனி முடிய போகும் நட்ட்களை எண்ணி எண்ணி
மனதில் வேதனை கொண்டு
பிரிவுக்கு தயா ராக தம்மை பக்குவபடுத்தும்
முதுமை வாழ்க்கையோ வாழ்வின் கடை நிலை

மனித வாழ்வின் முக்கியமே
இன் முன் நிலை வாழ்க்கைதான்
**********************************

கருத்துகள் இல்லை: