வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithaigal

நீயும், அவளும்

நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்



இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை

*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி

காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/

***************************************************


கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !

பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !

*******************************************************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 5:17 am 0 கருத்துரைகள்
புதன், 16 ஜூன், 2010
இமைகள்

மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?

********************************************
ரோஜா

இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு

இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்

இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது

*****************************************

விழிகள்

அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?

உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?

பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே

எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்

*********************************************

அவளுடைய கண்கள்

கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!

*******************************************

கருத்துகள் இல்லை: