வெள்ளி, 2 ஜூலை, 2010

நந்தவனம்

நந்தவனம் உங்களின் ......
சொந்தவனம் வந்து செல்ல .....
இது -ஓரு புதுமை நிரம்பியா .....
பூக்களும் வித்தியாசமான நறுமணங்களும் .....
நிரம்பிய பூங்காவனம் இது .....

வண்ண வண்ண மலர்களும் ......(உறுபினர்களும் )
(அவர்களின் ) அவற்றின் வித விதமான ....
அறிவு எனும் வாசனையுடன் ...
மகிழ்சியை பொங்க வைக்கும் ...............
புதுவனம் இது புது வனம் ......

நக்கலும் நையாண்டியுமாய் .....
வியப்பும் ஆச்சரியமும் ....
அன்பும் அரவணைப்பும் .......
ஆத்திரங்களையும் ஆதரவையும் ....
கொட்டி மகிழும் -ஓரு ....
மகிழ்சிவனம் இது மகிழ்சிவனம் ......

வாருங்கள் நண்பர்கள்களே ....
வந்து இந்த வனத்தின் ......
தோட்டத்தில் நீங்களும் -உங்களை .....
புது மலர்களாக பதியமிட்டு சேருங்கள் .....

தீது மனம் படைத்தோரும் .......
தீய குணங்கள் உடையோரும் கூட .....
இங்கு உறுபினர்கள் -ஆனால் ...............
நல்ல மலர்களோடு சேர்ந்து .........
நீரும் மனம் கமழும் மலராகலாம் ......

பூவோடு சேர்ந்து நாறும் மணக்குமாம் ....
நந்தவனத்தில் பூக்கும் ( சேரும் )-நீங்களும் ....
நறுமணம் வீசி நாட்டில் .....
நற்பெயரை எடுதிடலாம் .....

வந்தனம் வந்தனம் -எல்லோரும் ....
எங்கள் நந்தவனத்திற்கு வந்தனம்

**************************************************************

வெட்டி மொக்கையும் (ஜாலி நம்பெர்ச்சும் )

வாங்க வாங்க எல்லோரும் -இங்கு ...
ஜாலியா வாங்க வாங்க ......
மனமார மனம் விட்டு பேசி ....
காற்றாய் தழுவும் சிரிப்பும் ....
கடலாய் பொங்கும் நண்பர்களின் அரட்டையுமாய் ......
வெட்டி மொக்கையின் அரட்டை .....
ஜோதியில் கலந்து சந்தோசம் பெற்றிடவே .....

வெட்டி மொக்கை என்றதும் ....
வெத்து வேட்டுகள் பேசும் .....
வெட்டி அரங்கம் என்று நிணைகாதீர் நன்பர்களே...

சின்ன சின்ன வார்த்தைகளையும் ...
வெட்டி வெட்டி பேசி ...
வெட்கத்துடன் சிரிக்க வைக்கும்.....
நண்பர்களும் இங்கு உண்டு ......

சின்ன சின்ன விஷங்களையும் .....
பட்டி மன்றன் போட்டு .....
பகுதி பகுதியாக பிரித்து .....
நகைசுவையாக சிந்தித்து ....
சிரிக்க வைக்கும் நண்பர்களும் இங்கு உண்டு ....

பஞ்சாயத்து கூட்ட மென்று ...
எல்லோரையும் வரவழைத்து ......
யாரையாவது மாட்ட வைத்து ......
ரவுண்டு கட்டி நகை சுவை அம்புகளால் .....
துளைத்து அலற்வைத்து .......
பட்டை கிளப்பும் நண்பர்களும் இங்கு உண்டு ....

சொல்ல சொல்ல என்னால் ...
சொல்லவும் முடியலை .....
சொல்லாமல் இருக்கவும் முடியலை ....

ஜாலியா இங்கு எல்லோரும் வாங்க வாங்க ....
நல்லா சிரிங்க சிரிங்க .....
டாக்டர் காசை மிட்ச படுத்துங்க ......

*****************************************************************
மனதை திருடி விட்டாய்

மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........

சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

*********************************************************************

ஊமை விழிகள்

தங்க நிலவாய் ஜொலித்து ...................
தத்தி தத்தி நடந்து வந்த .....
ஓரு வயது சிறுமியின் ......
அன்ன நடையை ரசித்த போது //// ......


தாவி வந்து அள்ளினால் -தாயோ .....
குழந்தை அது சினுங்கிடவோ .....
சிரித்தபடி குழந்தையை மார்போடு ....
அணைத்து தட்டி தந்தாள் அன்னையவள் .....

உற்று பார்கையிலே.....
உள்ளம் நடுங்கி போனேனே ......
ஐயோ கடவுளே-இது ....
என்ன வேதனை என்று ....

கருவறையின் இருட்டில் இருந்து ....
ஈரைந்து மாதம் கழித்து ....
பூமியை காணவரும் சிசுகளோ .....
கொட்ட கொட்ட முழிதிருக்குமே ......
பொல்லாத உலகை காணும் ஆவலில் .....

அனால் -இக் குழந்தையோ .....
இருட்டில் இருந்து இருட்டையே...
பார்த்து பார்த்து வாழ பிறந்து இருக்கிறதே .....

தாமரை மலரில் கருவண்டாய் ......
விழிபார்வை நீந்தும் இடத்தில .......
வெள்ளிநிலவாய் மின்னியதும் ..... ......
ஊமைவிழிகளாய் இருந்ததும் கொடுமை .....

கண்டிட்ட என் விழிகளிலோ ....
கண்ணீர் ஊட்ரெடுக்க.....
பிறவி ஊமை கை கால் ஊனம் என்றால் .....
உலகை கண்டிடலாம் .....
கண் இல்லாதோரோ மிக்க பாவம் ....

இவர்கள் ஒலியை உணரலாம் ....
ஒளியை உணர்ந்திட முடியாது ....
தம் இருட்டு உலகத்தில் ...
கேட்பவனவற்றை கற்பனை செய்து ....
தாமே உருவகபடுத்தி பார்த்திடும் கொடுமை -அவர்களுக்கு ....

ஆனால் -ஓரு சந்தோசம் ...
ஆரோக்கியமாய் பிறகும் .....
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை .....
தேவை இல்லை என்று ....
கள்ளிபாலையும் நெல் vithaigalaiyum ....
ஊற்றி கொலை செய்யும் பாதகர்கள் நடுவே ......
கண்ணிலா குழந்தையை கண்ணாய் ....
காக்கும் தாய் அவளின் அன்பை -நிணைத்து .....
உள்ளம் பூரித்து போனதுவே ......

சிசுகொலையின் போது உடன் இருக்கும் -பாவிகளே .....
விழி இருந்து ஊமையாய் நிற்கும் .....
கொலைகார கும்பலே .....
எத்தானை துயரம் நெஞ்சில் ....
பாரமாய் இருந்தும் .....

புன்னகையுடன் குழந்தையை ....
அரவனைத்த அந்த தாயை -பார்த்திட்டால் ....
உம் -நெஞ்சங்களில் ஆயிரம் ஆயிரம் ....
வேல் பாய்ந்து இருக்கும் ....
குற்ற உணர்சியால் உங்களுக்கு .....

இப்போதும் என் கண்ணுகுள்ளே ....
சுற்றி சுற்றி வரும் அந்த தாய் .....
எனக்கு தெய்வமாகவே தோன்றுகிறாள்...

********************************************************


கண்ணீரும் காதலும் ....


கண்ணீரால் காசுவரும் ......
காசுவந்தால் காதல் வரும் .....
காதல் வந்தால் கண்ணீர் வரும் ... .....

இரண்டிற்கும் என்ன ஒற்றுமை என்றால் .....
காதலால் சந்தோசமும் ....
காதல் தோல்வியின் வேதனையால் கண்ணீரும் .....
நிட்சயம் என்று தெரிந்தும் .....
ஏற்று கொளுவதுதான் மனிதனின் ......
நம்பிக்கை என்பதுதான்
காதலும் கண்ணீரும்
எல்லா உயிரனகளுகும் -உண்டு ..
இதில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் .....
என்ற வேறுபாடு கிடையாது

*******************************************************
நட்புக்காக

நிலவே மெதுவாக செல் ....
அழகான பறவையே சத்தத்தை குறை ....
இதயமே மெதுவாக துடிதிடு ... ....
என் நட்பு தூங்க போகிறது ......

இது கவிதைக்கு அழகுதான் -ஆனால் .....
நிலவு ஓடுவது பொய் ....
பறவைகளின் சத்தம் காதுக்கு இனிமை .....
இதயமோ மெதுவாக துடித்தால் ....
உயிர் போய்விடும் நண்பருக்கு தெரியாமல் ...

காதலுக்கும் கண் இல்லை .....
கவிதைக்கும் உண்மையில்லை இல்லை .....
நட்புக்கும் நம்பிக்கையில்லை ....
நான் சொல்லுவதும் உண்மையில்லை ....

திட்டாதீங்க நன்பர்களே ஓரு நண்பர் அனுப்பியதற்கு இந்த பதில் ....

*******************************************************************
அம்மாவும் மணைவியும்

பெற்ற மகவது அழுதாலோ ....
தாய் தாங்க மாட்டாள் ....
கண்ணீரை துடைத்திடுவாள் ....
அன்பால் குறையை போக்கிடுவாள் .....

கணவனுக்கு கஷ்டம் வரும் -என ....
அறிந்தாலே மணைவியவள் துடித்திடுவாள் .....
அதை தடுத்து காத்திடுவாள் .....
உயிருடன் உயிராய் கலந்த அன்பால் .....

தாய் எனும் உறவு பாதியில் ....
அளவுகோலாய் நின்றுவிடும் .....
அதன் -முடிவில் மணைவி எனும் .....
பந்தம் தொடங்கி இறுதிவரை தொடரும் ....

தாய் எனும் உறவு கோவில் .....
மணைவி எனும் உறவு கற்பகிரகம் ......
இரண்டுமே உயிர்தெழுந்து ...
உயிர் போகும் வரை மனிதனின் ....
நன்மை தீமைகளில் ப்ங்கெடுத்து ....
துன்பத்தையும் சந்தோசத்தையும் பகிர்த்து கொள்வான .....

***********************************************************


தாம்பத்யம் ஓரு சங்கீதம் .......

திருமணத்தில் பிணைக்கபட்ட ......
கைகளும் மனங்களும் -பிரியாது .....
ஈருடலும் ஓர் உடலுமாய் இருபதுவோ ....
இருவர் மட்டுமே ஆனந்தமாய் .....
அன்பு படகில் பயணிக்கும் போது மட்டுமே......

தமகென்று ஓர் உயிர் உதித்ததுமே ......
இரு மனங்களிலும் எண்ணங்கள் பல பல ....
அவ்உயிர் உதித்து பூமியை தொட்டதும் ....
திட்டங்கள் உதிபதுவோ பல பல ....

பெண்ணாக பிறந்து விட்டால் .....
இதுதானோ என்ற சலிப்பும் உண்டு .....
இருமனங்களிலும் வெவ்வேறு .......
கவலைகளும் தோன்றுதல் உண்டு .....
லேசான விரிசலும் உருவாகும் மனங்களில் .....

பெற்றதுவோ நன்மக்களாக இருந்தால் ....
பாராட்டும் பெற்றிட்டால் -ணம் ....
மக்கள் என்று பெருமை பேசும் .....
இருமனங்களும் எப்போதும் .....

விதியால் மதிமாறி .-தறிகெட்ட ....
தறுதலை வாரிசுகளாய் ....
பலர் வாயில் விளுந்திட்டாலே ....
என்னடி பெற்றாய் குழந்தை -என்று ....
கணவன் மணைவியை திட்டுதலும் ....
உண் -ரத்தம் உன்போல்தான் இருக்குமென்று ....
மணைவி கணவனை திட்டுதலும் .....
மீண்டும் லேசன விரிசல் இரு மனங்களிலும் ....

மெல்ல மெல்ல இருவரின் குறைகளும் ....
வரிவரியாய் வாசிக்கப்படும் குற்றங்கலாய் ........
இங்கு அதிகரிக்கும் மனங்களில் விரிசலும் ....

எப்படியோ அடித்து பிடித்து ....
பெற்றதற்கு திருமணம் செய்விக்க .......
போலியாய் மீண்டும் அன்பு தம்பதியராய் .....
வலம் வந்து மனம் முடித்துவைத்து .....
அடுத்து இருமனங்களின் அன்பு விரிசலுக்கு வித்திட்டு .....

தம -பிறப்பின் தாம்பத்திய பந்தத்தின் ........
கடன் தீர்த்த சந்தோஷத்தில் .....
பலவருடங்கள் கழித்து .....
மனம் விட்டு பேசும் இரு மனங்களும் ....
நம் கட்டைகள் காடு சேரும்வரை ....
இனி ஒருவருக்கு ஒருவர் துணை -என்று .....
முதல் கட்ட அன்பிற்கு ..மாறுவதே.....
தாம்பத்தியம் ஓரு சங்கீதம் .....
*********************************************************************


காணலாம்

ஜோதி எனும் நிலையில் ...... (jothi velissam )jothi yaar endru keatkaatheergal
ஒளியை காணலாம் ......

இருள் எனும் நிலையில் ....
கருமையை காணலாம் ....

உண்மை எனும் நிலையில் .....
சுய ரூபத்தை காணலாம் ....

மனம் எனும் நிலையில் ....
மனிதரை காணலாம் ......

உயிர் எனும் நிலையில் .....
உறவை காணலாம் ....

நட்பு எனும் நிலையில் ....
நன்மை தீமைகளை காணலாம் ....

**************************************************************

நமக்கு உண்டு (கிடைக்கும் )

மரம் என்று இருந்தால் ....
நிழல் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

மனம் ஒன்று இருந்தால் .....
அன்பு உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

பாசம் என்று இருந்தால் .......
பந்தம் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

அறிவு என்று இருந்தால் .....
அணைத்தும் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

ஆசை என்று இருந்தால் (பே(ராசை )
அழிவு உண்டு நமக்கு ....(கிடைக்கும்

***********************************************


இளமையும் முதுமையும்

இளமை என்பதும் ....
முதுமை என்பதும் ....
உருவத்திற்கு கிடையாது ...
ஐயா உருவத்திற்கு கிடையாது ....

மனதிற்கும் உண்டு ....
நினைவிற்கும் உண்டு ....
இளமை என்பது எபோதும் ...
ஐயா இளமை என்பது எபோதும் ......

நிணைவுகளை பகிர்ந்து விட்டால் ....
காலத்தில் தொடரும் எபோதும் ....
நம் -சந்ததி வழிதன்னில் .....
ஐயா -நம் -சந்ததி வழிதன்னில் .....

மனமும் நிணைவும் ......
காலத்தில் தொடருவதே .......
முதுமையாகிறது ......
ஐயா முதுமையாகிறது .....

வயதிற்கும் உண்டு ....
பார்வைக்கும் உண்டு .....
முதுமை என்பதுவும் .....
இளமை என்பதுவும் ......
ஐயா மனதிற்கு கிடையாதே .....
.ஐயா மனதிற்கு கிடையாதே .....
**************

கருத்துகள் இல்லை: