சனி, 3 ஜூலை, 2010

puthukavithai

சோறு

கம்பங்கூலும் ராகிகளியும் .....
தினம் உன்ன கிடைபதுவோ ......
அரிதானபோது -அம்மா ,........
தந்தாள் அரிசி சோறு ,,,,,,
ஆசையாய் தின்னோம் ..........
அப்பாவும் நானும் ......
எப்படி கிடைததென கேட்டதற்க்கோ .....
என் -காலத்தில் ஓரு நாளோ .....
உங்களுக்கு அரிசி சோறு தர ஆசை ......
என் இரத்தத்தை தானமாக -.....
தந்தேன் என்றதும் - ......
அம்மாவின் பாசத்தில் ......
கண்களில் வழிந்ததோ .....
எங்களுக்கு இரத்தகண்ணீர் .....
*************************************************************

கொக்கு

ஓடுமீன் ஓட -உறுமீன் .......
வரும்வரை காத்திருந்த .....
கொக்காக நான் -இருக்க .....
வாகனத்துடன் -நீயோ ....
கிடைகுமிடமெல்லாம் படரும் .....
கொடியாய் யாருடனோ ......
பறக்கிராயே வாகனத்தில் ..........
பெண்ணே இது சரியோ .......
***************************************************
பாரி
முல்லைக்கு தேர்தந்தான் .....
வள்ளல் பாரி -அன்று ......
மாண்ட்களுக்கு கல்வி தருகிறாரோ .......
பேராசிரியர் பாரி -இன்று ....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......
அபபாரி போல் இப்பாரியும் ......
பார் போட்ற வாழ வாழ்த்துக்கள் .....

*******************************************
வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....

பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்

******************************************************
முடிவிலியின் உண்மை
..
நாமமோ சங்கராம் .....
பொறிக்க பிறந்த .....
பொறியாளராம் அயல்நாட்டில் ....
கவிதைகள் பிடிக்குமாம் .....
மத பற்றும் உடையவராம் ....
மழை பிடிக்குமாம் ......
மழை காலத்தில் குளிருக்கு .....
இதமாய் புகைபிடிக்க பிடிக்குமாம் ....
வாகனத்தை ஒட்டிட போட்டி பிடிக்குமாம் ...
அழகான பெண்களை பிடிக்குமாம் .....
இல்லாவிட்டால் துறவி என்பாரோ .....
இது இயற்ர்கைதானே தோழா ...
ஆளில்லா நகரத்தில் -இரவின் ......
நீண்ட சாலை பிடிக்குமாம் .....
இன்னும் எத்தனையோ பிடித்தவைகள் ......
சொல்லி மாளலையோ பிடித்தவைகள் .....
பிடித்தவைகளுக்கு முற்று வைத்தால் ....
எல்லாம் முடிந்தவையே .....
முடிவிலியின் முடிவில்லா பிடித்தவைகள் .....
எல்லாம் கிடைத்திட ......
இரையே நீ அருள்வாயாக
*********************************************
இதயம் (1)
என்னை குடிவைத்த -இதயமே ....
பணம் எனும் பேராசையால் .....
மதிமயங்கி -நீ -வேறு ......
குடிவைக்க நினைக்கலாமோ ......

இதயம் (2)
உன் -இதயமென்ன .......
திறந்தவெளி பெட்டகமோ ....
யாரும் வரலாம் ......
யாரும் போலாம் -என்பதற்கு ....
அதற்க்கு பூட்டு கிடையாதோ
***********************************************

ஓ நல்ல தம்பி பாலாஜிக்கு (லாஜீ )
ஓ தம்பி பாலாஜி........
தினம் தினம் வரும் .....
புது புது நட்புக்கள் -என்னை ......
பற்றி கேட்டிடவே....
பதில் சொல்லி சொல்லி .....
என் -விரலும் தேய்கிறதே ......
மனதும் சோர்வுருகிறதே......
சொன்னதையே திருப்பி சொல்ல ...

அதனாலே பதிந்திட்டேன் ......
சுய விவரமதை - நண்பர்களுக்காக ......
இப்போதும் சொல்லுகிறேன் -நான் ......
எழுதுவது கவிதையில்லை என்று .....

ஓரு குறிப்பிட்ட கருத்துக்களை ......
கருவாக தருகின்றேன் .....
சிலரோ -கவிதையென் பாராட்டி ......
தொடரட்டும் பணி என்பதால் .....
விடாது முயற்சிக்கிறேன் .....
கவிதை எனும் எல்லை தொட ...

வெளிநாட்டு நண்பர்கள் பலரும் ......
என் கவிதையை ஊக்குவிக்க .....
நாம் எழுதுவது கவிதையென் ......
நானும் தினம் தொடருகிறேன் ......

என் சுய விளக்கம் எல்லாமே ....
தினம் பதில் சொல்லுவதை தவிர்த்திடவே........
வருகின்ற புது நட்புக்கள் ......
இங்கு வந்து படித்திடவே ....

கவிதை எழுதுவதில்-இன்னும் ......
நான் -மழலையை தாண்டலையே........
நீர் எல்லோரும் பாராட்டிட ......
பேசி நானும் காட்டிடுவேன் .......
என்னால் முடியும்மென்ற .-முடிவுடனே ........

ஆழமாய் அன்பாய் என்னிடம் .....
தவறு கண்டால் கட்டாயம் ......
சுட்டி காட்டவும் எல்லோரும் .....
ரசிகன் என்றாலும் ......
சகோதரன் என்றாயே .......
கடவுளுக்கும் நன்றி சொல்வேன் .....
தம்பி உண்னை தந்ததற்கு
***********************************************
ஊமை
காதல் வார்த்தைதனை -சொல்லி .......
ஏழை என்ற காரணத்தால் .......
பஞ்சு எனை நெருப்பாய் ......
நீ தீண்டியதால் ......
கற்பிழந்து களங்கபட்டேன் .........

ஊமையாய் இருந்ததாலே.........
ஊரறிய உண்னை சொல்லலையே .....
மாணமது போனதென்று .. ....
மறிந்து விட்டோர் என் பெற்றோரே .....

குற்றமது உன்னை கொல்ல .......
தலை குனித்து போனயே ....
பெற்ற மகவது இறந்திடவே ...
என்னை தேடி வந்தாயே ...

என் -மகவு உனதென்றும்.......
உற்றவன் நான்னென்றும் ......
ஊரறிய உரைதாயே .....

உன் -குலவிளக்கு பிறந்திடவே ....
இனி -வழியில்லை என்றதுவும் ....

பாரதியின் புதுமை பெண்ணாய் ....
உனை -தெரியாதென உறைதேனே .......
தேவைக்கு தேன் குடிக்கும் ........
வண்டானால் -நீ ......
கஸ்தூரி மானாய் நானிருப்பேன் ......
ஊமையாய் இருந்தாலும் ......
மானமாய் வாழ்ந்திடுவேன் ....
மானம் கெட்ட உனை நானோ .....
என் மகவுக்கு தந்தை -என .....
எப்போதும் உரைக்க மாட்டேன்

*******************************************

-------------------------------------------------------


வருந்திகிறேன் தோழி
எழில் ஓவியமே ....
ஏழை வீட்டு காவியமே .....
உன் -முகத்தின் வாட்டம் ......
வறுமையின் சுவடோ -இல்லை ......
வயல் வேலையின் கழைப்போ .......

நிலா ஸோரு உண்டதுண்டா -நீ .......
பாய் போட்டு படுத்ததுண்ட -நீ ......
பாயாசம் சாபிட்டதுன்டா -நீ ........

அக்கம் பக்கம் வீடுகளில் ......
அரட்டையும் அடிததுண்டா -நீ .......

விடியலில் எளுகின்றாய் ......
விடிவெள்ளியாய் மறைகின்றாய் ........
தோட்டத்தில் இருக்கின்றாய் .......
செக்கு மாடாய் உளைகின்றாய் .......
கலைபாரி பார்த்ததில்லை -உன்னை ....

காரியத்தில் கண்ணானவள் -நீ ....
உன் -அப்பன் ஆயி சந்தோசிக்க ...
சுமை தாங்கியாய் நீ -இருந்தாய் .....
வேலை வெட்டி செய்யாது .......
உன் உழைப்பை உறிஞ்சி -தின்னும் .....
கெட்ட குணம் பிடிகலையே.......

ஆதவன் மறையும் -நேரத்தில் ......
அந்தி மலராய் நீ வருவாய் .......
குடிசைக்குள் நீ நுழைந்து .......
கூழ் குடித்து பசியாறி .......
வேர் அருந்த மரமாய் -நீ ......
கட்டான் தரையில் உறங்கிடுவாய் .....

எப்போது விடிவு -உனக்கு .....
.மணம்மெனும் மத்தாப்பால் .......
நீ -சிரிக்கும் சிரிப்பு வருமோ ......
தோழி நான் வருந்துகிறேன் .........
உன் -நிலைமை எண்ணி எண்ணி .
****************************************************

கருத்துகள் இல்லை: